ஜாக்கி சான்

இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், பல் துறையாளர்


இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் 陳 (Chan).

ஜாக்கி சான்

Jackie Chan onboard the USS Kitty Hawk (CV-63) in 2002.
சீனப் பெயர் 成龍 (Traditional)
Chinese name 成龙 (Simplified)
Pinyin Chéng Lóng (மாண்டரின்)
Jyutping Sing4 Lung4 (Cantonese)
இயற்பெயர் சான் கொங் சாங்
陳港生 (பழமையானது)
陈港生 (எளிதாக்கப்பட்டது)
Chén Gǎng Shēng (மாண்டரின்)
Can4 Gong5 Sang1 (காந்தோனீசு)
வம்சம் லின்ஸீ, ஷான்டங், சீனா
மூலம் ஹாங்காங்
பிறப்பு 7 ஏப்ரல் 1954 (1954-04-07) (அகவை 69)
விக்டோரியா பீக், ஹாங்காங்
வேறு பெயர்(கள்) 房仕龍 (Fong Si Lung)
元樓 (Yuen Lou)
பணி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சண்டைப் பயிற்சியாளர், பாடகர்
Genre(s) Cantopop
Mandopop
Hong Kong English pop
J-pop
Years active 1962 முதல் தற்போது வரை
வாழ்க்கைத் துணை(கள்) Lin Feng-Jiao (1982 முதல் தற்போது வரை)
பிள்ளைகள் ஜேசீ சான் (பிறப்பு-1982)
பெற்றோர் சார்லஸ் மற்றும் லீ-லீ சான்
Influences ப்ரூஸ் லீ
பஸ்டர் கீடன்
ஹெரால்ட் லாயிட்
Jim Donahue
சக் நாரிஸ்
இணையத்தளம் www.jackiechan.com
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

ஜாக்கி சான் (சீன மொழி: 成龍) (சில்வர் பஹூனியா ஸ்டார்), MBE (மோஸ்ட் எக்சலண்ட் ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பெரர்) [1] (சான் காங் சாங் , 陳港生; 7 ஏப்ரல், 1954) ஹாங் காங்[2] நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் ஆவார்.

அவரது திரைப்படங்களில் அவரது அக்ரோபாட்டிக் (கழைக்கூத்தாட்டம் போன்ற) சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலம். ஜாக்கி சான் 1970களிலிருந்து நடித்துவருகிறார். அவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜாக்கி சான் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸிலும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமிலும் நட்சத்திரங்களைப் பெற்றுள்ளார். ஜாக்கி சான் ஒரு கலாச்சார பிரதிநிதியாக பல்வேறு பாப் பாடல்கள், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளார். ஜாக்கி ஒரு கேண்ட்டூபாப் மற்றும் மேண்டூபாப் நட்சத்திரமும் ஆவார், இவர் பல ஆல்பங்களை வெளியிட்டதோடல்லாமல் இவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பல தீம் பாடல்களை இவரே பாடியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜாக்கி சான் 1954 இல் ஹாங் காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் (Victoria Peak) பிறந்தார், அவரது இயற்பெயர் சான் காங் சாங் ("ஹாங்காங்கில் பிறந்தவர்" என்பது இதன் பொருளாகும்) ஆகும். இவர் சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீலீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார். அவர் 12 பவுண்டு அல்லது 5,400 கிராம்கள் எடையுள்ள குழந்தையாக இருந்ததால், அவருக்கு பாவ் பாவ் (சீனம்: 炮炮 சாதரணமாக "பீரங்கிக் குண்டு" என்று பொருள்) என்ற செல்லப் பெயர் இருந்தது. அவருக்கு சூ-சங் சான் (Soo-Sung Chan) என்னும் ஒரு சகோதரரும் தாய் சான் (Tai Chan) என்றொரு சகோதரியும் இருக்கிறார்கள்.[3] அவருடைய பெற்றோர் ஹாங்காங்குக்கான பிரெஞ்சு தூதருக்காக பணிபுரிந்து கொண்டிருந்ததால், ஜாக்கி தனது வளரும் பருவத்தை விக்டோரியா பீக் மாவட்டத்திலிருந்த தூதரகப் பகுதிகளிலேயே கழித்தார்.[4]

ஜாக்கி நா-ஹ்வா ஹாங் காங்கின் ஐலாண்ட் (Hong Kong Island) மழலையர் பள்ளியில் படித்தார், அங்கு அவரது முதலாம் ஆண்டு படிப்பில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவருடைய பெற்றோர் அவரை பள்ளியை விட்டு நிறுத்திவிட்டனர். மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம். நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார்.[5] 1960 ஆம் ஆண்டு அவரது தந்தை அமெரிக்க தூதரகத்திற்கு தலைமை சமையல்காரராக பணிபுரிய ஆஸ்திரேலியாவின் கேன்பெராவுக்கு (Canberra) குடிபெயர்ந்தார். பின்னர் ஜாக்கி சீனா ட்ராமா அகாடமிக்கு அனுப்பப்பட்டார், அது பெக்கிங் ஓபெரா ஸ்கூல் ஆகும். அதை மாஸ்டர் யூ ஜிம் யுவேன் என்பவர் நடத்திவந்தார்.[4][6] சான் அடுத்த பத்தாண்டுகளில் அங்கு தற்காப்புக் கலைகளிலும் அக்ரோபாட்டிக்ஸிலும் கடுமையான பயிற்சி பெற்றார்.[7] அதனையடுத்து அவர் செவன் லிட்டில் ஃபார்ச்சுன்ஸ் என்னும் நாடகக் குழுவில் சேர்ந்தார். அது பள்ளியின் சிறந்த மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும், அது அவருடைய குருவுக்கு நாட்டில் யுவேன் லோ என்னும் திரைப் பெயரையும் வழங்கிய குழுவாகும். ஜாக்கி தனது சக குழு உறுப்பினர்களான சாம்மோ ஹங் மற்றும் யுவேன் பியோ ஆகியோருடன் நெருங்கிய நண்பரானார். அந்த மூவரும் பிற்காலத்தில் மூன்று சகோதரர்கள் அல்லது மூன்று ட்ரேகன்கள் என அறியப்பட்டனர்.[8]

ஜாக்கி தனது 8 வயதில், அவர்களின் "லிட்டில் ஃபார்ச்சுன்ஸ்" சகாக்கள் சிலருடன் பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார் (1962) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அந்தப் படத்தில் லி லி ஹுவா அவரது தாயாக நடித்தார். அதற்கடுத்த ஆண்டு லி யுடன் த லவ் எட்டெர்னே (1963) என்ற படத்திலும் ஜாக்கி நடித்தார். பின்னர் கிங் ஹூவின் 1966 ஆம் ஆண்டு திரைப்படமான கம் ட்ரிங்க் வித் மி என்னும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.[9] 1971 ஆம் ஆண்டு அ டச் ஆஃப் ஜென் எனும் மற்றொரு குங் ஃபூ திரைப்படம் ஒன்றில், ஜாக்கி கூடுதல் நடிகராக நடித்து ஓர் இளைஞஞாக திரைப்படத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், முதலில் சூ மூவின் க்ரேட் எர்த் ஃபில்ம் கம்பெனிக்காக பாடல் பாடினார்.[10] 17 வயதில், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டெர் த ட்ரேகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றினார், அப்போது அவரது திரைப்பெயர் சென் யுவேன் லாங் ஆகும்.[11] அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு லிட்டில் டைகர் ஆஃப் காண்டூன் என்னும் திரைப்படத்தில் நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது, அது 1973 இல் ஹாங் காங்கில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டது.[12] அவரது தொடக்க முயற்சிகளில் கண்ட வணிக ரீதியான தோல்வியினாலும் சிக்கல் நிறைந்த ஸ்டண்ட் பணியினாலும், 1975 ஆம் ஆண்டு ஜாக்கி ஆல் இன் த ஃபேமிலி என்னும் வயது வந்தோருக்கான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதுவரையில் அவர் நடித்து ஒரு சண்டைக்காட்சியோ ஸ்டண்ட் காட்சியோ ஒன்று கூட இல்லாத ஒரே திரைப்படம் அது மட்டுமே ஆகும்.[13]

1976 ஆம் ஆண்டில் ஜாக்கி கேன்பெராவில் தனது பெற்றோருடன் சேர்ந்தார், அங்கு சிறிது காலம் டிக்சன் கல்லூரியில் பயின்றார். அப்போது கட்டுமானப் பணியாளராகவும் பணிபுரிந்து வந்தார்.[14] அவரை ஜேக் என்னும் அவரது சக பணியாளர் தனது பிரிவில் சேர்த்துக்கொண்டார் அப்போது ஜாக்கிக்கு "லிட்டில் ஜாக்" என்று செல்லப் பெயர் கிடைத்தது. அதையே பின்னர் அவர் "ஜாக்கி" என்று சுருக்கி பின்னாளில் அவரது பெயரை ஜாக்கி சான் என்று மாற்றிக்கொண்டார், இன்றுவரை அதுவே நிலைத்திருக்கிறது.[15] மேலும், அவரது தந்தையின் உண்மையான குடும்பப் பெயர் ஃபோங் என்பதால், 90களின் இறுதியில், ஜாக்கி தனது சீனப் பெயரை ஃபோங் சீ லுங் என மாற்றிக்கொண்டார்.[15]

திரைப்படத்துறை வாழ்க்கை தொகு

தொடக்ககால சாதனைகள்: 1976–1979 தொகு

1976 ஆம் ஆண்டு ஜாக்கி சானுக்கு ஹாங் காங்கைச் சேர்ந்த வில்லி சான் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அவர் ஜாக்கி சானின் ஸ்டன்ட் பணிகளால் மிகவும் கவரப்பட்டிருந்தார். லோ வேய் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஜாக்கி சானுக்கு வில்லி சான் வழங்கினார். ஜாக்கி சானின் திறமைப் பணியை ஜான் ஹூ திரைப்படமான ஹேண்ட் ஆஃப் டெத்தில் (1976) லோ பார்த்திருந்தார். அவர் புரூஸ்லிக்கு பிறகு இவரை ஒரு மாதிரியாக்க திட்டமிட்டார். அதை நியூ ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி என்னும் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.[10] புரூஸ்லியைப் போன்ற ஒருவர் என்ற ஓர் பிம்பத்தை ஏற்படுத்த அவரது திரைப்பெயர் சிங் லூங் (சீனம்: 成龍, அதாவது "ட்ரேகனாக மாறு" என்று பொருள்படும்) என மாற்றப்பட்டது, புரூஸ்லியின் திரைப்பெயர் லீ சுங் லேங் (சீனம்: 李小龍, "லிட்டில் ட்ரேகன்" என்று பொருள்). புரூஸ்லியின் தற்காப்புக் கலைகள் பாணி சானுக்கு பழகாத காரணத்தால் அந்தப் படம் வெற்றியடையவில்லை. அந்தப் படம் தோல்வியடைந்த போதும், லோ வீ அதே போன்ற கருப்பொருள்களுடன் கூடிய பல திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தார். அவை வசூலில் ஓரளவு முன்னேற்றத்தையும் கண்டன.[16]

