புதுப்புது அர்த்தங்கள் (தொலைக்காட்சித் தொடர்)

புதுப்புது அர்த்தங்கள் என்பது 22 மார்ச் 2021 ஆம் ஆண்டு முதல் இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகை தேவயானி, அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, நியாஸ் மற்றும் மேடைப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் நடிக்கின்றார்கள்.[2] இத்தொடர் மாமியார்-மருமகளின் பாசபந்தத்தை சொல்லும் தொடர் ஆகும்.[3]

புதுப்புது அர்த்தங்கள்
வகைகுடும்பம்
நாடகம்
இயக்கம்என். பிரியன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சேவியர் பிரிட்டோ
நிவாஷினி திவ்யா
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்22 மார்ச்சு 2021 (2021-03-22) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்அக்கபாய் சாசுபாய்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இது ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான 'அக்கபாய் சாசுபாய்' என்ற மராத்தி மொழி தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[4]

கதைதொகு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமி என்ற விதவை பெண், தனது மகன் சந்தோஷை ஒற்றைத் தாயாக வளர்த்து மற்றும் தனது மாமனார் திருவேங்கடத்தையும் கவனித்து வருகிறார். தனது குடும்பத்தை தவிர, எப்போதும் தன்னைத்தானே குறைவாகக் கவனித்துகொள்வார். பவித்ரா - சந்தோஷின் திருமணத்திற்குப் பிறகு, லட்சுமியின் மருமகள் பவித்ரா எப்படி லட்சுமி வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறாள் மற்றும் பவித்ரா, லட்சுமிக்கும் அவரது காதலனான சமையல் நிபுணர் ஹரி கிருஷ்ணனுக்கும் எப்படி திருமணம் நடத்துவாள் என்பது தான் கதை.

நடிகர்கள்தொகு

முதன்மை நடிகர்கள்தொகு

 • தேவயானி - லட்சுமி[5]
  • திருவேங்கடத்தின் மருமகள்; சந்தோஷின் தாய் மற்றும் பவித்ராவின் மாமியார்.
 • அபிஷேக் சங்கர் - ஹரி கிருஷ்ணன்
  • தனி மனிதன்; ஒரு சமையல் நிபுணர் மற்றும் லட்சுமியின் காதல் ஆர்வம்.
 • வி.ஜே. பார்வதி - பவித்ரா
  • சந்தோஷின் காதலி மற்றும் மனைவி; லட்சுமியின் மருமகள்.
 • நியாஸ் - சந்தோஷ்
  • லட்சுமியின் மகன்; பவித்ராவின் கணவர் மற்றும் திருவேங்கடத்தின் பேரன்.
 • திண்டுக்கல் ஐ. லியோனி - திருவேங்கடம்
  • லட்சுமியின் மாமனார் மற்றும் சந்தோஷின் தாத்தா

துணை நடிகர்கள்தொகு

 • ரமேஷ் கண்ணா - ராகவன்
  • அருண் மற்றும் பவித்ராவின் தந்தை
 • ஷீலா - வைதேகி
  • அருண் மற்றும் பவித்ராவின் தாய்
 • தருண் - அருண்
  • பவித்ராவின் தம்பி
 • ஸ்ரீநிதி சுதர்சன் - திவ்யா
  • லட்சுமியின் குடியிருப்பில் வசிக்கும் பெண்
 • தேவிப்பிரியா - பார்த்திபா
  • லட்சுமியின் குடியிருப்பில் வசிக்கும் பெண்
 • கே. எஸ். ஜெயலக்ஷ்மி - பரிமளம்
  • லட்சுமியின் குடியிருப்பில் வசிக்கும் பெண்

மறு தயாரிப்புதொகு

 • அக்கபாய் சாசுபாய் என்ற தொடரின் மற்ற மறு தயாரிப்புகள்[6]:
மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
மலையாளம் மனம்போல் மாங்கல்யம் ஜீ கேரளம் 28 டிசம்பர் 2020 ஒளிபரப்பில்

சர்வதேச ஒளிபரப்புதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி புதுப்புது அர்த்தங்கள்
(ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
யாரடி நீ மோகினி -