கபடதாரி
கபடதாரி (Kabadadaari) என்பது 2021 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மர்ம பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய இப்படத்தை ஜி. தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படமானது 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான காவலுதாரி என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும். இப்படத்தில் சிபி சத்யராஜ்,[2][3][4][5][6][7][8][9] நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாசு, சுமன் ரங்கநாதன், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[10][11][12][13][14] இப்படத்திற்கு பாடல் இசை, பின்னணி இசை ஆகியவற்றை சைமன் கே. கிங் அமைத்துள்ளார்.[13] படத்திற்கான ஒளிப்பதிவை ராசமதியும், படத் தொகுப்பை பிரவீன் கே. எல் மேற்கொண்டனர். இது தெலுங்கில் சுமந்த் முன்னணி பாத்திரத்தில் நடிக்க கபடதாரி என்ற பெயரிலேயே இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இப் படம் 2021 சனவரி 28 அன்று வெளியிடப்பட்டது.
கபடதாரி | |
---|---|
இயக்கம் | பிரதீப் கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | ஜி. தனஞ்செயன் லலிதா தனஞ்சையன் |
கதை | ஜி. தனஞ்செயன் ஜான் மகேந்திரன் ஹேமந்த் ராவ் |
இசை | சைமன் கே. கிங் |
நடிப்பு | சிபிராஜ் நந்திதா (நடிகை) நாசர் ஜெயப்பிரகாசு |
ஒளிப்பதிவு | இராசமதி |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | கிரியேடிவ் என்டர்டெயின்மென்ட் அன்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் |
வெளியீடு | 28 சனவரி 2021 |
ஓட்டம் | 137 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஒரு மகிழுந்தில் இறந்த உடல்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வரைகலை காட்சிகள் காட்டப்படுகின்றன. பின்னர் உடல்கள் புதைக்கப்பட்டு, மகிழுந்து எரிக்கப்படுகிது. ஓட்டுநர் நகைகள் நிறைந்த ஒரு பானையை வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது
சக்தி (சிபி சத்யராஜ் ) என்ற ஒரு நேர்மையான போக்குவரத்து காவலரைச் சுற்றி கதை சுழல்கிறது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சேர்ந்து குற்றம் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். ஒரு நாள், அவர் தற்செயலாக மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் எலும்புக்கூடுகளைக் காண்கிறார். மேலும் தன் உயர் அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி அந்த வழக்கில் ஆர்வம் காட்டுகிறார். பின்னர் இந்த எலும்புக்கூடுகள் நான்கு தசாப்தங்கள் பழமையானது என்பதை அறிந்ததும் அவரது விசாரணை தடங்கலுக்கு உள்ளாகிறது. அவர்கள் கொல்லப்படதற்கான அறிகுறிகள் இருப்பதாக தடயவியல் அறிக்கைகள் காட்டுகின்றன. இந்த வழக்கில் ஆர்வம் கொண்ட பத்திரிக்கையாளரான குமார் ( ஜெயப்பிரகாசு ) உடனான அவரது சந்திப்புக்குப் பிறகு, பல மர்மங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இறந்த குடும்பத் தலைவர் சுரேஷ் ( ஜெ. சத்திஷ் குமார் ), தொல்லியல் துறையில் உயர் அலுவலர் என்பதை அவர் கண்டுபிடிக்கிறார். சுரேசுடன் சம்பத் பணிபுரிகிறார். இவர்கள் தங்கள் பணியின்போது பழங்கால நகைகளை (விஜயநகரப் பேரரசின் ) கண்டுபிடிக்கின்றனர். நகை கண்டுபிடிக்கபட்ட நாளில் சம்பத் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதே நாளில், சுரேஷ் இரத்தக் கரை