1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்னேக் இன் த ஈகிள்'ஸ் ஷேடோ என்ற திரைப்படமே அவருக்கு ஒரு சிறப்பான தொடக்கமாக இருந்தது, அதற்கு அடுத்து உடனடியாக ஓர் இரண்டு திரைப்பட ஒப்பந்தத்தின் கீழ் சீசனல் ஃபில்ம் கார்ப்பரேஷனில் சேர்ந்தார்.[17] இயக்குநர் யுவேன் வூ பிங்குடன் பணிபுரியும் போது ஜாக்கிக்கு சண்டைகளில் பணிபுரிவதற்கான பரிபூரண சுந்தந்திரம் கிடைத்தது. இந்தப்படம் நகைச்சுவை குங் ஃபூ திரைப்படம் என்னும் ஒரு வகையை உருவாக்கியது, மேலும் அது ஹாங் காங் ரசிகர்களுக்கு புதிய வகை ஒரு திரைப்படமாக இருந்தது.[18] பின்னர் ஜாக்கி ட்ரங்கென் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்தார், அதன் பிறகே அவர் வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடத் தொடங்கினார்.[19]

மீண்டும் ஜாக்கி லோ வீயின் ஸ்டுடியோவிற்குத் திரும்பியதும், லோ ட்ரங்கென் மாஸ்டர் திரைப்படத்திலிருந்த நகைச்சுவை அம்சத்தை மீண்டும் பயன்படுத்த நினைத்து ஹாஃப் அ லோஃப் ஆஃப் குங் ஃபூ மற்றும் ஸ்பிரிச்சுவல் குங் ஃபூ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.[15] அவர் த ஃபியர்லெஸ் ஹயானா என்னும் படத்தை இயக்கிய கென்னீத் சேங்குடன் இணைந்து இணை இயக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பையும் வழங்கினார். வில்லி சான் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது, லோ வேயுடன் இருப்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கச் சொல்லிச் சென்றார். ஃபியர்லெஸ் ஹயானா பார்ட் II படப்பிடிப்பின் போது ஜாக்கி தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இது தனது நடிகர் வில்லியாலேயே தன் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என்று லோ பழிக்கவும், ட்ரையட்ஸ் என்னும் குற்றக்குழுவைப் பயன்படுத்தி சானை பயமுறுத்தியதற்கும் காரணமானது. சக நடிகரும் இயக்குநருமான ஜிம்மி வாங் யூவின் தலையீட்டால் இந்தச் சிக்கல் தீர்ந்தது. அதன் பின்னர் ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டில் தொடர்ந்திருக்க வழிவகை ஏற்பட்டது.[20]

ஆக்ஷன் காமெடி வகையின் வெற்றி: 1980–1987 தொகு

வில்லி சான் ஜாக்கியின் சொந்த மேலாளராகவும் நண்பராகவும் ஆனார். அவர் 30 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஜாக்கியுடன் இருந்தார். 1980களின் பிற்பகுதியில் ஜாக்கி அமெரிக்க திரைப்படத் துறையில் நுழைந்ததிலிருந்து தொடங்கிய சானின் சர்வதேச தொழில் வாழ்க்கைக்கு காரணமாக இருந்தவர் வில்லி சானே ஆவார். 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த பேட்டில் க்ரீக் ப்ராவ்ல் என்ற திரைப்படமே அவரது முதல் ஹாலிவுட் திரைப்படமாகும். பின்னர் ஜாக்கி 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த த கேன்னன்பால் ரன் என்னும் திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். அப்படம் உலகளவில் 100 மில்லியன் டாலர்களை வசூலித்தது. பர்ட் ரெனால்ட்ஸ் போன்ற பெரிய அமெரிக்க நடிகர்களின் ரசிகர்கள் இவர் பக்கம் கவரப்படாதபோதும், ஜாக்கி அவரது திரைப்படங்களின் நன்றி நவிலல் காட்சிகளில் காண்பித்த திரைப்படப் படப்பிடிப்பின் காட்சிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் அதை அவர் தனது எதிர்காலத் திரைப்படங்கள் அனைத்திற்கும் பின்பற்றினார்.

1985 ஆம் ஆண்டு வெளிவந்த த ப்ரொடெக்டர் திரைப்படத்தின் வணிக ரீதியான தோல்விக்குப் பிறகு ஜாக்கி தற்காலிகமாக அமெரிக்க சந்தையில் நுழையும் தனது முயற்சிகளை நிறுத்தி வைத்து தனது கவனத்தை ஹாங் காங் படங்களில் செலுத்தினார்.[16]

ஹாங்க் காங்கிற்குத் திரும்பிய ஜாக்கியின் படங்கள் மிகப் பெரிய அளவிலான கிழக்காசிய ரசிகர்களைப் பெற்றன. அதில் பணம் கொழிக்கும் ஜப்பானிய சந்தையில் அவர் பெற்ற முந்தைய வெற்றிகளில் த யங் மாஸ்டர் (1980) மற்றும் ட்ரேகன் லார்டு (1982) ஆகிய படங்கள் அடங்கும். த யங் மாஸ்டர் திரைப்படமானது, புரூஸ் லீயின் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இதனால் ஜாக்கி ஹாங் காங் திரைப்படத் துறையின் டாப் ஸ்டாரானார்.

தனது ஓபெரா ஸ்கூல் நண்பர்களான சாம்மே ஹங் மற்றும் யுவேன் பையோ ஆகியோருடன் இணைந்து ஜாக்கி பல ஆக்ஷன் காமெடி திரைப்படங்களைத் தயாரித்தார். அவர்கள் மூவரும் ஒன்றாக 1983 ஆம் ஆண்டு ப்ராஜெக்ட் ஏ என்னும் திரைப்படத்தில் நடித்தனர், அப்படம் மூன்றாம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் டிசைன் விருதை வென்றது.[21] அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில், இந்த "மூன்று சகோதரர்கள்" வீல்ஸ் ஆன் மீல்ஸ் மற்றும் முதலில் வந்த லக்கி ஸ்டார்ஸ் முப்படைப்புத் திரைப்படங்களிலும் நடித்தனர்.[22][23] 1985 ஆம் ஆண்டில், ஜாக்கி தனது முதல் போலிஸ் ஸ்டோரி திரைப்படத்தைத் தயாரித்தார், அது அமெரிக்க பாதிப்பு நிறைந்த ஆக்ஷன் காமெடித் திரைப்படம் ஆகும். அதில் ஜாக்கி தனது சொந்த ஸ்டண்ட் பணிகளைச் செய்திருந்தார். 1986 ஆம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் அது "சிறந்த திரைப்படம்" என்ற பெயரைப் பெற்றது.[24] 1987 ஆம் ஆண்டில், ஆர்மர் ஆஃப் காட் என்னும் திரைப்படத்தில் "ஏஷியன் ஹாக்" என்னும் இண்டியானா ஜோன்ஸ்-போன்ற பாத்திரத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் இன்று வரையிலான உள்நாட்டு வசூல் சாதனை புரிந்த படமாக உள்ளது. அது 35 மில்லியன் ஹாங் காங் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது.[25]

மிகவும் பாராட்டப்பெற்ற தொடர்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் நுழைவு: 1988–1998 தொகு

1988 ஆம் ஆண்டு சாம்மோ ஹங்குடன் இணைந்து ஜாக்கி ட்ரேகன்ஸ் ஃபாரெவர் என்ற திரைப்படத்தில் நடித்தார், அதுவே இன்று வரை அவருடன் ஜாக்கி நடித்த கடைசித் திரைப்படமாகும். அது ஹங் கோரே யூன் என்பவருடன் இணைந்து இயக்கிய திரைப்படமாகும், அதில் யுவேன் வா வில்லனாக நடித்திருந்தார், இவர்கள் இருவருமே சீனா ட்ராமா அகாடமியின் பட்டதாரிகளாவர்.

1980களின் பிற்பகுதிகள் மற்றும் 90களின் முற்பகுதியில் ஜாக்கி போலிஸ் ஸ்டோரி 2 திரைப்படத்தில் தொடங்கி அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்தார், அந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டின் ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான விருதைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஆர்மர் ஆஃப் காட் II: ஆப்பரேஷன் கோண்டர் மற்றும் போலிஸ் ஸ்டோரி 3 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. போலிஸ் ஸ்டோரி 3 திரைப்படத்தின் மூலம் 1993 கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விழாவில் ஜாக்கி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 1994 ஆம் ஆண்டு ட்ரங்கன் மாஸ்டர் II திரைப்படத்தில் வோன் ஃபேய் ஹங் பாத்திரத்தில் தனது திறமையைக் காட்டினார், அப்படம் டைம் மேகஸினில் எப்போதும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது.[26] அடுத்த மற்றொரு தொடர்த் திரைப்படமான போலிஸ் ஸ்டோரி 4: ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக், ஜாக்கிக்கு பல விருதுகளையும் சிறந்த உள்நாட்டு வசூலையும் பெற்றுத் தந்தது, ஆனால் வெளிநாட்டு சந்தைகளில் அது அவ்வளவாக வெற்றிபெறவில்லை.[27] ஜாக்கி சான் 1990களில் தனது ஹாலிவுட் குறிக்கோள்களுடன் மீண்டும் எழுந்தார், ஆனால் எதிர்கால பாத்திரங்களில் வகைத் திரும்பல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முதலில் கிடைத்த சில வில்லன் பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை நிராகரித்தார். எடுத்துக்காட்டுக்கு, சில்வெஸ்டர் ஸ்டாலன் தனது டெமாலிஷன் மேன் என்னும் எதிர்காலம் சார்ந்த திரைப்படத்தில் சைமன் ஃபோனிக்ஸ் என்னும் வில்லன் பாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஜாக்கி மறுத்துவிட்டார். பின்னர் வெஸ்லி ஸ்னிப்ஸ் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.[28]

ஜாக்கி இறுதியாக 1995 ஆம் ஆண்டு வட அமெரிக்க சந்தையில் காலடி வைப்பதில் வெற்றிபெற்றார், அதற்கு ரம்பிள் இன் த ப்ரான்க்ஸ் என்னும் உலகளவில் வெளியிடப்பட்ட திரைப்படமே காரணமாக இருந்தது. அது அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது, ஆனால் அமெரிக்காவில் ஹாங் காங் திரைப்பட நட்சத்திரங்களுக்கு அது அபூர்வமாகும்.[29]ரம்பில் இன் த ப்ரான்க்ஸ் திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக 1996 ஆம் ஆண்டில் போலிஸ் ஸ்டோரி 3 அமெரிக்காவில் சூப்பர்காப் என்ற பெயரில் வெளியிடப்பட்டு, மொத்தம் 16,270,600 அமெரிக்க டாலர் வசூலை சாதித்தது. ஜாக்கி 1998 ஆம் ஆண்டு பட்டி காப்பின் ஆக்ஷன் காமெடித் திரைப்படமான ரஷ் ஹவரில் கிரிஸ் டக்கருடன் இணைந்து நடித்தார். அது அவரது முதல் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆனது,[30] அப்படம் அமெரிக்காவில் மட்டும் 130 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை புரிந்தது.[20] இதுவே ஹாலிவுட்டில் ஜாக்கி சானை நட்சத்திரமாக ஆக்கிய படமாகும். பிரபல ஸ்டன்ட் கலைஞராக, ஜாக்கி சான் ஜெஃப் யேங்குடன் சேர்ந்து, ஐ ஆம் ஜாக்கி சான் என்ற தனது சுயசரிதையை எழுதினார்.

