அபிசேக் சங்கர்

இந்திய நடிகர்

அபிசேக் சங்கர் (Abhishek Shankar) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.[1][2]

அபிசேக் சங்கர்
பிறப்பு29 செப்டம்பர் 1968 (1968-09-29) (அகவை 56)
இந்திய ஒன்றியம், மும்பை, செம்பூர்
மற்ற பெயர்கள்அபிசேக்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995-தற்போது வரை

தொழில்

தொகு

அபிஷேக் ஞான ராஜசேகரனின் இயக்கி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடகத் திரைப்படமான மோகமுள் (1995), படத்தில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் அர்ச்சனா ஜோக்லேகருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] திரைப்படங்களில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு ஏக்தா கபூர் தனது புதிய தொடரான குடும்பம் தொடரில் ஒரு பாத்திரத்தை இவருக்கு வழங்கிய பின்னர், 1999 இல் இவர் தொலைக்காட்சிக்கு மாறினார்.[4] பின்னர் இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பிலும், நகைச்சுவை பாத்திரத்தை சித்தரிப்பதிலும் அவருக்கு உதவினார். இவர் கிட்டத்தட்ட நாற்பது தொடர்களில் பணிபுரிந்தார். மேலும் கோலங்கள் என்ற தொடரில் பாஸ்கரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.[5] இந்த தொடரின் வெற்றியினால், 2000 களின் பிற்பகுதியில் தமிழ் தொலைக்காட்சிகளில் மலர்கள், கிரிஜா, கோலிவுட் கோர்ட் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][6]

2009 ஆம் ஆண்டில், ஹாலிவுட் என்ற பதாகையின் கீழ் தான் சொந்தமாக பாலிவுட் திரைப்படங்களை இயக்கி தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இவர் புதுமுகங்களைக் கொண்டு கதை என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் 2012 சனவரியில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபி.காம் இன் விமர்சகர் ஒருவர் "இதுபோன்ற ஒரு கனமான கதையை விஷயத்தைத் தொட்டதற்காக அவரது முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.[7] அபிஷேக் அடுத்து கையெழுத்து என்ற படத்தை இயக்குவதா அறிவித்தார். அதில் தனது முதல் படமான கதை படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஷான் நடிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது.[8] இவர் 2012 மே மாதத்தில் மற்றொரு படத்தை இயக்கத் தொடங்கினார். இது சமுத்திரக்கனி நடித்த ஒரு காவல் துறை அதிரடி சாகச படமாகும். ஆனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.[9] க/பெ ரணசிங்கம் பட்டதில் இவரது நடிப்பு குறித்து, ஒரு விமர்சகர் கூறுகையில், "நடிகர் அபிஷேக்கிற்கு ஒரு தொப்பியின் ஒரு முனை போல, அவரது கதாபாத்திரத்திரத்தின் நோக்ககம் குறைவாக வரையறுக்கப்பட்டதாக இருந்தபோதிலும் (ஒரு அரசு அதிகாரி), இந்த படத்தில் மனதில் பதியக்கூடிய மூன்று அல்லது நான்கு நடிகர்களில் ஒருவராக நடித்துள்ளார் ".[10]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

நடிகராக

தொகு
படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1995 மோகமுள் பாபு
2001 அசோகவனம்
2003 பல்லவன்
2007 அம்முவாகிய நான் ரகு
2010 அழகான பொண்ணுதான்
2011 பதினாறு கோபாலகிருஷ்ணன்
2014 தலைவன்
2014 சம்சாரம் ஆரோக்யதினு ஹானிகாரம் ஸ்ரீதேவியின் / வித்யாவின் கணவர் மலையாளம்
2014 வாயை மூடி பேசவும் ஸ்ரீதேவியின் / வித்யாவின் கணவர்
2015 ஆம்பள பெரியா பொண்ணுவின் கணவர்
2016 பென்சில் சுந்தராஜன்
2017 துப்பறிவாளன் மதிவண்ணன்
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் பிரகாஷின் சகோதரர்
2020 க/பெ ரணசிங்கம் அரசாங்க அதிகாரி
2021 கபடதாரி ரவிச்சந்திரன்
2021 மிருகா காவல் ஆணையர்
வலைத் தொடர்
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2021 பேமிலி மேன் லசித் ரூபதுங்க இந்தி

இயக்குநராக

தொகு
ஆண்டு படம் குறிப்புகள்
2010 கதை

தொலைக்காட்சி தொடர்

தொகு
நடிகராக
ஆண்டு தலைப்பு பங்கு சேனல்
1999-2001 குடும்பம் சன் தொலைக்காட்சி
2000 புஷ்பாஞ்சலி சந்திரூ
2000-2001 ஆனந்த பவன் கிஷோர்
2000 மைக்ரோ தொடர்கள்-ஒத்திகை மருதுவர் ராஜ் தொலைக்காட்சி
2001-2003 அலை ஒசை சன் தொலைக்காட்சி
2003 குங்குமம்
2003-2005 ஆடுகிறான் கண்ணன்
2003-2009 கோலங்கள் பாஸ்கர்
2004-2007 கல்கி ஜெயா தொலைக்காட்சி
2005-2007 ராஜா ராஜேஸ்வரி சன் தொலைக்காட்சி
2005-2006 மனைவி
தீர்க்க சுமங்கலி
செல்வங்கள்
2006-2008 செல்லமடி நீ எனக்கு
2008-2010 திருப்பாவை
2009–2013 செல்லமே அன்புகுமார் (ஏ.கே)
2010 மைதிலி கலைஞர் தொலைக்காட்சி
2010–2012 அனுபல்லவி ராஜராமன் சன் தொலைக்காட்சி
2012 தங்கம் ரத்னன்
2012–2013 வெள்ளைத் தாமரை
மாயா சந்திரசேகர் ஜெயா தொலைக்காட்சி
2019–2020 சாக்லேட் சஞ்சய் குமார் சன் தொலைக்காட்சி
2021 - தற்போது புதுப்புது அர்த்தங்கள் ஹரி கிருஷ்ணன் ஜீ தமிழ்
இயக்குநராக
ஆண்டு தலைப்பு அலைவரிசை
2020 கண்மணி சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

தொகு

 

  1. sify.com
  2. "I wish I had done more films before stepping into television: Abhishek Shankar". The New Indian Express.
  3. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/my-first-breakabishek/article1138446.ece
  4. 4.0 4.1 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/chasing-the-tinsel-dream-cablewala/article2245896.ece
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
  6. "Archived copy". Archived from the original on 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. sify.com
  8. http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-09-01/shaan-abhishek-kadhai-03-11-09.html
  9. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/cop-story/article3460604.ece
  10. https://www.thehindu.com/entertainment/reviews/ka-pae-ranasingam-movie-review-a-sketchy-pay-per-view-film/article32759229.ece

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_சங்கர்&oldid=4089008" இலிருந்து மீள்விக்கப்பட்டது