பிராட் பிட்
வில்லியம் பிராட்லி பிட் (William Bradley Pitt பிறப்பு: திசம்பர் 18,1963) ஓர் அமெரிக்க நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு அகாதமி விருதுகள், இரண்டு பிரித்தானிய அகாதமி திரைப்பட விருதுகள், இரு கோல்டன் குளோப் விருதுகள் ,ஒரு பிரைம் டைம் எம்மி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்களில் ஒருவரான பிட், 2006 முதல் 2008 வரை ஃபோர்ப்ஸின் வருடாந்திர பிரபலங்கள் 100 பட்டியலிலும் 2007 இல் டைம் 100 பட்டியலிலும் இடம் பெற்றார்.
பிராட் பிட் | |
---|---|
இயற் பெயர் | வில்லியம் பிராட்லி பிராட் பிட் |
பிறப்பு | திசம்பர் 18, 1963 சாவ்னி ஒகிலகோமா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1987 முதல் இன்றுவரை |
துணைவர் | செனிபர் ஆனிசுடன் (2000–2005) |
வீட்டுத் துணைவர்(கள்) | ஏஞ்சலினா சூலி (2005– இன்றுவரை) |
ரிட்லி சுகாட்டின் தெல்மா & லூயிசில் (1991) ஆயன் இரவுப் பயணியாக நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட் (A River Runs Through It) என்ற நாடகத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த பிட், திகில் திரைப்படமான இன்டர்வியூ வித் தி வாம்பயர் (1994) மற்றும் குற்றத் திகில் திரைப்படமான செவன் (1995) போன்ற படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்தார். இசுட்டீவன் சோடர்பர்க்கின் ஓஷன் 'ஸ் லெவன் (2001) என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. வரலாற்றுக் காவியமான திராய் (2004), காதல் குற்றத் திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் (2005), திகில் திரைப்படமான வேர்ல்டு வார் இசட் (2013) மற்றும் அதிரடித் திரைப்படமான புல்லட் ரயில் (2022) போன்ற வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுவில்லியம் பிராட்லி பிட், திசம்பர் 18,1963 இல் ஓக்லஹோமாவின் சானியில் ஒரு மலையேறும் நிறுவனத்தின் உரிமையாளரான வில்லியம் ஆல்வின் பிட் மற்றும் பள்ளி ஆலோசகர் ஜேன் எட்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] பின்னர் இவரதுகுடும்பம், மிசோரியின் ஸ்பிரிங்ஃபீல்டுக்குக் குடிபெயர்ந்தது, அங்கு இவர் தனது இளைய உடன்பிறப்புகள் டக்ளஸ் பிட் (பி. 1966) ,ஜூலி (நீ பிட் நீல் (பி. 1969) ஆகியோருடன் வசித்து வந்தார்.[2] ஒரு பழமைவாத கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த இவர், தெற்கு பாப்டிஸ்டாக வளர்க்கப்பட்டார், பின்னர் "அஞ்ஞானத்திற்கும் நாத்திகத்திற்குமான எண்ணத்தினால் தடுமாறினார்".[3][4][5] பிட் ஸ்பிரிங்ஃபீல்டை "மார்க் ட்வைன் நாடு, ஜெஸ்ஸி ஜேம்ஸ் நாடு" என்று விவரித்துள்ளார், "நிறைய மலைகள், நிறைய ஏரிகளுடன் இருக்குமிடத்தில்" வளர்ந்துள்ளார்.[6]
தொழில் வாழ்க்கை
தொகுஆரம்ப காலங்களில்
தொகுலாஸ் ஏஞ்சல்ஸில் பிட், நடிப்புப் பயிற்சியாளர் ராய் லண்டனிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டார்.[7][8] 1987 ஆம் ஆண்டில் நோ வே அவுட் (1987), நோ மேன்ஸ் லேண்ட் (1987), லெஸ் தின் ஜீரோ (1987) ஆகிய படங்களில் பெயர் குறிப்பிடப்படாத கதாப்பாத்திரங்களுடன் இவரது நடிப்பு வாழ்க்கை தொடங்கியது.[7][9] மே 1987 இல், இவர் என். பி. சி சோப் ஓபரா அனதர் வேர்ல்டில் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[10] அதே ஆண்டு நவம்பரில், பிட் சிபிஎஸ் சிட்காம் டிரையல் அண்ட் எரர் மற்றும் ஏபிசி சிட்காம் கிரோயிங் பெயின்ஸ் ஆகியவற்றில் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார்.[11][12][13] இவர் திசம்பர் 1987 மற்றும் பிப்ரவரி 1988 க்கு இடையில் சிபிஎஸ் முக்கியத் தொடரான டல்லாஸின் நான்கு அத்தியாயங்களில் சார்லி வேட்டின் காதலன் ராண்டியாகத் தோன்றினார்.[14]