திரைப்படமாக்கம்: 1999 முதல் தற்காலம் வரை தொகு

1998-ஆம் ஆண்டு ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டுக்கான அவரது கடைசி திரைப்படமான ஹூ ஆம் ஐ? படத்தை வெளியிட்டார். 1999-ஆம் ஆண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் கார்ஜியஸ் என்னும் சொந்த உறவுகளை மையமாக வைத்து அமைந்த ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படத்தைத் தயாரித்தார்.[31] பின்னர் சான் 2000-ஆவது ஆண்டில் ஜாக்கி சான் ஸ்டண்ட் மாஸ்டர் என்னும் ஒரு ப்ளேஸ்டேஷன் கேமை உருவாக்குவதில் உதவியாக இருந்தார். அதற்கு அவர் தனது குரல் பதிவுக்கும் மோஷன் கேப்ச்சர் என்னும் உடலசைவு தொழில்நுட்பத்திற்கும் உதவியுள்ளார்.[32]

2000-ஆவது ஆண்டில் ஷாங்காய் நூன் , 2001-ஆம் ஆண்டில் ரஷ் ஹவர் 2 மற்றும் 2003-ஆம் ஆண்டில் ஷாங்காய் நைட்ஸ் ஆகிய படங்கள் வெற்றியடைந்த போதும், ஹாலிவுட் திரைப்படத் துறையில் கிடைத்த குறைவான வகைப் பாத்திரங்கள் மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் குறைவான சுதந்திரம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் அதை வெறுத்துவிட்டார்.[33] 2003-ஆம் ஆண்டில் கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததற்கு பதில்வினையாக, ஜாக்கி சான் எம்பெரர் மல்டிமீடியா க்ரூப் (EMG) நிறுவனத்துடன் இணைந்து JCE மூவிஸ் லிமிட்டட் (ஜாக்கி சான் எம்பெரர் மூவிஸ் லிமிட்டெட்) என்னும் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.[20] அவரது ஆரம்பகால திரைப்படங்கள் சிறந்த நாடகத்தன்மை கொண்ட காட்சிகள் நிறைந்திருந்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. அதற்கான எடுத்துக்காட்டுகளாக நியூ போலிஸ் ஸ்டோரி (2004), த மித் (2005) மற்றும் ஹிட் திரைப்படமான ராப்-பி-ஹுட் (2006) ஆகியவற்றைக் கூறலாம்.[34][35][36]

ஜாக்கி அடுத்ததாக ரஷ் ஹவர் 3 திரைப்படத்தை 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்டார். அப்படம் 255 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.[37] இருப்பினும், ஹாங் காங்கில் அது சரியாக வெற்றிபெறவில்லை, தொடக்க வாரங்களில் அதன் வசூல் 3.5 மில்லியன் ஹாங் காங் டாலர்களாகவே இருந்தது.[38] த ஃபர்பிடன் கிங்டம் எனும் திரைப்படமே ஜாக்கி தனது சக சீன நடிகர் ஜெட் லீயுடன் சேர்ந்து பணிபுரிந்த முதல் படமாகும். அது 2007-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று நிறைவடைந்து 2008-ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியானது.[39][40] ட்ரீம் வொர்க்ஸின் அனிமேஷன் திரைப்படமான, குங் ஃபூ ஃபேண்டாவில் மாஸ்டர் மங்க்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அப்படம் 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது, அதில் ஜாக் ப்ளாக், டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் ஏஞ்சலீனா ஜோலி ஆகியோர் நடித்திருந்தனர்.[41] மேலும், வர இருந்த திரைப்படமான வூஷூவின் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்டனி ஸீட்டொவின் அறிவுரை உதவிக் குழுவில் உதவியாக இருப்பதற்காக கையெழுத்திட்டார். அப்போது அந்தப் படத்தின் முன் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் சாம்மோ ஹங் மற்றும் வாங் வெஞ்சீ ஆகியோர் தந்தை மகனாக நடிப்பதாக இருந்தது.[42]

2007-ஆம் ஆண்டு நவம்பரில் ஜாக்கி ஷிஞ்சுகு இன்சிடெண்ட் திரைப்படத்தில் இயக்குநர் டெராக் யீயுடன் பணிபுரிந்தார், அதில் ஜாக்கி ஜப்பானுக்கு புலம் பெயர்ந்த சீனராக நடித்திருந்தார்.[43] அந்தத் திரைப்படம் 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று வெளியானது. அவரது வலைப்பதிவின்படி, ஷிஞ்சுகு இன்சிடெண்ட் திரைப்படம் முடிந்த பின்னர் ஜாக்கி ஒரு படத்தை இயக்க விரும்பினார், அவர் பல ஆண்டுகளாக திரைப்பட இயக்கத்தில் ஈடுபடாமலே இருந்தார்.[44] அந்தப் படம் ஆர்மர் ஆஃப் காட் திரைப்பட வரிசையின் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக் என்று பணி ரீதியான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று படப்பிடிப்பைத் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், ஆனால் அந்த தேதி கடந்துவிட்டது.[45] ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கிரிட் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால், ஜாக்கி த ஸ்பை நெக்ஸ்ட் டோர் என்னும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நியூ மெக்ஸிகோவில் அக்டோபர் இறுதியில் தொடங்கினார்,[46] இதன் மூலம் ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக் படத்தின் நிலையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். த ஸ்பை நெக்ஸ்ட் டோர் படத்தில், மறைந்திருக்கும் நபராக நடித்தார். அந்தப் படத்தில் அவரது காதலியின் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் அவரது கவர் பெரிதாகிவிடும்.

பெய்ஜிங் திரைப்படத்தின் மறுதயாரிப்பான த கராட்டே கிட் திரைப்படத்தின் படமாக்கத்தைத் தொடங்குவதற்காக, ஜாக்கி 2009-ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார்.[47]

சண்டைப் பணிகள் தொகு

ஜாக்கி சான் பெரும்பாலும் தனது சொந்த ஸ்டண்ட்டுகளையே[48] பயன்படுத்துவார், அதை ஜாக்கி சான் ஸ்டண்ட் குழு இயக்கும். தனது சொந்த ஸ்டண்ட் திறமையைப் பயன்படுத்தும் பஸ்டர் கீட்டன் அவர்கள் இயக்கிய த ஜெனெரல் போன்ற படங்களே அவரது நகைச்சுவை சண்டைக் காட்சிகளுக்கு அதிக தூண்டுதலாக அமைந்தது என அவரது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். 1983 ஆம் ஆண்டு அது நன்றாக உருப்பெற்றதை அடுத்து, ஜாக்கி தனது அடுத்த படங்கள் அனைத்திலும் தனது குழுவின் பணியையே பயன்படுத்தினார், இதனால் அவரது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உள்ள திறமையை அவரால் எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது.[49] ஜாக்கியும் அவரது குழுவினரும் அவரது திரைப்படங்களின் பிற பாத்திரங்களாக நடித்துள்ளனர், அப்போதெல்லாம் அவர்களது முகங்கள் தெளிவாக தெரியாதபடி படம்பிடிக்கப்படும்.[50]

அவரது ஆபத்தான சண்டைக் காட்சிகளின் காரணமாக,குறிப்பாக அமெரிக்காவில் அவரது சண்டைப் பணிகளுக்காக காப்பீடு பெறுவது கடினமாக இருந்தது. அங்கு அவரது சண்டைக் காட்சிப் பணிகள் ஒப்பந்தத்தினால் கட்டுப்படுத்தப்பட்டன.[50] "அதிக சண்டைக் காட்சிப் பணிகளை நிகழ்த்திய, வாழும் ஒரு நடிகர்" என்னும் கின்னஸ் உலக சாதனையை ஜாக்கி நிகழ்த்தியுள்ளார். அதாவது "ஜாக்கி தானாகவே முழு ஸ்டண்டுகளை செய்யும் அவரது தயாரிப்புகளுக்கு எந்த காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு உத்தரவாதம் வழங்கவில்லை" என்பதை இது வலியுறுத்துகிறது.[51] மேலும், ஒரே படத்தில் அதிக ஷாட்கள் எடுத்த ஓர் அங்கீகரிக்கப்படாத சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். ட்ரேகன் லார்டு திரைப்படத்தின் ஒரு சிக்கலான பேட்மிண்டன் காட்சிக்காக 2900 க்கும் மேற்பட்ட டேக் எடுத்துள்ளார்.[52]

ஜாக்கி தனது சண்டை முயற்சிகளின் போது பல முறை காயமடைந்துள்ளார். அவற்றில் பல காட்சிகள் படப்பிடிப்பின் படக்காட்சிகளிலோ அல்லது நன்றிக் காட்சிகளின் போது காண்பிக்கப்படும் பிழைகளாகவோ காண்பிக்கப்படும். ஆர்மர் ஆஃப் காட் திரைப்படத்தில் செத்துப் பிழைத்தார் எனக் கூறலாம். அப்போது அவர் ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து அவரது மண்டையில் எலும்புகள் முறிந்தன. பல ஆண்டுகளில், அவரது இடுப்பு இடமாற்றம் அடையும் பாதிப்புகள் அடைந்துள்ளார், விரல்கள், கால்விரல்கள், மூக்கு, மார்பெலும்பு, கன்னத்தின் எலும்புகள், இடுப்பு, கழுத்து, மூட்டு விலா ஆகிய உடலின் பல பகுதிகளை பல முறை உடைத்துக்கொண்டிருக்கிறார்.[53][54] ரம்பில் இன் த ப்ரான்க்ஸ் படத்திற்கான பிரச்சார படைப்புகளில், ஜாக்கி அந்தப் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் அவராகவே செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் ஜாக்கி அதிக காயங்களுடன் காணப்படும் படமும் இடம்பெற்றிருந்தது.