படிந்த சட்டையுடன் காணப்பட்டார். அதனால் சுரேஷ் சம்பத்தை கொன்றதாக சக்தி கருதுகிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு அந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான ரஞ்சன் ( நாசர் ) மற்றும் நடிகை ரம்யா (சுமன் ரங்கநாதன் ) ஆகியோரின் சந்திப்பு சக்திக்கு சிக்கல்கள் உண்டாகின்றன. ரம்யாவுக்கு இந்த வழக்குடன் தொடர்பு இருப்பதாக சக்தியிடம் குமார் குறிப்பிடுகிறார். அதனால் சக்தி அவளை விசாரிக்க செல்கிறார். ஆனால், அது தோல்வியடைகிறது. ரஞ்சன் தான் முன்பு விசாரித்த தகவல்களைக் கொண்டு சக்திக்கு உதவ முடிவு செய்கிறார். சுரேஷ் உண்மையில் கொலை செய்யவில்லை என்பதையும், சுரேசின் சட்டையில் இருந்த இரத்தக்கரை சுரேஷ் காப்பாற்றிய ஒரு நபரிடமிருந்து வந்தது என்பதையும் அவர் புலப்படுத்துகிறார். ஆனால் சம்பத்தை கொன்றது யார், அவர் குடும்பம் எப்படி இறந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில் ரம்யாவும் கொல்லப்படுகிறார். ரஞ்சனும் சக்தியும் அவளது வீட்டில் துப்புகளை அறியச் செல்லும்போது. அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட விஜயநகரப் பேரரசின் பதையலில் இருந்த ஒரு அட்டிகையை ரம்யா அணிந்திருந்த ஒளிப்படத்தைப் பார்க்கிறார்கள். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த ஒரு குண்டரை அவர்கள் பார்க்கிறார்கள். சக்தியும் ரஞ்சனும் அவனைத் துரத்துகிறார்கள்.
அவர்கள் குண்டரைப் பின்தொடரும் போது, அவர்கள் ஒரு உல்லாச விடுதிக்கு வந்து சேர்கின்றனர். உல்லாச விடுதிக்கு அருகிலுள்ள பூங்கா உள்ள இடமானது, முன்பு மகிழுந்து எரிக்கப்பட்ட இடம் என்பதை ரஞ்சன் அடையாளம் காண்கிறார். உல்லாச விடுதியில் ஒரு அரசியல் தலைவர் உரையாற்றுகிறார். அப்போது சக்திக்கு குமாரிடமிருந்து சந்திக்க வருமாறு செல்பேசி அழைப்பு வருகிறது. நடிகை ரம்யாவுக்கு இதற்கு முன்பு ஒரு அரசியல்வாதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று குமார் அவரிடம் கூறுகிறார். அந்த அரசியல்வாதி மீஞ்சூர் ரங்கநாதன் என்பதும், அவர்தான் அடுத்து முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளவர் என்றும் கூறுகிறார். இதற்கிடையில், அந்த சொகுசு விடுதி மீஞ்சூர் ரங்கநாதனுக்கு சொந்தமானது என்பதை ரஞ்சன் கண்டுபிடிக்கிறார். மேலும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் மீஞ்சூர் ரங்கநாதனின் பழைய வீட்டை ஆராய சக்தி செல்கிறார். அந்த வீட்டில் அவர் ஒரு உயரமான அலமாரியில் மறைத்து வைக்கப்பட்ட கிறிஸ்தவப் புனிதப் பொருள்களைக் கண்கிறார். ரங்கநாதன் ஒரு இந்து என்பதால் இது சக்திக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ரங்கநாதனின் பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ரஞ்சனிடம் இதுபற்றி சக்தி கூறுகிறார். ரங்கநாதன், சுரேஷின் பழைய ஓட்டுநர் பெர்னாண்டஸ் போல இருப்பதை ரஞ்சன் கவனிக்கிறார். கூட்டத்திற்கு முன்னால் இருந்து, ரஞ்சன் "பெர்னாண்டஸ்" என்று குரல் கொடுக்கிறார். அதற்கு ரங்கநாதன் ரஞ்சனைப் பார்த்து முறைக்கிறார். பின்னர் ரங்கநாதன் பயந்துபோய் ரஞ்சனைக் கடத்திக் கொண்டு வரும்படி தனது குண்டர்களிடம் கூறுகிறார். ரஞ்சன் சக்தியிடம் எல்லாவற்றையும் சொல்கிறார். பிறகு அவர் ரங்கநாதனின் ஆட்களால் கடத்தப்படுகிறார். ரங்கநாதன் தன் பழைய கதையை ரஞ்சனிடம் கூறுகிறார். சுரேஷ் தொல்லியல் துறையால் கண்டெடுக்கபட்ட 