நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நட்சத்திரம் நகர்கிறது (Natchathiram Nagargiradhu) என்பது துசாரா விச்சயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் நடிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் இசை நாடகத் திரைப்படமாகும். பா. ரஞ்சித்தின் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதில் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டென்மாவை இசையமைத்துள்ளார்.[1][2][3][4]

நட்சத்திரம் நகர்கிறது
சுவரொட்டி
இயக்கம்பா. ரஞ்சித்
கதைபா. ரஞ்சித்
இசைடென்மா
நடிப்புகாளிதாஸ் ஜெயராம்
துசாரா விச்சயன்
கலையரசன்
ஒளிப்பதிவுஏ. கிசோர் குமார்
படத்தொகுப்புசெல்வா ஆர். கே.
கலையகம்யாழி பிலிம்ஸ்
நீலம் புரொடக்சன்ஸ்
வெளியீடுஆகத்து 31, 2022 (2022-08-31)
ஓட்டம்170 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தில் சில்வியாவாக நடித்த திருநங்கை நடிகை ஷெரின் செலின் மேத்யூ 17 மே 2022 அன்று கொச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.

நட்சத்திரம் நகர்கிறது 31 ஆகத்து 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5]

நடிகர்கள்

தொகு

 

வெளியீடு

தொகு

இப்படம் 31 ஆகத்து 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீட்டு ஊடகம்

தொகு

படத்தின் எண்ணியல் உரிமையை நெற்ஃபிளிக்சு நிறுவனம் கைப்பற்றியது. இப்படம் படம் 28 செப்டம்பர் 2022 முதல் நெற்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.[6]

வரவேற்பு

தொகு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம் சுகந்த், இப்படத்துக்கு 3.5/5 நட்சத்திர மதிப்பு அளித்தார். "காதல், சாதி, ஆணவக் கொலைகள், இசை போன்ற பல வடிவங்களின் கலவையாக இப்படம் உள்ளது. இவை உண்மையில் படத்திற்கு மிகவும் அண்மைக்கால அதிர்வை அளிக்கின்றன.[7] இதுவரையிலான பா. ரஞ்சித்தின் படங்களில் தனக்குப் பிடித்த படம் இது என்று இயக்குனர் அனுராக் காஷ்யப் குறிப்பிட்டார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pa Ranjith announces the release date of his next directorial 'Natchathiram Nagargirathu'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 August 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pa-ranjith-announces-the-release-date-of-his-next-directorial-natchathiram-nagargirathu/articleshow/93351904.cms. 
  2. "பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!". News18. 6 July 2022. https://tamil.news18.com/news/entertainment/cinema-pa-ranjith-natchathiram-nagargiradhu-first-look-released-767954.html. 
  3. "It's a wrap for 'Natchathiram Nagargirathu'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 January 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/its-a-wrap-for-natchathiram-nagargirathu/articleshow/88712497.cms. 
  4. "Pa Ranjith’s ‘Natchathiram Nagargirathu’ First Look Is All About Dushara Vijayan". The Quint. 6 July 2022. https://www.thequint.com/entertainment/celebrities/pa-ranjith-film-romance-natchathiram-nagargirathu-first-look-poster-love-is-political#read-more. 
  5. "Pa Ranjith's Natchathiram Nagargiradhu to hit screens on August 31". தி இந்து. 5 August 2022. https://www.thehindu.com/entertainment/movies/pa-ranjiths-natchathiram-nagargiradhuto-hit-screens-on-august-31/article65730804.ece. 
  6. "Latest Tamil movies, series streaming on OTT in 2022 – Netflix, Prime Video, Zee5, Hotstar, SonyLIV and aha". OTT Play.
  7. Suganth, M (30 August 2022). "Natchathiram Nagargiradhu Movie Review : A vivid contemplation on love in the time of honour killings". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/natchathiram-nagargiradhu/movie-review/93864802.cms. 
  8. "Anurag Kashyap reviews Pa Ranjith’s Natchathiram Nagargiradhu, calls it his favourite film: Saw the uncensored version". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 30 August 2022. https://www.hindustantimes.com/entertainment/tamil-cinema/anurag-kashyap-reviews-pa-ranjith-s-natchathiram-nagargiradhu-calls-it-his-favourite-film-saw-the-uncensored-version-101661840832376.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரம்_நகர்கிறது&oldid=4096276" இலிருந்து மீள்விக்கப்பட்டது