திரைப்பட விவரங்கள் மற்றும் திரைப் பாத்திரம் தொகு

மேலும் தகவல்களுக்கு: Jackie Chan filmography

ஜாக்கி சான் தனது திரைப்படப் பாத்திரத்தை புரூஸ் லீக்கு பதிலாக உருவாக்கினார், அதோடு மட்டுமல்லாமல் அது புரூஸ் லீயின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் வந்த எண்ணற்ற மாற்று நடிகர்களுக்கு பதிலாகவும் அமைந்தார். விறைப்பான, தர்மத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களான மனிதர்கள் போன்ற வழக்கமான லீயின் பாத்திரங்களுக்கு மாறாக, ஜாக்கி பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். சிறிதளவு முட்டாள்தனமான சாதரண மனிதனாக (பெரும்பாலும் அவரது காதலி அல்லது நண்பர்கள் அல்லது குடும்பத்தின் மேலுள்ள இரக்கத்தினால்) இருந்து, அப்படி இருந்தாலும் இறுதியில் வென்றுவிடும் நாயகனாக விளங்குவார்.[15] மேலும், ஜாக்கி அவரது அசைவுகளின் பாணியானது லீயின் அசைவுகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என குறிப்பாகக் கூறியுள்ளார்: லீ தனது கைகளை நன்கு விரித்து அகலமாக வைத்திருப்பார், ஆனால் ஜாக்கி தனது கைகளை உடலுடன் சேர்த்து இறுக்கமாகவே வைத்திருப்பார்; லீ தளர்வாகவும் உடல் வளைந்துகொடுக்கும் தன்மையுடனும் காணப்படுவார், ஆனால் ஜாக்கி இறுக்கமாகவும் கிடுகிடுவென்று குதிக்கும் பரபரப்பான இயல்புடனும் காணப்படுவார். ரஷ் ஹவர் வரிசை வெற்றிபெற்ற போதும், அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் எதனையும் பாராட்டவும் இல்லை, அமெரிக்க நகைச்சுவை உணர்வைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.[55] அதே நேர்காணலில், அமெரிக்காவில் அவர் ஈடுபட்டிருந்த படங்கள் இல்லாத சமயங்களில், எங்கே சீன மக்கள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதோ எனப் பயந்து, பெரிய பட்ஜெட் அமெரிக்கத் திரைப்படங்களில் நடிப்பதை அவ்வப்போது தவிர்த்துவந்தார். அவர் அது போன்ற அதிக சம்பள படங்களிலிருந்து கிடைக்கும் பணத்தை அவருக்கு ஆர்வமுள்ள சீனப் பணித்திட்டங்களுக்காகவே பயன்படுத்தினார்.

வயதான ஜாக்கி சான் ஆக்ஷன் நாயகனாக நடித்து சோர்ந்துவிட்டதால், சமீபத்திய படங்களில் உணர்ச்சிமயமான பாத்திரங்களில் நடித்துவருகிறார்.[56] நியூ போலிஸ் ஸ்டோரியில், குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒரு மனிதனாக நடித்துள்ளார், அதில் அவர் கொலை செய்யப்பட்ட தனது சக பணியாளர்களை நினைத்து முனுமுனுப்பார்.[57] மிஸ்டர். நைஸ் கை படத்தின் கதாப்பாத்திரம் உருவாக்கிய பாதிப்பை மாற்ற, அவர் ஒருபோதும் செய்யாத ஆண்டி-ஹீரோ பாத்திரத்தை ராப்-பி-ஹுட் திரைப்படத்தில் செய்தார், அதில் அவர் சூதாட்ட சிக்கல்கள் கொண்ட தாங்க்ஸ் என்னும் கொள்ளையனாக நடித்தார்.[58]

தொலைக்காட்சிப் பணிகள் தொகு

2000 ஆம் ஆண்டு தனது கதையின் நாவல் வடிவமாக்கப்பட்ட அனிமேஷன் தொடரான ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ், என்பதை வழங்கினார், அது 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.[59]

2008 ஆம் ஆண்டு ஜூலையில் BTV ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான த டிசைப்பில் (எளிய சீனம்: 龙的传人; மரபுவழிச் சீனம்: 龍的傳人, எழுத்தியலாக "டிசைப்பில் ஆஃப் த ட்ரேகன்ஸ்") என்ற நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் தொடரை ஜாக்கி சான் தயாரித்து அதில் அவரே நடித்தார். திரைப்படத்துறையில் ஜாக்கிக்கு "அடுத்தவராகவும்" மாணவராகவும் இருக்கக்கூடிய நடிப்பு மற்றும் தற்காப்புக் கலைகளில் திறம்படப் பயிற்சி பெற்ற ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பதே அந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். போட்டியாளர்களுக்கு ஜாக்கி சான் சண்டைக் குழு உறுப்பினர்களான ஆலன் வூ மற்றும் ஹீ ஜுன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் அவர்கள் வெடிவிபத்துக் காட்சிகள், உயரமான கயிறுகளில் ஏறுதல், துப்பாக்கி சண்டை, கார் ஸ்டண்ட்டுகள், டைவிங், தடை ஸ்டண்டுகள் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஹீ பிங், வூ யூ மற்றும் செங் பெய் பெய் ஆகியோர் வழக்கமான நீதிபதிகளாக இருந்தனர். கௌரவ நீதிபதிகளாக ஸ்டேன்லி டாங், சாம்மோ ஹுங் மற்றும் யுவேன் பையோ ஆகியோர் இடம்பெற்றனர். அதன் "இறுதி" பகுதி மீதமிருந்த 16 போட்டியாளர்களைக் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று தொடங்கி, 2008 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று முடிந்தது. அதில் பங்குபெற்றவர்களில் ட்சூ ஹார்க், ஜான் வூ, ங் சீ யுவேன் மற்றும் யூ ராங் குவாங் ஆகியோர் அடங்குவர்.

ஜாக் டூ (டூ ஷெங் செங்) அந்த நிகழ்ச்சித் தொடரின் வெற்றியாளரானார். யாங் ஜெங் மற்றும் ஜெர்ரி லியாயூ ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தவர்களாவர், டூ இப்போது மூன்று தற்கால சீன திரைப்படங்களில் பணிபுரிந்துவருகிறார். அதில் ஒரு படத்திற்கு ஜாக்கி திரைக்கதையாசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த மூன்றும் ஜாக்கி அல்லது அவரது JCE மூவிஸ் லிமிட்டட் நிறுவனத்தால் இணைத் தயாரிப்புப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் பெயர்கள் ஸ்பீட்போஸ்ட் 206, வோன்'ட் டெல் யூ மற்றும் ட்ராப்பிகல் டொர்னேடோ ஆகியவையாகும். மேலும் அவை க்ஸீ டாங், ஜயாங் டாவோ மற்றும் சாய் ராங் ஹூய் ஆகியோரால் இயக்கப்படும். அதில் வென்ற 16 இறுதிப்போட்டியாளர்கள் அனைவருக்கும் படங்களில் பணிபுரிவதற்கு அல்லது ஜாக்கி சான் ஸ்டண்ட் குழுவில் சேர்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் திரைப்படத்தின் தயாரிப்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வர இருந்த BTV ஆக்ஷன் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பும் அந்த இறுதியாளர்களுக்கு வழங்கப்பட்டது.[60][61][62]

இசை வாழ்க்கை தொகு

மேலும் தகவல்களுக்கு: Jackie Chan discography

ஜாக்கி சான் அவரது குழந்தைப் பருவத்தில் பெக்கிங் ஓப்பெரா ஸ்கூலில் குரல் இசைப் பயிற்சி பெற்றிருந்தார். 1980களில் தொழில்முறையாக ரெக்கார்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினார். ஹாங் காங் மற்றும் ஆசியாவில் வெற்றிகரமான பாடகராவதாகத் தெரிந்தது. 1984 ஆம் ஆண்டிலிருந்து அவர் 20 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் கேண்டூனிஸ், மாண்டரின், ஜாப்பனீஸ், தைவானீஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். அவரது படங்களில் பெரும்பாலும் தீம் பாடல்களை அவரே பாடுவார், அவை நன்றிக் காட்சிகளில் இடம்பெறும். "குங் ஃபூ ஃபைட்டிங் மேன்" என்பதே அவரது முதலில் பதிவு செய்யப்பட்ட பாடலாகும், அது த யங் மாஸ்டர் (1980) படத்தின் நன்றிக் காடசிகளில் இடம்பெறும் தீம் பாடலாகும்.[63] இந்த பதிவுகளில் குறைந்தபட்சம் 10 திரைப்படங்களுக்கான சவுண்ட் ட்ராக் ஆல்பங்களாக வெளியிடப்பட்டுள்ளன.[57][64] ஸ்டோரி ஆஃப் அ ஹீரோ (英雄故事) என்னும் அவரது கேண்டுனீஸ் பாடல் (போலிஸ் ஸ்டோரி படத்தின் தீம் பாடல்) ராயல் ஹாங் காங் போலிஸ் துறையால் 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆள் சேர்ப்பு விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது.[65]

சீனாவில் வெளியான வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படைப்பான முலான் (1998) படத்தில் ஜாக்கி, ஷாங் என்னும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் பாடலுக்காக "ஐ'ல் மேக் அ மேன் அவுட் ஆஃப் யூ" என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் அமெரிக்க வெளியீட்டுக்கு பேச்சுக் குரல் பீ.டி. வோங் என்பவர் வழங்கினார், பாடல் டோனி ஆஸ்மண்டால் பாடப்பட்டது.

2007 ஆம் ஆண்டு, "வீ ஆர் ரெடி" என்ற பாடலைப் பாடி பதிவு செய்தார், அது 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஓராண்டு கவுண்ட்-டௌன் பாடலாகத் திகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டின் உடல் ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி விழாவில் ஓராண்டு கவுண்ட்-டௌனைக் குறிக்கும் விதமாக ஜாக்கி அந்தப் பாடலைப் பாடினார்.[66]

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன் நாள், இரண்டு அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆல்பங்களில் ஒன்றை வெளியிட்டார். அது அஃபீஷியல் ஆல்பம் ஃபார் த பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் கேம்ஸ் - ஜாக்கி சான்'ஸ் வெர்ஷன் என்பதாகும், அதில் பலர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர்.[67] ஜாக்கி ஆண்டி லா, லியூ ஹுவான் மற்றும் வாக்கிங் (எமில்) சாவ் ஆகியோருடன் இணைந்து 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் "ஹார்ட் டு சே குட்பை" என்னும் பாடலைப் பாடினார்.[68]

மதிப்பு மற்றும் ஒரு பிரபல அந்தஸ்து தொகு

 
ஹாங் காங்கில் உள்ள அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸில் உள்ள ஜாக்கி சானின் ஸ்டார்

