மறு ஆக்கம்
மறு ஆக்கம் (Remake) என்பது திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், நிகழ்பட ஆட்டம் போன்ற முந்தைய பொழுதுபோக்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பது மறு ஆக்கம் ஆகும். இந்த மறு ஆக்கம் ஒரு மொழியில் வெளியான திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரின் கதையை வாங்கி வேறுபட்ட பிராந்திய மொழிகளை சேர்ந்த நடிகர்களைப் பயன்படுத்தி அவர்களின் கலாசாரத்திற்க்கேற்ப மறு ஆக்கம் செய்யப்படுகின்து.[1] இப்படிப்பட்ட மறு ஆக்கம் இந்தியத் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பல வருடங்களாக வழக்கத்தில் உள்ளது.
திரைப்படம்
தொகுஒரு திரைப்படத்தின் மறு ஆக்கம் என்பது முந்தைய திரைப்படத்தின் கதை கருவை அடிப்படையாக கொண்டு அல்லது அதே திரைப்படத்தை அப்படியே மறு ஆக்கம் செய்யப்படுகின்றது. உதாரணமாக 1978 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து தமிழ் மொழியில் வெளியான முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு அந்த திரைப்படத்தை 1979 ஆம் ஆண்டு மலையாள மொழியில் 'வெனாலில் ஒரு மாஷா' என்ற பெயரிலும் மற்றும் 1985 ஆம் ஆண்டு இந்தி மொழியில் 'பியாரி பெஹ்னா' என்ற பெயரிலும் வெவேறு நடிகர்களை கொண்டு மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.[2]
பழைய திரைப்படங்களின் கதை கருவை கொண்டு புதிய நடிகர்களை கொண்டு மறு ஆக்கம் செய்து. உதாரணமாக 1980 ஆம் ஆண்டு வெளியான பில்லா என்ற திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு அதே பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் அஜித் குமார்[3] மற்றும் ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த திரைப்படம் 1980 ஆம் ஆண்டு பில்லா திரைப்படத்தின் கதை கருவை கொண்டு புதிய பரிமானத்தில் உருவாக்கப்பட்டது.
சில நேரங்களில் அதே இயக்குனரால் வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி என்ற திரைப்படத்தை 2008 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அதே பெயரில் அவரே இயக்கியுள்ளார்.
எல்லா மறு ஆக்கத்திரைப்படங்களும் முன்பு வெளியிடப்பட்ட அதே தலைப்பைப் பயன்படுத்துவதில்லை. மறு ஆக்கம் அசல் திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் எடுக்கப்படுகின்றது. இது அசல் படத்தின் அதே அடிப்படைக் கதையை கொண்டு உருவாக்கப்படுகின்றது. அல்லது அதே தலைப்பைக் கூட பயன்படுத்தலாம். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு வெளியான முனி என்ற திகில் திரைப்படம் அதன் தொடர்சியாக ஒரே கதை கருவை கொண்டு காஞ்சனா (2011), கங்கா (2015), காஞ்சனா 3 போன்ற பெயர்களில் வெளியானது.
சில வேலை ஒரே படத்தில் நடித்த நடிகர்கள் வேறு மொழி மறு ஆக்கத்திரைப்படத்திலும் நடிப்பது உண்டு. உதாரணமாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சூர்யவம்சம் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த காதாபாத்திரத்தை தெலுங்கு மொழி மறு ஆக்கத்தில் அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது போன்று 2005 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் திரிசா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு தமிழில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க இவருக்கு ஜோடியாக திரிசாவே இந்த திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.
தொலைக்காட்சி
தொகுமறு ஆக்கம் திரைப்படத்தை விட தொலைக்காட்சியில் குறைவாகவே நிகழ்கின்றன, ஆனால் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகம் நிகழ்கின்றது. உதாரணமாக ஒரு தொலைக்காட்ச்சி அலைவரிசையில் ஒளிபரப்பான தொடர் மிகப்பெரிய வெற்றி அடையும் தருணத்தில் அது அதே குழுமத்தை சேர்ந்த வேறு பிராந்திய மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுகின்றது. ஆனால் அந்த தொடர் அங்கும் வெற்றி பெறாத தருணத்தில் கதைக்களம் மாற்றப்படுகின்றது இல்லாவிடில் தொடர் முடிக்கப்படுகின்றது.
