நாங்க
நாங்க (Naanga) 2012இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். செல்வா ,இயக்கிய இந்த படத்தில், முன்னணி வேடங்களில் புதுவரவுகள் நடித்துள்ளனர். இத்திரைப்படம், செல்வாவின் இயக்கத்தில் வெளியான 25 வது படமாகும். இப் படத்தின் கதை, திருச்சி கல்லூரியின் 1985ம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் 2011இல் சந்திக்கின்றனர். அப்போது ஏற்படும் சுவாரசியமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமந்துள்ளது.[1] இத்திரைப்படம், மார்ச் 9, 2012 இல் வெளியிடப்பட்டது.[2]
நாங்க | |
---|---|
இயக்கம் | செல்வா |
திரைக்கதை | செல்வா |
இசை | பாலபாரதி |
நடிப்பு | நிவாஸ் ஆதித்யன் சஞ்சய் கிருஷ்ணா முனீஷ் வினோத் உதய் ஷாகிர்r விருமாண்டி அஸ்வின் ராஜா விஷ்ணுபிரியா ஷிவானி பாய் வைதேகி அரசி |
ஒளிப்பதிவு | பி. பால முருகன் |
கலையகம் | சினிமா கொட்டகை |
வெளியீடு | மார்ச்சு 9, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு தொகு
தயாரிப்பு தொகு
படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில், செல்வா பிரபலமான திரைப்பட நடிகர்களின் குழந்தைகளை நடிக்க வைத்திருந்தார். சஞ்சய் கிருஷ்ணா நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின், மகனாவார். நிவாஸ், நடிகர் ஆதித்யனின் மகன், முனீஷ், தெலுங்கு இசையமைப்பாளர் வாசு ராவின் மகன், தயாரிப்பாளர் குருசாமியின் மகன் வினோத் மற்றும் திரைப்பட விநியோகஸ்தரான சந்திரசேகரின் மகன் உதய் ஆகியோர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[3][4] திரைப்படத்தின் எதிரி நாயகன் பாத்திரத்தில் பிரபலமான பின்னணி பாடகர் மனோவின் மகன் ஷாகிர் நடித்தார். அதே நேரத்தில் நகைச்சுவை நடிகர் பாஸ் என்கிற பாஸ்கரனில் தோன்றிய தயாரிப்பாளர் வி. சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.[5] விஷ்ணு ப்ரியா, ஷிவானி பாய், வைதேகி மற்றும் அரசி ஆகியோர் முன்னணி பெண் கதாபாத்திரங்களாக, தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார்கள்.[6] முன்னாள் முன்னணி நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6]
சிறந்த நடிகர் அஜித் குமாரை அறிமுகப்படுத்திய, செல்வாவின் அமராவதி (1993) திரைப்படத்தின் ஒரு பகுதியாக பணியாற்றிய பால பாரதி மற்றும் பாலமுருகன், முறையே, இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்கள்.[7] இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பிறகு செல்வாவுடன் மீண்டும் இணைந்தனர். 1980 களில் இளையராஜா பயன்படுத்திய அதே ராகங்களில் படத்திற்காக எட்டு பாடல்களை பால பாரதி இசையமைத்துள்ளார்.[8] இந்திய திரைப்படத்துறையில் படத்தொகுப்பாளராக பணியாற்றும் சுரேஷ் உர்ஸின் மகன் ராகவன் உர்ஸ் இப் படத்திற்கு படத்தொகுப்பாளராக செல்வா அறிமுகப்படுத்தியுள்ளார்.[6]
வரவேற்பு தொகு
தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் எம். சுகந்த் 5 க்கு 3 என்ற அளவில் மதிப்பீடு செய்து, "இந்த கதையில் வரும் பரபரப்பான காட்சிகள் கரடுமுரடான உணர்வை உண்டாக்குகிறது" என்று கூறியுள்ளார்.[9] தனது விமர்சனத்தில் இந்து விமர்சகர் மாலதி ரங்கராஜன் பின்வருமாறு எழுதினார்: இத் திரைப்படம், "புதிய முகங்களைக் கொண்ட ஒரு புதிய அணுகுமுறை, ஒரு அரிய கதையம்சம், இது ஒரு முழுமையான குழுவிற்கு சமமான முக்கியத்துவம் தந்த திரைப்படமாகும் என்றும், இதில் வருகின்ற ஐந்து - சிறந்த சித்தரிப்புகள், ஒரு சில வழக்கமான சொற்றொடர்கள், நகைச்சுவை காட்சிகளின் கலவையாக செல்வாவின் "நாங்க " திரைப்படம் உள்ளது என்று கூறியுள்ளார்.[10]
பிகைண்ட்வுட்ஸ்.காமின் ஒரு விமர்சகர் இப் படத்திற்கு 5க்கு 1.5 மதிப்பீடு வழங்கினார்,[11]இந்தியாகிளிட்ஸ்.காம் இவ்வாறு மேற்கோளிட்டுள்ளது: நாங்க" திரைப்படம், 1980 களின் சுறுசுறுப்பு மற்றும் மனநிலையை சரியான முறையில் மறுபடியும் மறுபரிசீலனை செய்வதன் மூலம் செல்வா மீண்டும் ஒரு மதிப்புமிக்க கதையைக் கூறுகிறார்." என்று மிதமிஞ்சி வாக்குறுதி அளித்துள்ளது[12] நௌரன்னிங்.காமிலிருந்து ரோஹித் ராமச்சந்திரன் இப் படம் "நேர்மையான தோல்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.[13]
குறிப்புகள் தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

- ↑ 6.0 6.1 6.2 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).