ஜாக்கி சான் அவரது நடிப்பிற்காக உலகளவிலான நன்மதிப்பைப் பெற்றவராவார். அவர் அமெரிக்கன் கொரியகிராஃபி அவார்ட்ஸிலிருந்து இன்னோவேட்டர் விருதையும் டாரஸ் வோர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட்ஸின் வாழ்நாள் சாதனை விருதையும் பெற்றுள்ளார்.[69] ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் மற்றும் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸ் ஆகிய இரண்டிலும் நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார்.[70] வடக்கு தெற்குப் பகுதிகளில் இவர் வசூல் ரீதியான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ஆக்ஷன் கொரியகிராஃபியைப் பொறுத்த வரை ஜாக்கியின் அமெரிக்கத் திரைப்படங்கள் விமர்சனத்துக்குள்ளாயின. ரஷ் ஹவர் 2, த டெக்ஸூடோ மற்றும் ஷாங்காய் நைட்ஸ் ஆகிய திரைப்படங்களின் விமர்சகர்கள், சானின் சண்டைக் காட்சிகளில் காணப்படும் சிறப்புக் குறைதலைக் குறிப்பிட்டனர், அவை அவரது முந்தைய படங்களினதைவிட செறிவு குறைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.[71][72][73] அவரது திரைப்படங்களின் நகைச்சுவை மதிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சில நேரங்களில் அது சிறுபிள்ளைத் தனமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.[74]

ஜாக்கி ஒரு கலாச்சாரச் சின்னமாவார், ஆஷின் பாடலான "குங் ஃபூ", "ஜாக்கி சான் இஸ் அ பங்க் ராக்க்ர்" ஆகிய ஹெவி வெஜிட்டபில் பாடல்கள் மற்றும் ஃப்ரேங்க் சிக்கென்ஸின் "ஜாக்கி சான்" மற்றும் செலிப்ரிட்டி டெத்மேட்ச் மற்றும் ஃபேமிலி கை ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். ("ஜாக்கி சன்" என்னும் மாற்றுப் பெயர் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தைக் கொண்டுள்ள) ட்ரேகன் பால் போன்ற மங்கா படைப்புகள்,[75] டெக்கென் படைப்பில் இடம்பெறும் லீ வோங் பாத்திரம் மற்றும் போக்மேன் ஹிட்மோன்ச்சேன் ஆகிய சண்டை வகைகள் போன்றவற்றுக்கு அவர் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறார்.[76][77][78] மேலும், மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் கீழும் உள்ளார். இதன் விளைவாக ஜாக்கி சானின் பல படங்களில் மிட்சுபிஷி கார்கள் அதிகமாக இடம்பெறுவதைக் காணலாம். மேலும், மிட்சுபிஷி நிறுவனமும் சானுக்காக தனிப்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட எவால்யூஷன் என்னும் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே தயாரிக்கப்பட்ட கார் மாடல் உருவாக்கி அவரை கௌரவித்தது.[79][80][81]

எண்ணற்ற வீடியோ கேம்களில் ஜாக்கி சான் இடம்பெற்றுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பதற்கு முன்பு, அவருக்கென ஜாக்கி சான்'ஸ் ஆக்ஷன் குங் ஃபூ என்னும் ஒரு தனிப்பட்ட விளையாட்டைக் கொண்டிருந்தார். அதை தனிநபர் கணினி மற்றும் NES ஆகியவற்றுக்காக 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1995 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் த குங் ஃபூ மாஸ்டர் என்னும் ஆர்கேட் சண்டை விளையாட்டில் இடம்பெற்றார். மேலும் அவரது பல படங்களின் (ப்ராஜெக்ட் A, ப்ராஜெக்ட் A 2, போலிஸ் ஸ்டோரி, த ப்ரொடெக்டர் மற்றும் வீல்ஸ் ஆன் மீல்ஸ்) அடிப்படையிலமைந்த ஜாப்பனீஸ் ஜாக்கி சான் விளையாட்டுக்களை MSX இல் போனி நிறுவனம் வெளியிட்டது.[82]

ஜாக்கி குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே விரும்பினார். மேலும் தனது நல்ல விதமான நடிப்பினால் அவர் மிகவும் பிரபலமாகவும் இருந்தார். அவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்ததில்லை. கிட்டத்தட்ட "ஃபக்" என்னும் வார்த்தையை அவர் பயன்படுத்தியதே இல்லை (அதை த ப்ரொடெக்டர் மற்றும் பர்ன், ஹாலிவுட், பர்ன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்) ஆனால் ரஷ் ஹவர் படத்தின் போது அவரது கூட்டாளியான கார்ட்டெரைப் போலப் பேசுவதற்காக அவர் அதிகமான நபர்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு முறை கூறிய "வாட்ஸ் அப் மை நிகர்" என்ற வசனத்தை, கார்ட்டெர் மற்றொரு அறையில் இருக்கும் போது திரும்பக் கூறி வேடிக்கையாக இருக்க முயற்சித்த போது அங்கிருந்த அனைவரும் அவரை அடிக்க வந்து விட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க ஜாக்கி தனது சண்டைப் பயிற்சி திறமைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது.[83] வாழ்க்கையில் சரியாகக் கல்வி கற்க முடியாமல் போனதே ஜாக்கி சானின் மிகப் பெரிய வருத்தமாகும். இதனால் அவர் உலகளவில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கிவருகிறார்.[84] ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில் உள்ள ஜாக்கி சான் சயின்ஸ் செண்ட்டருக்கும்[85] சீனாவின் ஏழ்மையான பகுதிகளில் சில பள்ளிகளை நிறுவுவதற்கும் நிதி அளித்துள்ளார்.[86]

ஹாங் காங் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் ஜாக்கி சான் விளங்குகிறார். மக்களிடம் அரசாங்கத்தின் சார்பாக பொது மக்கள் சேவைகள் பற்றிய ஏதேனும் அறிவிப்புகளை வழங்க அவர் பேசுவார். க்ளீன் ஹாங் காங் எனும் விளம்பரத்தில் அவர் பல ஆண்டுகளாக ஹாங் காங்கில் பரவியிருந்த குடிப்பழக்கத்தை விட்டொழிக்க மக்களை வற்புறுத்தினார்.[87] மேலும் தேசியவாதப் பிரச்சாரம் ஒன்றில் ஜாக்கி சீனாவின் தேசிய கீதமான மார்ச் ஆஃப் த வாலண்டியர்ஸ் பாடலுக்கான சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்.[88] 2005 ஆம் ஆண்டில் ஹாங் காங் டிஸ்னி லேண்ட் திறக்கப்பட்ட போது அந்தத் திறப்பு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்றார்.[89] அமெரிக்காவில் பதிப்புரிமை மீறலுக்கு எதிராகப் போராடத் தூண்டும் அரசாங்க விளம்பரத்தில் அர்னால்டு சுவார்சனேகருடன் இணைந்து பணிபுரிந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் பொதுப் பணித் துறை ஷெரிஃப்ஃபான லீ பாக்காவுடன் மக்களை, குறிப்பாக ஆசியர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் கண்ட்ரி ஷெரிஃப் துறையில் சேர ஊக்குவிக்கும் ஒரு அறிவிப்பில் பங்கேற்றார்.[90][91]

ஷாங்காயில் ஜாக்கி சான் மியூசியத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தப் பணி 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதும் 2008 ஆம் ஆண்டு ஜூலையிலேயே தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் கிடைத்த தகவலின் படி அது இன்னும் கட்டுமானப் பணியின் தொடர்ச்சியிலேயே உள்ளது.[92]

சர்ச்சைகள் தொகு

2004 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று தைவானில் ஒரு நேர்காணலில், சமீபத்தில் முடிவு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டின் சீனக் குடியரசின் அதிபர் தேர்தல் பற்றி ஜாக்கி பேசினார். அப்போது அவர் "ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்களான சென் ஷூயி பியான் மற்றும் அன்னெட் லூ ஆகியோர் அதிபர் மற்றும் துணை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உலகின் மிகப் பெரிய ஜோக்" என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது.[93] தைவான் சட்டசபை உறுப்பினர் மற்றும் DPP இன் மூத்த உறுப்பினரான பேரிஸ் சாங் ஜாக்கி சானின் கருத்துகளை விமர்சித்து, அவரைக் கண்டிக்கும் விதமாக தைவானில் அவருடைய படங்களையும் அவர் தைவானுக்கு வருவதற்கான உரிமையையும் தடைசெய்ய அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தார்.[94] TVBS என்னும் கேபிள் தொலைக்காட்சி சேனலால் வழங்கப்பட்ட தர்மஸ்தாபனத்திற்கு வருகை தருவதற்காக 2008 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று தாய்பேய் விமான நிலையத்தில் ஜாக்கி சான் வந்திறங்கியபோது போராட்டக்காரர்களை அவரை விட்டு விலக்க சுமார் 50 காவலர்கள் தேவைப்பட்டனர்.[95] தனது கருத்துகளை தைவான் மக்களை அவமதிக்கும் நோக்கில் தான் வெளிப்படுத்தவில்லை என சான் வலியுறுத்தினார்.[96]

பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர் அணிவகுப்பைப் பற்றி பேசிய போது, சில டெமான்ஸ்ட்ரேட்டர்கள் சீன மனித உரிமைகள் பதிவு மற்றும் தைவானின் அரசியல் அந்தஸ்து ஆகியவை உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு எதிரான பல விவகாரங்களை கவனத்தில் கொண்டுவருவதற்காக அணிவரிசையை பல முறை குறுக்கிட்டனர் என அவர்களுக்கு எதிராக ஜாக்கி சான் பேசினார். "டெமான்ஸ்ரேட்டர்கள் என்னருகில் வராமல் இருப்பதே நல்லது" என்று கூறியதன் மூலம் தான் ஒலிம்பிக் சுடரைக் கொண்டு செல்வதைத் தடுக்கத் திட்டமிடும் எவரையும் தாக்கிவிடுவதாக எச்சரித்தார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று "டேப்பிங் இண்டு ஆஷியா'ஸ் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரி பொட்டென்ஷியல்" என்னும் தலைப்பில் ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்திர குழும கலந்துரையாடலில் பேசிய ஜாக்கி சான், ஹாங் காங் சீன ஆட்சிக்குத் திரும்பிய 10 ஆண்டுகளில், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது நல்லதா கெட்டதா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை" எனக் கூறினார்.[97] அவர் தொடர்ந்து "நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தால் ஹாங் காங் இப்போது இருப்பது போலத் தான் நீங்களும் இருப்பீர்கள்". இது ஒரு முறையான அமைப்பாக இல்லை. தைவானும் அப்படித்தான் உள்ளது" என்றும் கூறினார். மேலும் அவர் "சீனர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றுகிறது". நாம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாம் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்துவிடுவோம்" என்றும் கூறினார். இருப்பினும், சீனப் பொருள்களின் தரம் பற்றிக் குறை கூறுகையில் "ஒரு சீனத் தொலைக்காட்சி வெடிக்கக்கூடும்"[98] எனக்கூறினார். ஆனால் அவரது ஷிங்ஜுக்கு இன்சிடெண்ட் திரைப்படத்தைத் தடைசெய்ததற்காக அவர் சீன அரசாங்கத்தை விமர்சிக்க தைரியம் கொண்டிருக்கவில்லை.[99] தைவான் மற்றும் ஹாங் காங்கின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாக்கி சானின் இந்தக் கருத்துகளால் சூடான பதில்களைத் தெரிவித்தனர். ஹாங் காங் சட்டமன்ற உறுப்பினர் லியூவங் க்வோக்-ஹங், "சான் சீன மக்களை அவமதித்துவிட்டார்". சீன மக்கள் செல்லப் பிராணிகள் அல்ல" எனக் கூறினார்.[100] ஜாக்கி சானின் கருத்துகளுக்கு எதிராக ஹாங் காங் சுற்றுலாத் துறை ஆணையம் பொதுமக்களிடமிருந்து 164 கருத்துகள் அல்லது புகார்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.[101] ஜாக்கி சானின் ஒரு செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "சான் பொழுதுபோக்குத் தொழிற்துறையில் உள்ள சுதந்திரம் பற்றியே குறிப்பிட்டாரே தவிர பெருவாரியான சீன மக்கள் சமூகத்தைப் பற்றியல்ல. மேலும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலர் உள்நோக்கத்துடன் அவரது கருத்துகளைத் தவறாகப் பரப்புகின்றனர்" என்று தெரிவித்தார்.[102]

