காளிதாஸ் ஜெயராம்

இந்திய திரைப்பட நடிகர்

காளிதாஸ் ஜெயராம் (Kalidas Jayaram) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படம் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் தோன்றினார்.[1] திரைப்பட நடிகர்கள் ஜெயராம் மற்றும் பார்வதியின் மகனான காளிதாஸ் தனது ஏழு வயதில் மலையாள திரைப்படமான கொச்சு கொச்சு சந்தோசங்கள் (2000) என்றப் படத்தில் அறிமுகமானார். பின்னர், இவர் என்டே வீடு அப்புவின்டேயம் (2003) என்றப் படத்தில் நடித்தார். இது இவருக்கு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது.[2] 2016ஆம் ஆண்டில், இவர் மீன் குழம்பும் மண் பானையும் (2016) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் பூமரம் (2018) என்ற மலையாளப் படத்திற்குத் திரும்பினார் .[3][4]

காளிதாஸ் ஜெயராம்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000; 2003
2016–present
பெற்றோர்ஜெயராம் மற்றும் பார்வதி
குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து சிறந்த குழந்தைக் கலைஞருக்கான விருதைப் பெற்ற காளிதாஸ்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தமிழ்நாட்டின் சென்னையில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் பார்வதி ஆகியோருக்கு இரண்டு குழந்தைகளில் மூத்தவராக காளிதாஸ் பிறந்தார். இவருக்கு மாளவிகா ஜெயராம் என்ற தங்கை உள்ளார். சென்னையின் பத்மா சேசாத்ரி பால பவனில் பத்தாம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.[5] பின்னர், கேரளாவின் கொச்சின் சாய்ஸ் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைப் படித்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் கட்புலத் தொடர்பாடலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

தனது 7 வயதில், சத்யன் அந்திகாட்டின் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் (2000) என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். இது மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. சிபி மலையில் இயக்கிய இவரது இரண்டாவது படமான என்டே வீடு அப்புவின்டேயம் (2003) படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2014ஆம் ஆண்டில், 8 வது விஜய் விருதுகளில் சூர்யா, அஜித் மற்றும் விஜய் ஆகியோருடன் நிகழ்ச்சிகளை வழங்கினார்.[6] பாலாஜி தரணீதரனின் [7] இரண்டாவது இயக்கமான [8] "ஒரு பக்கக் கதை" என்ற வெளிவராதத் தமிழ் படத்தில் காளிதாஸ் கதாநாயகனாக நடித்தார்.[9][10] 2014 இல் தொடங்கியது.[11] இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்ட்டது. இவரது இரண்டாவது தமிழ் திரைப்படம் மீன் குழம்பும் மண் பானையும் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. பின்னர், பூமரம் என்ற மலையாளத் திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.

விருதுகள்

தொகு
Year Award Category Film Result
2001 ஆசியாநெட் திரைப்பட விருதுகள்[12] சிறந்த குழந்தை நட்சத்திரம் கொச்சு கொச்சு சந்தோசங்கள் வெற்றி
2003 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா சிறந்த குழந்தை நட்சத்திரம் என்டே வீடு அப்புவின்டேயம்
கேரள மாநில திரைப்பட விருதுகள் சிறந்த குழந்தை நட்சத்திரம்
ஆசியாநெட் திரைப்பட விருதுகள் சிறந்த குழந்தை நட்சத்திரம்
2017 6வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகர் (தமிழ்) மீன் குழம்பும் மண் பானையும்
2019 ஆசியாநெட் திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகர் பூமரம்
2019 வனிதா திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகர்
2021 ப்ளாக்சிப் டிஜிட்டல் விருதுகள் சிறந்த நடிகர் (ஓடிடி தளம்) பாவக் கதைகள்
2021 பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் சிறந்த நடிகர்
2021 JFW திரைப்பட விருதுகள் சிறப்பு கவனம் (ஓடிடி தளம்)
2021 10வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்[13] சிறந்த துணை நடிகர் (தமிழ்)

குறிப்புகள்

தொகு
  1. "Jayaram's son Kalidas bubbles up in ad". manoramaonline.com. http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/jayaram-son-kalidas-bubbles-up-in-cadbury-dairy-milk-ad.html. 
  2. "Kalidas Jayaram wins National Award for Best Child Artist". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Star-kids-to-rock-M-Town/articleshow/14645272.cms. 
  3. "Poomaram Movie Review". http://www.manoramaonline.com/movies/movie-reviews/2018/03/15/poomaram-malayalam-movie-review-kalidas-abrid-shine.html. 
  4. "Kalidas to debut as hero in 'Oru Pakka Kathai'". mathrubhuminews.in இம் மூலத்தில் இருந்து 2016-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160312000608/http://mathrubhuminews.in/ee/ReadMore/9562/kalidas-to-debut-as-hero-in-oru-pakka-kathai/E. 
  5. "തെന്നിന്ത്യ കീഴടക്കാന്‍ കാളിദാസ്‌" [To Conquer the South – Kalidas] (in Malayalam). Mathrubhumi. 6 February 2015. Archived from the original on 12 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
  6. "Kalidas Jayaram performs at Vijay Awards". Filmibeat. http://www.filmibeat.com/malayalam/news/2014/waiting-for-a-perfect-launch-in-malayalam-kalidas-jayaram-158459.html. 
  7. "Kalidas Jayaram to star in Balaji Tharaneetharan's movie". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/Another-Star-Son-in-Kollywood/2014/09/03/article2411439.ece. 
  8. "Balaji Tharaneetharan's second movie". Only Kollywood. http://www.onlykollywood.com/jayaram-son-kalidas-to-play-hero-lead-role-balaji-tharaneetharan-oru-pakka-kathai/. 
  9. "Kalidas Jayaram's debut tamil movie". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/Another-Star-Son-in-Kollywood/2014/09/03/article2411439.ece. 
  10. "Kalidas Jayaram to start his career as lead hero in Oru Pakka Kathai". Mathrubhumi News இம் மூலத்தில் இருந்து 2016-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160312000608/http://mathrubhuminews.in/ee/ReadMore/9562/kalidas-to-debut-as-hero-in-oru-pakka-kathai/E. 
  11. "Kalidas Jayaram's debut movie will start rolling in October 2014". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/Another-Star-Son-in-Kollywood/2014/09/03/article2411439.ece. 
  12. Narayanan, Nirmal (12 March 2019). "Throwback: When Kalidas Jayaram said he is a much better actor than his father [VIDEO]". Indian Business Times. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  13. "Manju Warrier, Suriya, others win at SIIMA Awards: Full list of winners". The News Minute. 2021-09-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாஸ்_ஜெயராம்&oldid=3928846" இலிருந்து மீள்விக்கப்பட்டது