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதையலை வைத்திருப்பதை அவர் பேசும்போது கேட்டதாக கூறுகிறார். அதைக் கைப்பற்ற அவர் சம்பத்தை கொல்கிறார். மேலும், அவர் சுரேஷையும் கொல்ல திட்டமிடுகிறார். அவர் தனது திட்டத்தை ராயுடுவிடம் சொல்கிறார், ஆனால் அவர் சம்பத்தைக் கொல்வதாக சொல்லவில்லை. அவர்களின் உணவில் தான் கொடுக்கும் தூக்க மருந்தை கலக்குமாறு ராயடுவுக்கு சொல்கிறார். அவர்கள் தூங்கிய பிறகு புதையலை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பி ஓடிவிடலாம் என்று சொல்கிறார். ராயடுவும் தூக்க மருந்து என்று நினைத்து பெர்னாண்டஸ் கொடுத்த நஞ்சை அவர்கள் உணவில் கலந்துவிடுகிறான். நஞ்சு உண்டதால் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிடுகின்றனர். ராயுடு பெர்னாண்டஸ் செய்ததைப் பற்றி காவல் துறையிடம் சொல்லிவிடுவதாக மிரட்டுகிறார். ஆனால் பெர்னாண்டஸ் மாத்திரைகள் அடங்கிய பையில் ராயுடுவின் கைரேகைகள் இருக்கின்றன, அதனால் ராயுடுவும் சிக்கிவிடுவார் என்று பெர்னாண்டஸ் ராயுடுவை மிரட்டுகிறார். பின்னர் பெர்னாண்டஸ் அவர்களின் உடல்களை அவர்களின் மகிழுந்தில் எடுத்துச் சென்று புதைத்துவிட்டு, பின்னர் மகிழுந்தையும் எரித்துவிடுகிறார். பின்னர் பெர்னாண்டஸ் நகைகளை எடுத்துக் கொண்டு சென்று பணக்காரராகவும் ஆகிறார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அவர் தனது அடையாளத்தை மீஞ்சூர் ரங்கநாதன் என்று மாற்றிக் கொள்கிறார். இவ்வாறு ரங்கநாதனின் பழைய வரலாறை சொல்லி முடிக்கிறார்.
அதன்பிறகு, ரங்கநாதன் தனது குண்டர்களிடம் ரஞ்சனைக் கொன்றுவிடுமாறு கூறிவிட்டு சென்றுவிடுகிறார். ரஞ்சனை சித்ரவதை செய்து கொல்லும் போது சக்தி அவரைக் காக்க வருகிறார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ரஞ்சன் இறந்துவிடுகிறார். அவர் இறப்பதற்கு முன், ரஞ்சன் சக்தியிடம் ரங்கநாதன் என்ற பெயரில் உள்ள பெர்னாண்டஸ்தான் கொலைகாரன் என்பதைச் சொல்கிறார். அவர் மிகவும் கோபமடைந்து ரங்கநாதனின் குண்டர்களைக் கொல்கிறார். பத்திரிக்கையாளர் குமார்தான் ராயுடு என்பதை சக்தி பின்னர் கண்டுபிடிக்கிறார். அவர் இது குறித்து குமாரிடம் விசாரிக்கச் செல்கிறார், ஆனால் குமாரின் மகள் விசாரிக்கும்போது இடையில் வந்ததால், சக்தி வெளியேறுகிறார். இதற்குப் பிறகு, சக்தி ரங்கநாதனை மிரட்ட செல்கிறார். ஆனால் அவர் சக்தியை தனக்கு வேலை செய்யச் செல்கிறார். சக்தியிடன் ரங்கநாதன் ராயுடு/குமாரைக் கொல்லச் சொல்கிறார். ஒரு மகிழுந்து பயணத்தில், சக்தி தனது மகிழுந்தை நிறுத்தி குமாரை நோக்கிச் சுடுகிறார். பிறகு, சக்தி ரங்கநாதனின் பதவி ஏற்ப் பதவி ஏற்ப்பு விழாவுக்குச் சென்று, குமாரைக் கொல்லாமலேயே கொன்றுவிட்டதாகப் பொய் சொல்கிறார். குமார் மாறுவேடமிட்டு ரங்கநாதனுக்கு நஞ்சு கலந்த பாலை பரிமாறுகிறார். ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார். இதற்கு பிறகு சக்தியும் குமாரும் மகிழுந்தில் செல்லும்போது, குற்ற உணர்வால் உந்தப்பட்ட குமார் மீதமுள்ள நஞ்சை குடித்துவிட்டதாக சக்தியிடம் கூறுகிறார். முன்னதாக குமார் செய்த காணொளி பதிவு வைரலாகிறது. இதன் மூலம் ரங்கநாதனின் கடந்தகால குற்றங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்கிறார்கள். இந்த வழக்கில் பணியாற்றியதால், சக்தி குற்றப்பிரிவில் அதிகாரியாக பதவி உயர்வு பெறுகிறார். இறுதியில், கடந்த காலத்தில் சுரேஷால் காப்பாற்றப்பட்டவர் சக்தியின் அப்பா என்பது தெரியவருகிறது. அதனால்தான் அவர் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