தொழிற்துறைப் பங்களிப்பும் சமூகத் தொண்டில் பங்களிப்பும் தொகு

2004 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் தனது சொந்த ஆடைகளை அறிமுகப்படுத்தினார். அந்த ஆடைகளில் சீன ட்ரேகன் சின்னமும் ஜாக்கி என்ற பெயர் அல்லது JC என்ற சுருக்கமும் இடம்பெற்றிருந்தன.[103] ஜாக்கி சானுக்கு எண்ணற்ற பல ப்ராண்டு வணிகங்களும் உள்ளன. ஜாக்கி கிச்சன் என்னும் அவரது சூஷி ரெஸ்டாரண்ட்டுகள் பல ஹாங் காங் முழுவதும் உள்ளன. அதே போன்று தென் கொரியாவில் ஏழும் ஹவாயில் ஒன்றும் உள்ளது. மேலும் லாஸ் வேகாஸில் மேலும் மற்றொன்றைத் திறக்கும் திட்டமும் உள்ளது. ஜாகி சான்'ஸ் கேஃப் கிளைகள் பெய்ஜிங், சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பல இடங்களில் உள்ளன. ஜாக்கி சான் சிக்னேச்சர் கிளப் ஜிம்கள் (கலிஃபோர்னியா ஃபிட்னெஸ் அமைப்புடன் கூட்டு வணிக முயற்சி), பல சாக்லேட் வகைகள், குக்கிகள் மற்றும் ஊட்டச்சத்து ஓட் கேக்குகள் போன்ற தயாரிப்புகள் ஆகியவை அவரது தொழில் முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் அடங்கும். அவர் தனது வணிகத்தை விரிவாக்கி மரச்சாமான்கள் சமயலறைப் பொருள்கள் ஆகிய தயாரிப்புகள் நோக்கிச் செல்ல இருப்பதாக நம்புகிறார். மேலும் விரைவில் ஒரு பிராண்டடட் சூப்பர் மார்க்கெட்டைக் கட்டுவதற்கான திட்டமும் உள்ளதாகக் கூறுகிறார்.[104] அவரது ஒவ்வொரு வணிகத்திலும் அவருக்கு கிடைக்கும் இலாபத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பல்வேறு தர்ம ஸ்தாபனங்களுக்குச் செல்கிறது, அதில் ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனும் அடங்கும்.

மிகச் சிறந்த கொடையாளியும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நன்மதிப்புத் தூதரும் ஆவார், அவர் தொண்டுப் பணிகள் மற்றும் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் விலங்குகள் பாதிப்புக்குட்படுத்தப்படுதலுக்கு எதிராக அழியாமல் காப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் மெயின்லேண்ட் சீனா வெள்ளப் பேரழிவு மற்றும் 2004 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் சுனாமி ஆகிய நிகழ்வுகளின் போது பேரழிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார்.[6][105][106] தான் இறந்த பின், தனது சொத்தின் பாதியைத் தேவைப்படுபவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்போவதாக 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜாக்கி சான் அறிவித்தார், மேலும் வாரென் பஃபே மற்றும் பில்கேட்ஸ் ஆகியோரின் உதவிகளைப் பாராட்டினார்.[107] 2008 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, ஜான் கர்ட்டின் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்ச், கேன்பெராவிலுள்ள ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில், ஜாக்கி சான் சயின்ஸ் செண்டரின் தொடங்கி வைப்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டுடன் மரியாதை நிமித்த மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஜாக்கி சான் சேவ் சீனா'ஸ் டைகர்ஸ் பணித்திட்டத்தின் ஆதரவாளரும் ஆவார். அது தென் சீனப் புலிகளின் அழிவைத் தடுப்பதைக் குறிக்கோளாக் கொண்ட பணித்திட்டமாகும். அதற்காக அத்திட்டம் புலிகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றைக் காட்டில் சென்று விட்டுவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, இந்த அழியாமல் காக்கும் பணித்திட்டத்திற்கான பிரதிநிதியாக ஜாக்கி சான் உள்ளார்.[108] பண்டைய கலை நயம் மிக்க பழம்பொருள்கள் பலவற்றை ஜாக்கி சான் வைத்திருக்கிறார், அதில் 2000 ஆண்டு பழமையான கதவு போன்றவை அடங்கும். அவர் சிங்கப்பூரில் உள்ள ஜின்ரிக்ஷா ஸ்டேஷனையும் கொண்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சென்னையில் நடைபெற்ற தசாவதாரம் (2008) என்ற இந்தியத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் அழைக்கப்பட்டார். அதில் பங்கேற்ற போது, அவர் தனது கலைக் கருத்துகளை இந்திய பிரபலங்களான அமித்தாப் பச்சன் மம்மூட்டி மற்றும் கமலஹாசன் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜாக்கி சானுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியாது என்றாலும், அவரிடமும் அவரது படங்களின் மீதும் இந்திய ரசிகர்களுக்கு இருந்த நேசத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தசாவதாரம் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் கவரப்பட்ட அவர் அந்தப் படத்தின் நாயகனான கமலஹாசனுடன் பணிபுரிய விரும்புவதாகக் குறிப்பிட்டார். கமலஹாசனும் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் பணிபுரிய தான் விரும்புவதாக பதிலுக்கு தெரிவித்தார். இதனால் ஜாக்கி சாத்தியமுள்ள பணித்திட்டத்தில் இருவரும் இணைந்து பணிபுரியலாம் என உறுதியளித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டின் செச்ச்வான் பூகம்பத்தை அடுத்து RMB ¥10 மில்லியன் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜாக்கி சான் வழங்கினார். மேலும், சீன பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டுவதற்காக அதைப் பற்றி ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஜாக்கி சான் சாரிட்டபிள் ஃபவுண்டேஷன் தொகு

1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷன் நிறுவனம், பல்வேறு வகையான மதிப்புள்ள சேவை வழிகளைப் பயன்படுத்தி ஹாங் காங் இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் செயல்மிகு உதவி ஆகியவற்றை வழங்கிவருகிறது. இந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனமானது தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளது, அதன் மூலம் மருத்துவ சேவைகள் வழங்குதல், இயற்கையன பேரழிவுகள் அல்லது உடல்நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குதல் ஆகிய பணிகளையும் தங்கள் பணித்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற முடிந்தது. இதன் பணித்திட்டங்களால் பெரிதும் பயனடைபவர்கள் ஹாங் காங் மக்கள் அல்லது நிறுவனங்களே. ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனின் முக்கியத் பணித்திட்டங்கள்:

  • லிங்னான் யுனிவெர்சிட்டியில் உள்ள ஜாக்கி சான் ஜிம்னேஷியம்
  • கல்லூரிகளுக்கிடையே நடத்தப்படும் ஜாக்கி சான் சேலஞ்ச் கப் போட்டிகள்
  • ஜாக்கி சான் ஃபேமிலி யூனிட், ஹாங் காங் பெண் கைடுகள் சங்கம் ஜாக்கி கிளப் பீஸ் ரிவர் லாட்ஜ்
  • ஜாக்கி சான் முழு மனித மேம்பாட்டு மையம்
  • கலைகளுக்கான ஹாங் காங் அகாடமி யின் பெத்தானி இடத்தின் மறுசீரமைப்பு
  • மெயின்லேண்ட் சீனாவில் மருத்துவ நிதியளிப்பு (ஆப்பரேஷன் ஸ்மைல்)[சான்று தேவை]
  • ஹாங் காங்கில் மருத்துவ நன்கொடை (குவீன் மேரி ஹாஸ்பிட்டல், SARS நிவாரணம்)
  • கலை நிகழ்த்தலுக்கான ஆதரவு உதவிகள்
  • இளைஞர் முன்னேற்ற திட்டங்கள்

டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொகு

டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அது சீனாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறாரின் முக்கிய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலிருந்து ட்ரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷனானது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கட்டியுள்ளது. புத்தகங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும் ஏழைகளுக்கான மிகவும் அவசியமான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மில்லியன் கணக்கிலான நன்கொடை நிதியைத் திரட்டியுள்ளது. மேலும் டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் முதியவர்களுக்கான கதகதப்பான ஆடைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பிற முக்கியப் பொருள்களை வழங்கியுள்ளது. புதிய திட்டங்கள் அல்லது பள்ளி திறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்காக ஜாக்கி சான் சீனாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அடிக்கடி செல்வது வழக்கம், அதன் மூலம் அவர் தனது ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஹாங் காங் திரைப்பட விருதுகள்

(10 சிறந்த நடிகருக்கான பரிந்துரைகள், 6 சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான பரிந்துரைகள், 1 சிறந்த படத்திற்கான பரிந்துரை, 1 சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை, 1 சிறந்த உண்மையான திரைப்படப் பாடலுக்கான பரிந்துரை)

சொந்த வாழ்க்கை தொகு

1982 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் லின் ஃபெங்-ஜியாவோ (ஜோன் லின் எனவும் அழைக்கப்படுவார்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார், அவர் ஒரு தைவான் நடிகையாவார். அதே ஆண்டு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், அவரே பாடகரும் நடிகருமான ஜாயஸ் சான் ஆவார்.[33]

"1999 ஆம் ஆண்டின் ஒரு சர்ச்சையில், 1990 ஆம் ஆண்டின் மிஸ் ஏஷியா பீகெண்ட் வெற்றியாளரான எலைன் இங்கின் பெண் குழந்தைக்கான தந்தைமையைத் தவிர்த்து பிற எல்லாவற்றையும் அவர் ஒப்புக்கொண்டார்" இருப்பினும் சிறப்பு நிருபர்கள் ஜாக்கிக்கு, இறந்த தைவான் பாடகர் டெரேசா டெங்கிலிருந்து கவர்ச்சி பாப் பாடகி மற்றும் நடிகை அனிதா முயி வரையிலான அனைவருடனும் தொடர்பு இருந்ததாகக் கூறுகின்றனர்.[109]

அவர் காண்டூனிஸ் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவார், அவருக்கு ஓரளவு கொரியன் மற்றும் ஜாப்பனீஸும் சிறிதளவு ஸ்பனிஷும் தெரியும்.[110]

