பரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.[1][2] இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது. ஊடகங்களில் பரவலான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

பரியேறும் பெருமாள்
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புபா. ரஞ்சித்
கதைமாரி செல்வராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புகதிர்
ஆனந்தி
ஒளிப்பதிவுஸ்ரீதர்
படத்தொகுப்புசெல்வா ஆர்கே
கலையகம்நீலம் புரொடக்சன்சு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

அக்டோபர் 2016 இல் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்சைத் தொடங்கிய இயக்குநர் பா. ரஞ்சித், தனது நிறுவனத்தின் முதல் திரைப்படத்தினை ("பரியேறும் பெருமாள்") மாரி செல்வராஜ் இயக்கப்போவதாக திசம்பர் 2016 இல் அறிவித்தார்.[3] திருநெல்வேலியைப் பின்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் கதிர் மற்றும் ஆனந்தி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பா, ரஞ்சித்தின் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. முதல் படம் அல்ல, முதல் கோபம் - சிஷ்யனை வாழ்த்திய இயக்குனர் ராம்
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pa-ranjith-picks-kathir-anandhi-for-his-venture/articleshow/56272390.cms
  3. http://www.thehindu.com/news/cities/chennai/Pa.-Ranjith-ventures-into-production/article16073852.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.
  5. http://www.indiaglitz.com/pa-ranjith-production-venture-pariyerun-perumai-kathir-anandi-mari-selvaraj-santhosh-narayanan-tamil-news-175682.html

வெளியிணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பரியேறும் பெருமாள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரியேறும்_பெருமாள்&oldid=3848263" இலிருந்து மீள்விக்கப்பட்டது