மேதகு 2

2022 இல் வெளியான தமிழ் திரைப்படம்

மேதகு 2 (Methagu 2) என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தின் முதல் பாகமான மேதகு படத்தை த. கிட்டு இயக்கிய நிலையில், இரண்டாம் பாகமான மேதகு 2 படத்தை இரா. கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை மேதகு திரைக்களம் உலக தமிழர்கள் ஆதரவோடு தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் குமார் என்பவரால் அமைக்கபட்டுள்ளது. இப்படம் 19 ஆகத்து 2022 அன்று வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காது என்பதால் மேலதிக ஊடக சேவை இயங்குதளங்களான 'மூவிவுட்', 'தமிழ்ஸ் ஒடிடி' ஆகிய மூலம் நேரடியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இத்திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு போராளி இயக்கமாக வளர்ந்த வரலாற்றை கூறுகிறது.

மேதகு 2
இயக்கம்இரா. கோ. யோகேந்திரன்
தயாரிப்புமேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிர்வாகிகள் : சி. குமார், தஞ்சை &

சுமேசு குமார், டென்மார்க்
கதைதிருக்குமரன் (உரையாடல்)
இசைபிரவீன் குமார்
நடிப்புகௌரிசங்கர்
நாசர்
ஒளிப்பதிவுவினோத்
கலையகம்தமிழ் ஈழ திரைக்களம்
விநியோகம்மூவிவுட், தமிழ்ஸ் ஒடிடி (ஓ.டி.டி தளம்)
வெளியீடு26 ஆகத்து, 2022
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதையின் சுருக்கம் தொகு

இப்படமானது யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு, 1983 கறுப்பு யூலை நிகழ்வு உள்ளிட்ட 1970களுக்குப் பிறகு அடுத்துவந்த 12 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதன்மை நிகழ்வுகளை ஆவணப் படத் தன்மையுடன் விவரிக்கிறது. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் மெல்ல ஒரு போராளி இயக்கமாக மெல்ல மெல்ல வளர்ந்தவிதம் பற்றியும், அதற்கு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கிடைத்த ஆதரவு, இயக்கங்கள் மீதான இந்திரா காந்தி, இராசீவ் காந்தி ஆகியோரின் அணுகுமுறை போன்றவை காலவரிசைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடிகர்கள் தொகு

  • கௌரிசங்கர் (தலைவர் பிரபாகரன்)
  • நாசர் கௌரவத் தோற்றம்

தயாரிப்பு தொகு

வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'மேதகு-1' முதல் பாகம் தயாரிக்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாக 'மேதகு-2' திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை உலகத்தமிழர்கள் நன்கொடை வாயிலாக மேதகு திரைக்களம் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இந்நிறுவனம் தஞ்சை குகன் குமார், கவிஞர் திருக்குமரன் மற்றும் சுமேஸ்குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிக்கப்படும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இத்திரைப்படத்தில் இயக்குனராக இரா. கோ. யோகேந்திரன், பிரவீன் குமார் இசையமைப்பாளராகவும் பணியாற்ற, வினோத் ஒளிப்பதிவை மேற்கொண்டார்.[1]

வெளியீடு தொகு

இப் படம் 19 ஆகத்து 2022 அன்று வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மேலதிக ஊடக சேவை இயங்குதளங்களான 'மூவிவுட்', 'தமிழ்ஸ் ஒடிடி' ஆகியவற்றின் மூலம் ஆகத்து 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியானது.[2] முன்னதாக படத்தின் முன்னோட்டம் 2022 நவம்பர் 26 அன்று பிரபாகரனின் 67 ஆவது இறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.[3][4]

வரவேற்பு தொகு

விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சி, கட்டமைப்பு, ஆயுத பலம், அவர்களின் தாக்குதல் மற்றும் உலக நாடுகளின் அரசியல் தந்திரங்களை முறியடித்தல் என பல வரலாற்று சம்பவங்களை காட்சிகள் மூலம் நம் கண் முன் நிறுத்திய இயக்குநரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிரபாகரன் மற்றும் அவர் தொடர்பான அரசியல் நிகழ்வுகளை மிக சாதாரணமான முறையில் படமாக்கியிருப்பது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. என்று aanthaireporter.com விமர்சகர் எழுதியுள்ளார்.[5] நாசர் அத்தியாயம் படத்தின் விளம்பரத்திற்கு உதவுமென உபயோகித்திருப்பார்கள் போல! என்று இது தமிழ் டாட்காமின் விமர்சகர் கூறியுள்ளார்.[6] மேதகு படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வீரியம் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் உரிமை மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருப்பதால் இந்த படைப்பை வரவேற்கலாம். என்று வீரகேசரியின் விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.[7]

தொடர் பாகங்கள் தொகு

முன்னதாக மேதகு முதல்பாகம் திரைப்படம் 25 சூன், 2021 அன்று வெளியாக விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றநிலையில், அதன் இரண்டாம் பாகம் 19 ஆகத்து 2022 அன்று வெளியானது. மேதகு மூன்றாம் பாகம் வரப்போவதாக மேதகு இரண்டாம் பாகம் திரைப்பட முடிவில் காட்டப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "ஓடிடி-யில் மேதகு- 2". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  2. Editor, Web (2022-08-24). "மேதகு-2 ஆகஸ்ட் 26இல் தமிழ்ஸ் ஓடிடியில் வெளியீடு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03. {{cite web}}: |last= has generic name (help)
  3. Webdunia. "இந்தியாவில் ஓடிடியில் வெளியாகும் மேதகு 2… பின்னணி என்ன?". Webdunia. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  4. ""தமிழினத்துக்கு எதிரா எந்தக் கொம்பன் வந்தாலும் விடமாட்டேன்"- வெளியானது 'மேதகு 2' ட்ரெய்லர்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  5. "மேதகு 2 - விமர்சனம்!". AanthaiReporter.Com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  6. R, Dinesh. "மேதகு – 2 விமர்சனம்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  7. "மேதகு - 2 : விமர்சனம்". Virakesari.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதகு_2&oldid=3660740" இலிருந்து மீள்விக்கப்பட்டது