குறிப்புதவிகள் தொகு

  1. "London Gazette - Issue 51772" (PDF). 16 June 1989. pp. Page 17. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "வாழ்க்கை வரலாறு பிரிவு, ஜாக்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்". Archived from the original on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  3. "Biography of Jackie Chan". Biography. Hong Kong Film.net. Archived from the original on 16 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007.
  4. 4.0 4.1 "Biography of Jackie Chan". Biography. Tiscali. Archived from the original on 23 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பத்துப் பாடங்கள்". Vikatan. 15 September 2014. http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/61978-we-must-learn-10-lesson-to-jackie-chan.html. பார்த்த நாள்: 15 February 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 "Jackie Chan Battles Illegal Wildlife Trade". Celebrity Values. Archived from the original on 13 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Biography of Jackie Chan". StarPulse. Archived from the original on 18 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Seven Little Fortunes". Feature article. LoveAsianFilm. Archived from the original on 16 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Come Drink With Me (1966)". Database entry. Hong Kong Cinemagic. பார்க்கப்பட்ட நாள் 31 March 2009.
  10. 10.0 10.1 Who Am I?, Star file: Jackie Chan[DVD].Universe Laser, Hong Kong.
  11. "Men of the Week: Entertainment, Jackie Chan". Biography. AskMen. Archived from the original on 3 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Real Lives: Jackie Chan". Biography. The Biography Channel. Archived from the original on 31 August 2009. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007.
  13. "Jackie Chan als Darsteller in altem Sexfilm aufgetaucht". Information Times. 2006. http://xinwen.de/2006/09/21/jackie_chan_als_darsteller_in.html. 
  14. Boogs, Monika (7 March 2002). "Jackie Chan's tears for 'greatest' mother". The Canberra Times இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080921230708/http://www.canberratimes.com.au/news/local/news/general/jackie-chans-tears-for-greatest-mother/295366.aspx. பார்த்த நாள்: 6 June 2007. 
  15. 15.0 15.1 15.2 15.3 "Jackie Chan - Actor and Stuntman". BBC. 24 July 2001. பார்க்கப்பட்ட நாள் 6 June 2007.
  16. 16.0 16.1 "Jackie Chan, a martial arts success story". Biography. Fighting Master. Archived from the original on 3 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Jackie Chan". Biography. Ng Kwong Loong (JackieChanMovie.com). Archived from the original on 2 ஏப்ரல் 2004. பார்க்கப்பட்ட நாள் 9 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. Pollard, Mark. "Snake in the Eagle's Shadow". Movie review. Kung Fu Cinema. Archived from the original on 12 January 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  19. Pollard, Mark. "Drunken Master". Movie review. Kung Fu Cinema. Archived from the original on 12 January 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  20. 20.0 20.1 20.2 "Jackie Chan profile". Biography. JackieChanMovie.com. Archived from the original on 2 ஏப்ரல் 2004. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Project A Review". Film review. Hong Kong Cinema. பார்க்கப்பட்ட நாள் 3 August 2007.
  22. "Sammo Hung Profile". Kung Fu Cinema. Archived from the original on 29 May 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  23. "Yuen Biao Profile". Kung Fu Cinema. Archived from the original on 15 April 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  24. Mills, Phil. "Police Story (1985)". Film review. Dragon's Den. Archived from the original on 3 April 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  25. "Armour of God". jackiechanmovie.com. 2006. Archived from the original on 3 செப்டம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 20 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "Drunken Master II – All-Time pen 15 sexy time 100 Movies". Time Magazine. Archived from the original on 11 ஜூலை 2005. பார்க்கப்பட்ட நாள் 11 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. Kozo, Kozo. "Police Story 4 review". Film review. LoveHKFilm. பார்க்கப்பட்ட நாள் 11 July 2007.
  28. Dickerson, Jeff (4 April 2002). "Black Delights in Demolition Man". The Michigan Daily. Archived from the original on 24 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  29. Morris, Gary (1996–04). "Rumble in the Bronx review". Film review. Bright Lights Film Journal. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |date= (help)
  30. "Rush Hour Review". Film Review. BeijingWushuTeam.com. 15 September 1998. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: |first= missing |last= (help)
  31. Jackie Chan.Gorgeous, commentary track[DVD].Uca Catalogue.
  32. Gerstmann, Jeff (14 January 2007). "Jackie Chan Stuntmaster Review". Gamespot. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  33. 33.0 33.1 Chan, Jackie. "Jackie Chan Biography". Official website of Jackie Chan. Archived from the original on 9 June 2007. பார்க்கப்பட்ட நாள் 10 June 2007.
  34. "New Police Story Review". LoveHKFilm. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  35. "The Myth Review". Karazen. Archived from the original on 28 அக்டோபர் 2005. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  36. "Rob-B-Hood Review". HkFlix. Archived from the original on 11 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  37. "Rush Hour 3 Box Office Data". Box Office Mojo. 2006. பார்க்கப்பட்ட நாள் 27 August 2007.
  38. "Jackie Chan's 'Rush Hour 3' performs poorly at Hong Kong box office". Associated Press. International Herald Tribune. 21 August 2007. Archived from the original on 23 October 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  39. "The Forbidden Kingdom". IMDb. பார்க்கப்பட்ட நாள் 9 October 2007.
  40. "Jackie Chan and Jet Li Will Fight In "Forbidden Kingdom"". CountingDown. 16 May 2007. Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: |first= missing |last= (help)
  41. "'Panda' battle-ready". Variety. பார்க்கப்பட்ட நாள் 16 October 2007.
  42. "'Wushu' gets its wings". Variety. பார்க்கப்பட்ட நாள் 16 October 2007.
  43. "Shinjuku Incident Starts Shooting in November". News Article. jc-news.net. 9 July 2007. Archived from the original on 2 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 July 2007.
  44. Chan, Jackie (29 April 2007). "Singapore Trip". Blog. Official Jackie Chan Website. Archived from the original on 22 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  45. "Jackie Chan's Operation Condor 3". News Article. Latino Review Inc. 1 August 2007. பார்க்கப்பட்ட நாள் 20 August 2007.
  46. "Jackie Chan to star in Hollywood spy comedy".
  47. ப்ரியன் வார்மோத், ‘கராட்டே கிட்’ ரீமேக் கீப்பிங் டைட்டில், டேக்கிங் ஜாடென் ஸ்மித் டு சீனா, MTV மூவி ப்ளாக் , மே 6, 2009
  48. ஸ்ட்ராங் சூட் ஜாக்கி சான் அட்மிட்ஸ் டு யூசிங் ஸ்டண்ட் டபுல்ஸ். த ஏஜிங் ஆக்ஷன் ஸ்டார், ஹூ ஹாஸ் லாங் போஸ்டட் ஆஃப் டூயிங் ஆல் ஹிஸ் ஒவ்ன் ஸ்டண்ட்வொர்க், யூஸ்ட் அஸ் மெனி அச் செவ்ன் ஸ்டாண்ட் இன்ஸ் ஆன் த டெக்ஸிடோ , http://www.ew.com/ew/article/0,,410040,00.html பரணிடப்பட்டது 2010-03-22 at the வந்தவழி இயந்திரம்
  49. Jackie Chan.Police Story Commentary[DVD].Hong Kong:Dragon Dynasty.
  50. 50.0 50.1 Rogers, Ian. "Jackie Chan Interview". FilmZone. Archived from the original on 10 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  51. "January 2003 News Archives". Jackie Chan Kids. 3 January 2003. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007.
  52. Dixon, Melinda (29 April 2006). "Dragon Lord Review". DVD Bits. Archived from the original on 7 April 2007. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007.
  53. Chan, Jackie. "The Official Jackie Chan Injury Map". Jackie Chan Kids. பார்க்கப்பட்ட நாள் 14 June 2007.
  54. "Jackie Chan re-injures back while filming". The Star. 27 August 2007. Archived from the original on 25 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  55. "Jackie Chan Admits He Is Not a Fan of 'Rush Hour' Films". 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 1 October 2007.
  56. "Jackie Chan: From action maestro to serious actor". China Daily. 24 September 2004. http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/24/content_377571.htm. பார்த்த நாள்: 9 June 2007. 
  57. 57.0 57.1 Jackie Chan.New Police Story[DVD].Hong Kong:JCE Movies Limited.
  58. "For the first time, Chan plays an unconventional role in his newest comedy (成龙首次尝试反派 联手陈木胜再拍动作喜剧)". Sina (in Simplified Chinese). 30 December 2005. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  59. "Voice actors of Jackie Chan Adventures". Cast list. VoiceChasers. Archived from the original on 4 December 2010. பார்க்கப்பட்ட நாள் 7 June 2007.
  60. "Jackie Chan on the Reasons Behind Producing The Disciple". Wu-Jing.org. Archived from the original on 10 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 May 2008.
  61. "龍的傳人 The Disciple". BTV.com. Archived from the original on 26 February 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2008.
  62. "Jackie Chan names Jack Tu His Disciple". Wu-Jing.org. Archived from the original on 28 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  63. "Jackie Chan: Kung Fu Fighter Believes There's More to Him Than Meets the Eye". hkvpradio (Hong Kong Vintage Pop Radio). Archived from the original on 20 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  64. Jackie Chan.Rob-B-Hood[DVD].Hong Kong:JCE Movies Limited.
  65. 警務處 (香港皇家警察招募) - 警察故事[Television advertisement].Hong Kong:ஹொங்கொங் காவல் துறை.
  66. "We Are Ready". Jackie Chan Kids. பார்க்கப்பட்ட நாள் 20 October 2008.
  67. "Jackie Chan releases Olympic album". News report. China Daily. பார்க்கப்பட்ட நாள் 20 October 2008.
  68. "Beijing Olympic closing ceremony press conference". TVB News World. Archived from the original on 19 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2 September 2007.
  69. "Jackie Chan From Hong Kong to Receive Stunt Award". Xinhuanet. 16 May 2002. http://news.xinhuanet.com/english/2002-05/16/content_394957.htm. பார்த்த நாள்: 11 June 2007. 
  70. Ortega, Albert. "Jackie Chan's Walk of Fame Star". EZ-Entertainment. Archived from the original on 25 ஏப்ரல் 2003. பார்க்கப்பட்ட நாள் 5 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  71. Honeycutt, Kirk (30 July 2001). "Rush Hour 2 Review". Hollywood Reporter. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 19 June 2007.
  72. Ebert, Roger (27 September 2002). "The Tuxedo Review". Official website of Roger Ebert. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 19 June 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  73. Pierce, Nev (3 April 2003). "Shanghai Knights Review". BBC film. பார்க்கப்பட்ட நாள் 19 June 2007.
  74. Honeycutt, Kirk (16 June 2004). "Around the World in 80 Days Review". Hollywood Reporter. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 19 June 2007.
  75. Hebert, James. "Inspiration for Dragonball". San Diego Tribune. பார்க்கப்பட்ட நாள் 6 August 2007.
  76. "Masters of the Martial Arts". Celebrity Deathmatch. 1999. No. 12, season 1.
  77. "Breaking Out Is Hard to Do". Family Guy. 17 July 2005. No. 9, season 4.
  78. Orecklin, Michael (10 May 1999), "Pokemon: The Cutest Obsession", Time Magazine{{citation}}: CS1 maint: date and year (link)
  79. Chan, Jackie. "Note From Jackie: My Loyalty Toward Mitsubishi 19 June 2007". Official website of Jackie Chan. Archived from the original on 2 July 2007. பார்க்கப்பட்ட நாள் 6 February 2008.
  80. "E! Online Question and Answer (Jackie Chan)". Jackie Chan Kids. பார்க்கப்பட்ட நாள் 6 February 2008.
  81. Chan, Jackie. "Trip to Shanghai; Car Crash!! 18-25 April 2007". Official website of Jackie Chan. Archived from the original on 5 February 2008. பார்க்கப்பட்ட நாள் 6 February 2008.
  82. "Jackie Chan Video Games". Movie Game Database. 17 December 2004. Archived from the original on 30 August 2007. பார்க்கப்பட்ட நாள் 1 August 2007.
  83. "Jackie Chan Wants to Be Role Model". The Associated Press (The Advocate). 4 August 2006 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927220343/http://www.stamfordadvocate.com/entertainment/movies/sns-ap-jackie-chan,0,981212.story?coll=sns-ap-movie-headlines. பார்த்த நாள்: 11 June 2007. 
  84. Webb, Adam (29 September 2000). "Candid Chan: Action star Jackie Chan takes on students' questions". The Flat Hat. பார்க்கப்பட்ட நாள் 11 June 2007.
  85. Australia National University(24 February 2006). "ANU to name science centre after Jackie Chan". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 10 June 2007.
  86. "Biography of Jackie Chan (Page 8)". Biography. Tiscali. Archived from the original on 17 August 2007. பார்க்கப்பட்ட நாள் 5 August 2007.
  87. Jackie Chan.Clean Hong Kong[Television].Hong Kong:Hong Kong Government.
  88. "Hong Kong marshal Jackie Chan to Boost Nationalism". Agencies (China Daily). 18 May 2005. http://www.chinadaily.com.cn/english/doc/2005-05/18/content_443738.htm. பார்த்த நாள்: 11 June 2007. 
  89. "Jackie Chan, Chow Yun-fat among VIPs invited to HK Disneyland opening". The Associated Press. Sina. 18 August 2005. பார்க்கப்பட்ட நாள் 12 June 2007.
  90. Schwarzenegger, Arnold. "Anti-piracy advert". Advertisement. United States Government. பார்க்கப்பட்ட நாள் 10 September 2007. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  91. Park, Monterey (11 March 2007). "Jackie Chan Kicks Off Sheriff's Recruitment Effort". CBS. Archived from the original on 11 June 2008. பார்க்கப்பட்ட நாள் 9 June 2007.
  92. "Jackie Chan museum planned in Shanghai – Yahoo! News". Archived from the original on 2009-10-05. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  93. "Taiwan election biggest joke in the world – China Daily".
  94. "Taiwan lawmaker calls for Jackie Chan movie ban – China Daily". {{cite web}}: line feed character in |title= at position 48 (help)
  95. "Protestors blast Jackie Chan for criticizing Taiwan elections – People News". Archived from the original on 2012-09-09. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  96. "Protesters greet Jackie Chan in Taiwan – ABC News (Australia)".
  97. "Spokesman: Jackie Chan comments out of context – Yahoo! News". Archived from the original on 2009-04-27. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  98. "Jackie Chan: Chinese people need to be controlled – Yahoo! News". Archived from the original on 2009-04-21. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  99. "Jackie Chan warns over China 'chaos': report - Yahoo! News". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  100. "Chinese shouldn't get more freedom, says Jackie Chan". The Independent. 20 April 2009. http://www.independent.co.uk/news/world/asia/chinese-shouldnt-get-more-freedom-says-jackie-chan-1671337.html. பார்த்த நாள்: 14 June 2009. 
  101. "Jackie Chan Faces Film Boycott for Chaotic Taiwan Comments – Bloomberg.com".
  102. "Jackie Chan's 'freedom' talk sparks debate". People's Daily. 22 April 2009. http://english.peopledaily.com.cn/90001/90776/90882/6642022.html. பார்த்த நாள்: 14 June 2009. 
  103. "Fashion leap for Jackie Chan as Kung-fu star promotes new clobber". Agence France Press (JC-News). 2 April 2004 இம் மூலத்தில் இருந்து 9 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120309185233/http://jc-news.net/news.php?id=316. பார்த்த நாள்: 15 June 2007. 
  104. "Jackie Chan's business empire kicks into place". Taipei Times. 11 April 2005. http://www.taipeitimes.com/News/biz/archives/2005/04/11/2003250063. பார்த்த நாள்: 20 October 2008. 
  105. "Jackie Chan Urges China to 'Have a Heart' for Dogs". PETA. Archived from the original on 3 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 5 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  106. "UNICEF People: Jackie Chan". UNICEF. Archived from the original on 16 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 5 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  107. "Jackie Chan looks to bequeath half of wealth". Reuters (The Financial Express). 29 June 2006 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061208082904/http://www.financialexpress.com/latest_full_story.php?content_id=132221. பார்த்த நாள்: 12 June 2007. 
  108. "Save China's Tigers: Patrons and Supporters". SaveChina'Tigers.org. 22 August 2008 இம் மூலத்தில் இருந்து 25 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120225003233/http://english.savechinastigers.org/node/139. 
  109. Corliss, Richard. "The Little Guy's Greatest Stunt". TIMEasia. Archived from the original on 25 April 2002. பார்க்கப்பட்ட நாள் 27 August 2007.
  110. எம்பையர் மேகசின் இஷூ 1004: p5 அன் இண்டெர்வியூ வித் ஜாக்கி சான்.

