டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers) என்பது டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பொம்மை வரிசை (Transformers Toy Line) அடிப்படையில் 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை மற்றும் அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் எந்திரங்கள் உயிரூட்டப்பட்டும் மற்றைய கதாபாத்திரங்கள் உண்மையாகவும் உள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாக தயாரிப்பாளராகவும், மைக்கேல் பே இயக்குனராகவும் பணியாற்றினர். இப்படத்தின் கதாநாயகர் சாம் விட்விக்கி (ஷியா லாபுப்) நல்லவர்களான ஆட்டோபாட்களும் தீய டிசெப்டிகான்களுக்கும் (இரு தரப்புக்களாக பிரிந்து, தங்களை மாறுவேடத்தில் அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் இயந்திரங்களாக மாற்றகூடிய திறன் கொண்ட வேற்றுக்கிரகவாசிகள் ) இடையில் நடக்கும் போரில் ஈடுபடும் இளைஞனாக நடித்துள்ளார். டிசெப்டிகான்கள், எந்திர இனமே உருவாக முதற்காரண பொருளாகவிருந்த ஆல்ஸ்பார்க்கை (AllSpark) தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து பூமியில் இருக்கும் இயந்திரங்களை உயிர்ப்பித்து, ஒரு இராணுவத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் பூமிக்கு வந்தனர். இத்தீய செயலை தடுக்க போராடும் ஆட்டோபாட்களுக்கு உதவும் மேலதிகக் கதாபாத்திரங்களாக மேகன் பாக்ஸ்,, ஜோஷ் டுஹாமெல், டைரஸ் கிப்சன், ஜோன் வோய்ட், அந்தோனி ஆண்டர்சன் மற்றும் ஜான் டர்டரோ ஆகியோரும், அத்துடன் குரல் நடிகர்களான பீட்டர் கல்லன் (ஆப்டிமஸ் பிரைம்) மற்றும் ஹ்யூகோ வீவிங் (மெகாட்ரான்)ஆகியோரும் நடித்துள்ளனர்.
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் | |
---|---|
இயக்கம் | மைக்கேல் பே |
தயாரிப்பு | இயன் பிரைசு டொம் டிசான்டோ லொரன்சோ போனவெண்டுரா டொன் மர்பி |
இசை | ஸ்டீவ் யப்லோன்சுகி |
நடிப்பு | ஷியா லாபுப் மேகன் ஃபாக்சு ஜோஷ் டுஹாமெல் டைரஸ் கிப்சன் ஜோன் வோய்ட் அந்தோனி ஆண்டர்சன் ஜான் டர்டரோ |
ஒளிப்பதிவு | மிட்செல் அமண்ட்சன் |
படத்தொகுப்பு | பால் ரூபெல் க்ளென் சுகான்டில்பெரி |
கலையகம் | டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ் |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 28, 2007(ஆஸ்திரேலியா) சூலை 3, 2007 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 144 மணித்துளிகள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
மொத்த வருவாய் | $709,709,780 |
பின்னர் | டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் |