ஜெ. சத்திஷ் குமார்
ஜெ. சதீஷ்குமார் (J. Satish Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்ப தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார். [1] [2] [3]
ஜே. சத்திஷ் குமார் | |
---|---|
45ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (2014) ஜே. சத்திஷ் குமார் இடதுபக்கமாக இரண்டாமவர் | |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2007 தற்போது வரை |
தொழில்
தொகுஜே சதீஷ் குமார் ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் என்ற பதாகையின் கீழ் பல படங்களில் தயாரித்ததுள்ளார். குறிப்பாக தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, குற்றம் கடிதல், தரமணி போன்ற படங்களை தயாரித்துள்ளார். [4] [5] [6] பரதேசி போன்ற படங்களை அதே பதாகையின் கீழ விநியோகித்துள்ளார். [4] தரமணி படத்தில் இவர் கவுரவத் தோற்றத்தில் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பேரன்பு படத்திலும் நடித்தார். [7] மேலும் இவர் அக்னிச் சிறகுகள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், படத்தின் பெரும்பகுதியில் தோன்றும்வகையில் நடிக்கவுள்ளார். [7] [4] காவலுடாரி என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமாக தமிழ் மற்றும் தெலுங்கில் கபடதாரி என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்கிறார். [7] [4] தயாரிப்பு நிலையில் உள்ள பிரட்ன்சிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கின் நண்பராக நடிக்கிறார். [8] பிந்து மாதவி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் இவர் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் அறிமுகமாகிறார். [4]
திரைப்படவியல்
தொகுநடிகராக
தொகு- குறிப்பில் ஏதும் குறிப்படபடாத, எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | தரமணி | காவல் உதவி துணை ஆணையர் | தயாரிப்பாளர் |
2018 | பேரன்பு | சிறப்புத் தோற்றம் | |
2021 | கபடதாரி | சுரேஷ் | |
2021 | கபடதாரி | தெலுங்கு | |
டி.பி.ஏ. | அக்னிச் சிறகுகள் | சுப்பு | |
டி.பி.ஏ. | பிரன்ட்சிப் | ||
டி.பி.ஏ. | ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் பெயரிடப்படாத படம் |
விருதுகளும், பரிந்துரைகளும்
தொகுஆண்டு | விருது | வகை | படம் | முடிவு | Ref. |
---|---|---|---|---|---|
2013 | 61 வது தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | தங்க மீன்கள் | வெற்றி | |
2014 | 62 வது தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | குற்றம் கடிதல் | வெற்றி |
குறிப்புகள்
தொகு
- ↑ "Producer-turned-actor: J Satish Kumar of JSK Film Corporation is now on a signing spree". https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/nov/21/on-a-signing-spree-2064670.html.
- ↑ "One film's loss shouldn't affect another film: J Satish Kumar - Times of India". The Times of India.
- ↑ Subramanian, Anupama (28 June 2017). "Double delight for J Satish Kumar". Deccan Chronicle.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Subramanian, Anupama (9 November 2019). "J Satish Kumar turns a baddie opposite Arun Vijay". Deccan Chronicle.
- ↑ "Producer J Sathish Kumar hits out against Vijay Sethupathi - Times of India". The Times of India.
- ↑ Srinivasan, Sudhir (28 May 2016). "Small films, big heart" – via www.thehindu.com.
- ↑ 7.0 7.1 7.2 "J Satish Kumar, an actor in the making". The New Indian Express.
- ↑ "JSK Corporation to produce three new films". dtNext. 14 June 2020.