கூடுதல் வாசிப்பு தொகு

  • பூஸ், தார்ஸ்டன்; ஓயெட்டெ, சில்கீ. ஹாங் காங், meine Liebe - Ein spezieller Reiseführer . ஷாக்கெர் மீடியா, 2009. ISBN 978-3-86858-255-0 (செருமன் மொழி)
  • பூஸ், தார்ஸ்டன். Der deutsche Jackie Chan Filmführer . ஷாக்கெர் மீடியா, 2008. ISBN 978-3-86858-102-7 (செருமன் மொழி)
  • சான், ஜாக்கி மற்றும் ஜெஃப் யாங். ஐ அம் ஜாக்கி சான்: மை லைஃப் இன் ஆக்ஷன் . நியூ யார்க்: பாலண்டைன் புக்ஸ், 1999. ISBN 0-345-42913-3. ஜாக்கி சானின் சுயசரிதை.
  • கூப்பர், ரிச்சர்ட் மற்றும் மைக் லீடர். 100% ஜாக்கி சான்: த எசன்ஷியல் கம்பேனியன் . லண்டன்: டைட்டன் புக்ஸ், 2002. ISBN 1-84023-491-1.
  • கூப்பர், ரிச்சர்ட். மோர் 100% ஜாக்கி சான்: த எசென்ஷியல் கம்பேனியன் தொகுதி 2 . லண்டன்: டைட்டன் புக்ஸ், 2004. ISBN 1-84023-888-7.
  • கோர்கொரான், ஜான். த அனாத்தரைஸ்டு ஜாக்கி சான் என்சைக்லோபீடியா: ஃப்ரம் ப்ராஜக்ட் A டு ஷாங்காய் நூன் அண்ட் பியாண்ட் . சிகாகோ: காண்டெம்ப்பரரி புக்ஸ், 2003. ISBN 0-07-138899-0.
  • பாக்ஸ், டான். ஜாக்கி சான். ரெயிண்ட்ரீ ஃப்ரீஸ்டைல் . சிகாகோ, Ill.: ரெயிண்ட்ரீ, 2006. ISBN 1-4109-1659-6.
  • கெண்ட்ரி, க்ளைடு. ஜாக்கி சான்: இன்சைட் த ட்ரேகன் . டல்லாஸ், டெக்ஸ்.: டெய்லர் பப், 1997. ISBN 0-87833-962-0.
  • லீ ப்லான்க், மிக்கெல்லா மற்றும் கோலின் ஓடெல். த பாக்கெட் எசென்ஷியல் ஜாக்கி சான் . பாக்கெட் எசென்ஷியல்ஸ். ஹார்பெண்டெர்ன்: பாக்கெட் எசென்ஷியல்ஸ், 2000. ISBN 0-87833-962-0.
  • மேஜர், வேட். ஜாக்கி சான் . நியூ யார்க்: மெட்ரோபுக்ஸ், 1999. ISBN 1-56799-863-1.
  • மோசர், லியோ. மேட் இன் ஹாங் காங்: டை ஃபில்ம் வோன் ஜாக்கி சான் . பெர்லின்: ஸ்வார்ஸ்கார்ப்ஃப் & ஸ்வார்ஸ்கார்ப்ஃப், 2000. ISBN 3-89602-312-8. (செருமன் மொழி)
  • புலொஸ், ஜேமி. ஜாக்கி சான் . தற்காப்புக் கலை மாஸ்டர்கள். நியூ யார்க்: ரோசென் பப்ளிகேஷன். குரூப், 2002. ISBN 0-8239-3518-3.
  • ரோவின், ஜெஃப் மற்றும் கேத்தலீன் ட்ரேசி. த எசென்ஷியல் ஜாக்கி சான் சோர்ஸ்புக் . நியூ யார்க்: பாக்கெட் புக்ஸ், 1997. ISBN 0-671-00843-9.
  • ஸ்டோன், ஆமி. ஜாக்கி சான் . டுடே'ஸ் சூப்பர் ஸ்டார்ஸ்: எண்டெர்டெயின்மெண்ட். மில்வாக்கி, விஸ்.: காரெத் ஸ்டீவன்ஸ் பப்ளிகேஷன்ஸ், 2007. ISBN 0-8368-7648-2.
  • விட்டெர்ஸ்டேட்டர், ரெனீ. டையிங் ஃபார் ஆக்ஷன்: த லைஃப் அண்ட் ஃபில்ம்ஸ் ஆஃப் ஜக்கி சான் . நியூ யார்க்: வார்னெர், 1998. ISBN 0-446-67296-3.
  • வோங், கர்ட்டிஸ் எஃப்., மற்றும் ஜான் ஆர். லிட்டில் (எடிட்டர்கள்.). ஜாக்கி சான் அண்ட் த சூப்பர்ஸ்டார்ஸ் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் . த பெஸ்ட் ஆஃப் இன்சைடு குங் ஃபூ . லிங்க்கன்வுட், Ill.: மெக்க்ராவ்-ஹில், 1998. ISBN 0-8092-2837-8.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கி_சான்&oldid=3869369" இலிருந்து மீள்விக்கப்பட்டது