பேரன்பு

2017இல் ராம் இயக்கியத் திரைப்படம்

பேரன்பு (Peranbu ஆங்கில மொழி: Compassion), என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் ராம் ஆவார். இப்படத்தை பி. எல். தேனப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். இப்பத்தின் மலையாள மொழி பதிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.[2] இப்படமானது 2018 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள், ராபர்ட்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும், சூன் 17 அன்று சீனாவின், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[3][4][5]

பேரன்பு
சுவரிதழ்
இயக்கம்ராம்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைராம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
கலையகம்ஸ்ரீ இராஜலட்சுமி ஃபிலிம்ஸ்
வெளியீடு27 சனவரி 2018 (2018-01-27)(ராபர்ட்டாம் சர்வதேச திரைப்பட விழா)
1 பெப்ரவரி 2019 (உலகளவில்)[1]
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு7 கோடி (US$9,20,000)[சான்று தேவை]

மேலும் இப்படமானது 49 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.[6] 2019 பெப்ரவரி 1 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படமானது, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடிகர் மம்முட்டியை மனதில் கொண்டு இயக்குநர் ராம் திரைக்கதையை உருவாக்கினார்.[7][8] அவரது வழக்கமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோர் இப்படக் குழுவில் இணைக்கப்பட்டனர்.[9] சூலை மாதத்தில் இவரது 2013 ஆண்டைய திரைப்படமான தங்க மீன்கள், படத்தில் அறிமுகமான சாதனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[10]   பி. ஆர். தேனாபனின் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பிறகு, படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2016 சனவரியில் படத்தின் சுவரோட்டியை வெளியிட்டு படத்தின் பெயராக பேரன்பை ராம் அறிவித்தார்.[11][12] இப்படத்தில்   மம்மூட்டி குடும்பத்தலைவராகவும் அவரது மனைவியாக அஞ்சலியும் இவர்களின் மகளாக சாதனாவும் நடித்துள்ளனர்.[13]

படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2016 சனவரி 6 அன்று கொடைக்கானலில் துவங்கி, இரு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அடுத்தகட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[14] மம்முட்டி மற்றும் சாதனா சம்மந்தபட்ட காட்சிகள் சனவரி இறுதியில் படம்பிடிக்கப்பட்டன.[15] கேரளத்தைச் சேர்ந்த திருநங்கையும், வடிவழகியான அஞ்சலி அமீர் இப்படத்தில் முதன்முறையாக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார். இவரின் பாத்திரத்துக்கு மார்ச் முதல் நாள்வரை தயாரிப்பு தரப்பில் தகுந்த நபரை தேடிவந்தனர். மம்மூட்டி இவரை தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படத்தில் காணும்போது அறிந்து, ராமிற்கு இவரை பரிந்துரை செய்தபின், இவர் தேர்வு செய்யப்பட்டார்.[16][17] படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது சூலையில் இருந்து செப்டம்பர் வரை சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது.[18] 2016 நடுப்பகுதியில், ராமிடம் மம்மூட்டி சொன்ன ஆலோசனைக்குப் பிறகு, இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டது.[2][7][19] Suraj Venjaramoodu இப்புதிய பதிப்பில் மம்முட்டியின் நன்பராக சுராஜ் வெஞ்சாரமூடு இப்படத்தில் இணைந்தார்.[20] படத்தின் பின்னணி குரல் பதிவு போன்ற தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் 2017 சனவரியில் துவங்கின.[17][21] செப்டம்பரில் யுவன் சங்கர் ராஜா படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து, பின்னணி இசைப்பணியையும் துவக்கினார்.[22][23]

இசை தொகு

இப்படத்துக்கான இசையமைப்பை யுவன்சங்கர் ராஜா மேற்கொண்டார்.[24] படத்தின் இசை வெளியீட்டு விழாவானது 2018 சூலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இது நேர்மறையான எதிர்வினையை அளித்தது.[25][26]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தூரமாய்"  விஜய் யேசுதாஸ் 4:08
2. "அன்பே அன்பின்"  கார்த்திக் 3:09
3. "வான்தூறல்"  ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:40
4. "செத்துபோச்சு மனசு"  மது ஐயர் 4:29
மொத்த நீளம்:
16:24

வெளியீடு தொகு

படத்தின் முன்னோட்டமும் சுவரோட்டியும் உலக அளவில் 2019 சனவரி 5 அன்று வெளியிடப்பட்டது.[27][28] இப்படமானது 2018 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள், ராபர்ட்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும்,[29][30] சூன் 17 அன்று சீனாவின், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[31]

