தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)

தெய்வம் தந்த வீடு என்பது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான தொடர். இது இரண்டு இளம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர். இத்தொடர் ஆரம்பத்தில் சாத் நிபானா சாதியா என்ற இந்தி தொடரைத் தழுவி எடுக்கப்பட்டது என்றாலும் பிறகு கதையில் மாற்றம் செய்யத் தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த நடிகை சுதா சந்திரன் அந்தத் தொடரில் இருந்து விலகினார். பிறகு அவர் நாகின் என்ற இந்தித் தொடரில் நடித்துப் புகழ் பெற்றார்.

தெய்வம் தந்த வீடு
வகைநாடகம்
இயக்கம்Nagiah சுசீந்தரன்
நடிப்புவெங்கட் ரங்கநாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்992
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 சூலை 2013 (2013-07-15) –
26 மே 2017 (2017-05-26)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தெய்வம் தந்த வீடு தொடரை நிறுத்தும்படி பல நேயர்கள் கோரிக்கை விடுத்தும் விஜய் டிவி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலேயே மிகவும் குறைந்த டி.ஆர்.பி பெற்ற தொடர் இதுவே ஆகும். இதனால் ஒருவழியாக விஜய் டிவி இத்தொடரை முடித்துவிட்டது.

நடிகர்கள்

தொகு
  • சரண்யா/ மேக்னா- சீதா ராம்
  • ச்ராவன் ராஜேஷ் - ராம்
  • வெங்கட் ரங்கநாதன்
  • சுலக்ஷ்னா - சுமித்ரா
  • கன்னியா பாரதி - பானுமதி
  • மோனிகா
  • T.R.ஓமனா
  • நிஷா

இவற்றை பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு