அமராவதி (திரைப்படம்)

செல்வா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அமராவதி (Amaravathi) 1993-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்திருந்தனர். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு அஜித்குமார் அறிமுகமானார். ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.[1]

அமராவதி
இயக்கம்செல்வா
தயாரிப்புசோழா போன்னுரங்கன்
கதைசெல்வா
ஜே. ரமேஷ் (வசனங்கள்)
இசைபாலபாரதி
நடிப்புஅஜித் குமார்
சங்கவி
நாசர்
தலைவாசல் விஜய்
சார்லி
ஒளிப்பதிவுபி. பாலமுருகன்
படத்தொகுப்புராஜூ
கலையகம்சோழா கிரியேஷன்சு
விநியோகம்சோழா கிரியேஷன்சு
வெளியீடுமே 24, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு32 லட்சங்கள்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இசையமைப்பாளர் பாலபாரதி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார்.[2] அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.

எண் பாடல்கள் பாடியவர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அடி சோக்கு சுந்தரி எஸ். பி. பாலசுப்பிரமணியம், மால்குடி சுபா வைரமுத்து 04:58
2 ஆ ஆ கனவேதானா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:34
3 பூ மலர்ந்தது மின்மினி 04:13
4 புத்தம் புது மலரே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:02
5 தாஜ்மகால் தேவையில்லை எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:09
6 உடல் என்ன உயிர் என்ன அசோக் 04:40

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_(திரைப்படம்)&oldid=3942908" இலிருந்து மீள்விக்கப்பட்டது