சன் தொலைக்காட்சியில் 1999 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி என்ற தொடர் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதே போன்று கோலங்கள் (2009-2013), தென்றல் (2009-2015), தெய்வமகள் (2013-2018), நாயகி (2018-), பாண்டியன் ஸ்டோர்ஸ் (2018-), போன்ற தொடர்களிலும் வேறு இந்திய மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
தற்பொழுது தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 50 சத்திற்கும் மேற்பட்ட தொடர்கள் எல்லாம் மறு ஆக்கத்தொடர்கள் ஆகும். உதாரணமாக ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் இரட்டை ரோஜா, ராஜாமகள், சூர்யவம்சம், பூவே பூச்சூடவா, கோகுலத்தில் சீதை, செம்பருத்தி போன்ற தொடர்கள் எல்லாம் ஜீ குழுமத் தொலைக்காட்சியான ஜீ தெலுங்கு அலைரிசைகளில் ஒளிபரப்பான தொடர்கள் ஆகும். அதே போன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கல்யாணமாம் கல்யாணம், தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை போன்ற தொடர்கள் ஸ்டார் குழுமத் தொலைக்காட்சியான ஸ்டார் பிளஸ் அலைவரிசையில் ஒளிபரப்பின தொடர்களின் மறு ஆக்கம் ஆகும். ஆனால் இந்த தொடர்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மற்றும் கலாசாரத்திற்கு ஏட்ப கதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மறு பதிப்பு
தொகுமறு பதிப்பு (மாற்றியமைத்தல் அல்லது திருத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஏற்கனவே உற்பத்தி செய்தது அல்லது முழுத் தொடர் அல்லது திரைப்படத்தை மீண்டும் மறு பதிப்பு செய்து வெளியிடும் செயல்முறையாகும். ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு முடிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிககளை புதிய குரல், தொகுப்பு அல்லது இசை மூலம் மீண்டும் திருத்தப்பட்டு பின்னர் புதிய தலைப்புடன், பெரும்பாலும் புதிய பார்வையாளர்களுக்காக ஒளிபரப்பப்படுகின்றன. இந்த வழக்கம் இந்தியாவில் இல்லாவிட்டாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வழக்கத்தில் உண்டு.
இந்தியாவில் ஒரு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 2 அல்லது 3 மொழிகளில் வெவ்வேறு நடிகர்களை வைத்து மறு பதிப்பு செய்யப்படுகிறது. அல்லது ஒரு தொடரை இரண்டு மொழிகளில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. உதாரணமாக 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டது. முதலில் தமிழில் பதிப்பு அமைக்கப்பட்ட பிறகு அதை இந்தி மொழியில் வேறு நடிகர்களை வைத்து மறு பதிப்பு செய்யப்பட்டது. இது போன்று யாவரும் நலம் (2009), தேவி போன்ற திரைப்படங்களும் இதற்குள் அடங்கும்.
தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழ் மற்றும் கன்னட மொழியில் நந்தினி (2017-2018) என்ற தொடர் மறு பதிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து மாயா என்ற தொடரும் கன்னடத்தில் மறு பதிப்பு செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kepler, Adam W. (July 22, 2015). "In Hollywood, It’s a Reboot by Any Other Name". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/07/26/movies/in-hollywood-its-a-reboot-by-any-other-name.html. பார்த்த நாள்: April 20, 2016.
- ↑ Ramachandran, Naman (2012). Rajinikanth: The Definitive Biography. Penguin Books. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-796-5.
- ↑ "rediff.com: 'It takes a lot of guts to act in a Rajnikanth remake'". Specials.rediff.com.