விருதுகள்
தொகு- 8வது அகாதமி விருதுகள் (1995): சிறந்த துணை நடிகர், பரிந்துரை, 12 மங்கீஸ்
- 81வது அகாதமி விருதுகள் (2008): சிறந்த நடிகர், பரிந்துரை, தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (திரைப்படம்)
- 84வது அகாதமி விருதுகள் 2011: சிறந்த நடிகர், பரிந்துரை, மணிபால்
- 92வது அகாதமி விருதுகள் (2019): சிறந்த துணை நடிகர், வெற்றி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
மேற்கோள்கள்
தொகு- ↑ Bunbury, Stephanie (December 14, 2008). "The business of being Brad". Sydney Morning Herald இம் மூலத்தில் இருந்து June 3, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090603061437/http://www.smh.com.au/news/entertainment/film/the-business-of-being-brad/2008/12/13/1228585167094.html.
- ↑ Chris Mundy (December 1, 1994). "Slippin' around on the road with Brad Pitt". Rolling Stone.
- ↑ Blair, Leonardo (September 30, 2019). "Brad Pitt no longer identifies as atheist, says he was just being 'rebellious'" (in ஆங்கிலம்). The Christian Post. Archived from the original on October 4, 2019. பார்க்கப்பட்ட நாள் October 3, 2019.
- ↑ Blair, Leonardo (September 30, 2019). "Brad Pitt no longer identifies as atheist, says he was just being 'rebellious'" (in ஆங்கிலம்). The Christian Post. Archived from the original on October 4, 2019. பார்க்கப்பட்ட நாள் October 3, 2019.
- ↑ Baron, Zach (September 16, 2019). "Brad Pitt Is Still Searching". Archived from the original on April 9, 2020. பார்க்கப்பட்ட நாள் March 13, 2020.
- ↑ Stated on Inside the Actors Studio, 2012
- ↑ 7.0 7.1 "Brad Pitt Filmography, Biography". May 11, 2006. https://www.foxnews.com/story/brad-pitt-filmography-biography.
- ↑ Nudd, Tim (January 22, 2007). "Brad Pitt: 'Strippers Changed My Life'". People. Archived from the original on October 30, 2008. பார்க்கப்பட்ட நாள் October 14, 2008.
- ↑ "No Way Out". MovieClips. Archived from the original on June 1, 2013. பார்க்கப்பட்ட நாள் July 5, 2013.
- ↑ "Brad Pitt on Another World" பரணிடப்பட்டது பெப்பிரவரி 13, 2012 at the வந்தவழி இயந்திரம் , The Another World Home Page.
- ↑ Leszczak, Bob (May 16, 2016). Single Season Sitcoms of the 1980s: A Complete Guide. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781476623849. Archived from the original on December 27, 2020. பார்க்கப்பட்ட நாள் October 25, 2020.
- ↑ Irvin, Richard (2016). "Forgotten Laughs: An Episode Guide to 150 TV Sitcoms You Probably Never Saw". Archived from the original on January 17, 2024. பார்க்கப்பட்ட நாள் May 29, 2020.
- ↑ "Brad Pitt Biography". The Biography Channel. p. 1. Archived from the original on May 17, 2009. பார்க்கப்பட்ட நாள் May 20, 2009.
- ↑ "Would the real Brad Pitt please stand up?". September 28, 2008. http://scotlandonsunday.Scotsman.com/features/Would-the-real-Brad-Pitt.4535381.jp.