2018 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் படத்தை திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக 2018 சனவரியில் ராம் குறிப்பிட்டார், ஆனால் பட வெளியீடு தாமதமானது.  படமானது உலகெங்கும் 2019 பிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்டது.[32]

வரவேற்பு தொகு

இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பை பெற்றது.[33][34] இந்துஸ்தான் டைம்சின் கார்த்திக் குமார் இந்த படத்துக்கு 4.5 / 5 என்ற மதிப்பெண்ணை அளித்தார்.[35]

மேற்கோள்கள் தொகு

  1. "Mammootty's Peranbu gets a release date". The Indian Express. 14 January 2019. 23 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Deepika Jayaram. "Mammootty's Tamil movie Peranbu is now bilingual". Times of India. 15 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mammootty's Tamil film Peranbu goes to International Film Festival Rotterdam 2018". India Today. 27 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Resurrection". International Film Festival Rotterdam. 27 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Peranbu screened at the Shanghai film festival". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. Digital Native (31 October 2018). "Mammootty's 'Peranbu' to be screened at the IFFI". The News Minute. 1 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 S Subhakeerthana (14 November 2016). "Ram finds it easy to act in a film than directing one". The New Indian Express. 1 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Director Ram`s next with Mammootty". Sify.com. 21 February 2015. 23 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Ram's next film is a different love story?". Deccan Chronicle. 27 May 2015.
  10. Janani Karthik (27 July 2015). "Anjali does a special role in Ram's Taramani". Timesofindia.indiatimes.com. 4 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  11. Indiatoday.in (3 January 2016). "Peranbhu: Director Ram joins hands with Mammootty for his next". India Today. 22 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Mammootty to star in Ram's Tamil movie Peranbu with Anjali". International Business Times. 4 January 2016. 22 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  13. Logesh Balachandran (5 January 2016). "Compassion is the theme of Ram's film with Mammootty". Times of India. 12 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  14. Sanjith Sidhardhan (9 January 2016). "Mammootty begins filming his Tamil movie". Times of India. 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  15. Mythily Ramachandran (27 January 2016). "Dubai girl stars with superstar Mammootty". Gulf News. 22 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  16. Nidheesh M.K. (27 October 2017). "Meet Anjali Ameer, India's first transwoman star". Livemint. 23 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  17. 17.0 17.1 P. K. Ajith Kumar (3 March 2017). "Meet Mammootty's new heroine". தி இந்து. 23 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  18. Anjana George. "Mammootty to play an Idukkikkaran again this year". Times of India. 15 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  19. Sidhardhan (27 January 2017). "Peranbu to be released in Malayalam". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Peranbu-to-be-released-in-Malayalam/articleshow/55665393.cms. பார்த்த நாள்: 4 September 2018. 
  20. Anjana George (28 July 2016). "Suraj Venjaramoodu plays Mammootty's aide". Times of India. 15 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  21. Janani K (17 January 2017). "The new entrant in Raam's 'Peranbu'". Deccan Chronicle. 15 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  22. S Subhakeerthana (15 September 2017). "Ram not doing a film with Vikram". The New Indian Express. 15 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  23. "Director Ram's 'Peranbu' with Mammootty is ready". Sify. 21 September 2017. 24 செப்டம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  24. Ashameera Aiyappan (16 July 2018). "It took me 20 years to make a film with Mammootty: Ram at Peranbu audio launch". Indian Express. 17 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  25. LMK (16 July 2018). "Yuvan Shankar Raja gets mass response at Mammootty's Peranbu audio launch". In.com. 16 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  26. "First-look promo of Mammootty-starrer 'Peranbu' out". The News Minute. 9 July 2018. 15 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  27. "Peranbu trailer: Mammootty's intense emotional drama keeps the audience hooked". Indian Express. 6 January 2019.
  28. "Peranbu - Official Trailer -Mammootty - Ram -Yuvan Shankar Raja". Saregama Tamil on YouTube.
  29. "Audience Award 2018".
  30. "Peranbu Asian premiere in Shanghai". 17 May 2018.
  31. "Peranbu screened at the Shanghai film festival". 19 June 2018.
  32. "Peranbu to get international premiere". The New Indian Express. 3 January 2018. 27 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  33. "Sarvam Thaala Mayam, Peranbu and Vantha Rajavathaan Varuven movie review and release highlights"
  34. "Peranbu movie review and rating by audience: Live updates"
  35. movie review: Mammootty, Sadhana starrer is a devastatingly beautiful drama about father-daughter bonding இந்துஸ்தான் டைம்ஸ், மார்ச் 26, 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரன்பு&oldid=3660546" இருந்து மீள்விக்கப்பட்டது