சார்லஸ் வினோத்

திரைப்பட நடிகர்

சார்லஸ் வினோத் (Charles Vinoth) என்பவர் ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராக தோன்றியுள்ளார்.[1]

தொழில்தொகு

கல்வியை முடித்த பின்னர், வினோத் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலைப்பார்த்துவந்தார். கப்பல் நிறுவனத்தின் வேலையைவிட்டு வெளியேறிய சூழலில் வினோத் சென்னையில் வீதி நாடகம், மேடை நாடகங்களில் நடித்துவந்தார். தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ஷூ மேக்கரில் பணிபுரிந்தார்.[2][3] இதன் பிறகு வினோத் திரைத்துறையில் நுழைந்தார் பா. ரஞ்சித்தின் தொடர்ச்சியான இரண்டு படங்களில் நடித்து முன்னேற்றம் கண்டார். மெட்ராஸ் (2014) திரைப்படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்ததால் இவர் , சிறந்த எதிர்நாயகனுக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், அதே நேரத்தில் கபாலி (2016) படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தார். ரஞ்சித் உடனான பணிகளில் இருந்து விலகி, வினோத் எதிர்மறையான கதாபாத்திரங்களான மாசு என்கிற மாசிலாமணி (2015) மற்றும் எய்தவன் (2017) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் .[4][5]

திரைப்படவியல்தொகு

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_வினோத்&oldid=3243756" இருந்து மீள்விக்கப்பட்டது