நடிப்பு
தொகு- சிபிராஜ் - போக்குவரத்து காவலர் சக்தியாக
- நந்திதா ஸ்வேதா குமாரின் மகள் சுவாதியாக
- நாசர் - ஓய்வுபெற்ற காவலர் ரஞ்சனாக
- ஜெயப்பிரகாசு -குமார் / ராயுடுவாக
- சுமன் ரங்கநாதன், நடிகை ரம்யாவாக
- சம்பத் மைத்ரேயா -பெர்னாண்டஸ் / மீஞ்சூர் ரங்கநாதன்
- சாய் தீனா மெக்கானிக் பாபுவாக
- பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மீஞ்சூர் ரங்கநாதனின் அடியாளாக
- ஜெ. சதீஷ் குமார் -சுரேசாக
- அபிஷேக் சங்கர் காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரனாக
- ஜெயவேல் காவலர் மணியாக
- ஜி.தனஞ்செயன் குருமூர்த்தியாக
- சங்கீதா. வி -கீதா ரஞ்சனாக
- அம்ருதா அபிஷேக் -விஜயலட்சுமியாக
- குழந்தை அனிஷா -வைதேகியாக
- யசர் -இளம் ராயுடுவாக
- ஜாய்ஸ் பேபி -சக்தியின் தாயாக
தயாரிப்பு
தொகுதயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் கன்னடப் படமான காவலுதாரி படத்தின் மறுஆக்க உரிமையைப் 2019 ஏப்ரலில் பெற்றார்.[15] 2019 ஆகத்து 23 அன்று, சிபி சத்யராஜ் தன் தந்தை சத்யராஜுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.[16] இப்படத்தை சிபியுடன் சத்யாவில் (2017). பணியாற்றிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.[17] இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க மாட்டார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது, அதேசமயம் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பது.[11][12] 23 அக்டோபர் 2019 அன்று,[6] தயாரிப்பாளர்கள் படத்தின் பெயரை கபடதாரி என்று அறிவித்தனர் .[7][8][9]
முதன்மை படப்பிடிப்பு 2019 நவம்பர் முதல் நாள் தொடங்கியது. படப்பிடிப்பு 65 வேலை நாட்களுக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.[14][18] 2019 நவம்பரில், இந்த படம் தெலுங்கில் கபடதாரி என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது,[19] தெலுங்கு பதிப்பில் நாயகனாக சுமந்த் நடித்தார்.[5]
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக படத்தின் பின்தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. 2020 மே 11 அன்று, படத்தின் குரல் சேர்ப்புப் பணிகளை மீண்டும் தொடங்கினார். அரசு விதித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குரல் சேர்ப்புப் பணிகளை மீண்டும் தொடங்கிய முதல் படம் என்று ஆனது.[20][21] நாசர் தன் சம்பளத்திலிருந்து 15% குறைக்க ஒப்புக்கொண்டதோடு குரல் பணிகளை முடித்ததற்காக தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.[22][23] கோவிட் -19 காரணமாக படத்தின் தயாரிப்பு கிட்டத்தட்ட 200 நாட்கள் தாமதமாகி இறுதியாக 2020 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்தது. இந்த தாமதத்தினால் வட்டி மற்றும் பிற செலவுகள் காரணமாக தயாரிப்பாளருக்கு படத்தின் செலவில் கூடுதலாக ₹ 1 கோடி செலவு ஆனது.[24][25]
இசை
தொகுஇப்படத்திற்கு சைமன் கே. கிங், இசையமைத்தார். இது சிபி சத்யராஜ் மற்றும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டில் உருவான சத்ய (2017) படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் இணையும் இரண்டாவது படமாகும். படத்தின் இசை உரிமையை ஆதித்தியா மியூசிக்கு வாங்கியது.[26] படத்தின் முதல் பாடல் "ஹயாக்கி பேபி" 2020 திசம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது.[27] இப்பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுத சனா மொய்துட்டி பாடினார். இப்பாடலில் இடம்பெற்ற ஆங்கில பாடல்கள் மற்றும் ராப் வசனங்களை கிரிஷன் மகேசன் எழுதி பாடினார்.[28]
படத்தின் பாடல் தொகுதியில் இசையமைப்பாளரால் எழுதப்பட்ட நான்கு பாடல்களும், கு. கார்த்திக் மற்றும் அருண் பாரதி ஆகியோரால் எழுதப்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. பாடல் தொகுதி 2021 சனவரி 18 அன்று சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.[29] இப்படத்தின் தெலுங்கு பதிப்பான கபடதாரிக்கும் சைமனே இசையமைத்தார்.[30]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஹயாக்கி பேபி" | சனா மொய்துட்டி, கிரிஷன் மகேசன் | 04:23 | |
2. | "கபடதாரி" | நிரஞ்ச் சுரேஷ், ஷில்வி ஷரோன் | 03:37 | |
3. | "கனவில் கண் மலரும்" | பிரதீப் குமார் | 04:52 | |
4. | "கபடதாரி கருப்பொருள் இசை" | சைமன் கே. கிங் | 02:13 | |
மொத்த நீளம்: |
15:07 |
வெளியீடு
தொகுஇப்படம் முதலில் 2020 மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது.[5][31] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. 2020 செப்டம்பர் நடுவில் தயாரிப்பாளர் தனஞ்செயன், நவம்பரில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் மேலதிக ஊடக சேவையில் வெளியிடப்படும் என்ற வதந்திகளை மறுத்தார்.[32] தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, 50% இருக்கை கட்டுப்பாடுகளுடன், 2020 திசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது,[33] ஒரே நேரத்தில் அதன் தெலுங்கு பதிப்பும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.[34] 2021 சனவரி 28 அன்று தைப்பூசத்தையொட்டி, வெளியிடப்பட்டது.[35]
பிலிம் கம்பேனியன் தெற்கில் பரத்வாஜ் ரங்கன் எழுதிய விமர்சனத்தில் "படம் மோசமாக இல்லை. ஆனால் மிக நீளமானது, மற்றும் கதை பாணியின் வலுவான உணர்வு இல்லாமல் உள்ளது. " [36]
குறிப்புகள்
தொகு
- ↑ "Kabadadaari". British Board of Film Classification.
- ↑ "Shoot at Site: Kabadadaari, a murder case is re-investigated". The Times of India. Retrieved 11 March 2020.
- ↑ "சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்". Chennaivision. 3 November 2019. Retrieved 11 March 2020.
- ↑ "Filmmaker Pradeep Krishnamoorthy Makes His Acting Debut With 'Kabadadaari'". Silverscreen.in. 25 February 2020. Retrieved 11 March 2020.
- ↑ 5.0 5.1 5.2 "Kabadadaari to be made in Tamil, Telugu". The New Indian Express. Retrieved 11 March 2020.
- ↑ 6.0 6.1 Subramanian, Anupama (24 October 2019). "Sibiraj is a Kabadadaari now". Deccan Chronicle. Retrieved 11 March 2020.
- ↑ 7.0 7.1 "Sibiraj In Kabadadaari!". nettv4u. Retrieved 11 March 2020.
- ↑ 8.0 8.1 "Sibiraj, Nandita's thriller has been titled Kabadadaari". The Times of India. Retrieved 11 March 2020.
- ↑ 9.0 9.1 "Sibiraj's next titled 'Kabadadaari'". https://www.thehindu.com/entertainment/movies/sibirajs-next-titled-kabadadaari/article29776138.ece.
- ↑ "Actress Nandita joins Sibiraj's Kabadadaari". The Times of India. Retrieved 11 March 2020.
- ↑ 11.0 11.1 seelatest.com. "Kabadadaari Movie Release Date | Cast and Crew". www.seelatest.com. Retrieved 11 March 2020.
- ↑ 12.0 12.1 "Catching up with Sibiraj and Jayaprakash on the sets of 'Kabadadaari'". https://www.thehindu.com/entertainment/movies/on-the-sets-of-kabadadaari/article30963252.ece.
- ↑ 13.0 13.1 "Suman Ranganathan replaces Pooja Kumar in Sibiraj's Kabadadaari". Silverscreen.in. 7 February 2020. Retrieved 11 March 2020.
- ↑ 14.0 14.1 "Director Pradeep Krishnamoorthy to make acting debut with Kabadadaari". The New Indian Express. Retrieved 11 March 2020.
- ↑ "Kavaludaari remake rights see high demand in south and Bollywood". The New Indian Express. Retrieved 2021-01-28.
- ↑ "Sibi, Sathyaraj team up for a murder mystery - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ "Sathyaraj, Sibiraj team up for Tamil remake of 'Kavaludaari'". The News Minute (in ஆங்கிலம்). 2019-08-23. Retrieved 2021-01-28.
- ↑ "Popular director makes his acting debut in Sibiraj's Kabadadaari ft Pradeep Krishnamoorthy". Behindwoods. 25 February 2020. Retrieved 11 March 2020.
- ↑ "'Kabadadaari' to be made as a Tamil-Telugu bilingual". The News Minute (in ஆங்கிலம்). 2019-11-12. Retrieved 2021-01-28.
- ↑ "Kabadadaari: Nassar dubs, following the Govt guidelines!". Sify. Archived from the original on 13 மே 2020. Retrieved 13 May 2020.
- ↑ "Dubbing resumes for Sibi Sathyaraj's Kabadadaari". The New Indian Express. Retrieved 13 May 2020.
- ↑ "'Kabadadaari' producer Dhananjayan thanks actor Nassar for his great support". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kabadadaari-producer-dhananjayan-thanks-actor-nassar-for-his-great-support/articleshow/75864120.cms.
- ↑ "Nassar reduces his remuneration by 15% for 'Kabadadaari'!". Sify. Archived from the original on 23 மே 2020. Retrieved 22 May 2020.
- ↑ "Lockdown delay costed 1cr for producer Dhananjayan, 'Kabadadaari' shoot wrapped up". Sify (in ஆங்கிலம்). Retrieved 2020-09-30.
- ↑ "Kabadadaari wraps shooting! COVID-19 costs Rs. 1 Cr. for the movie!". www.moviecrow.com. Retrieved 2020-09-30.
- ↑ editor. "Kabadadaari Audio rights bagged by Aditya music". Archived from the original on 16 ஜூலை 2020. Retrieved 16 July 2020.
{{cite web}}
:|last=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ "First single Hayakki Baby from Sibraj's Kabadadaari - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ "Kabadadaari First Single Song - Hayakki Baby". www.moviecrow.com. Retrieved 2021-01-28.
- ↑ "Kabadadaari Tamil Movie Audio Launch | Sibi Sathyaraj | Swetha Nandita | Simon K King | Jaya TV - YouTube". www.youtube.com. Retrieved 2021-01-28.
- ↑ "Hayakki Baby Lyrical | Kapatadhaari Songs | Sumanth | Swetha Nanditha | Simon K King - YouTube". www.youtube.com. Retrieved 2021-01-28.
- ↑ "Kabadadaari: Release Plans revealed for Sibiraj's film!". www.moviecrow.com. Retrieved 11 March 2020.
- ↑ Thandoratimes.com. "Major clarification on Sibiraj's Kabadadaari over OTT release Thandoratimes.com". Thandoratimes.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ "Sibi Sathyaraj and Nandita Sweta starrer Kabadadhaari has a release date - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/sumanth-and-nandita-sweta-starrer-kapatadhaari-has-a-release-date/articleshow/79392051.cms
- ↑ "Sibi Sathyaraj and Nandita Swetha-starrer Kabadadaari to release on THIS date". www.zoomtventertainment.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ "Kabadadaari, With Sibi Sathyaraj And Nandita Swetha: This Investigative Thriller Is Focussed, But Also Flat And Flavourless". 28 January 2021.