வெங்கட் ரங்கநாதன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வெங்கட் ரங்கநாதன் (13 மே 1989) என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். இவர் மெல்ல திறந்தது கதவு, தெய்வம் தந்த வீடு, ரோஜா போன்ற பல தொடர்களிலும் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]

வெங்கட் ரங்கநாதன்
பிறப்பு13 மே 1989 (1989-05-13) (அகவை 34)
பழனி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அஜந்தா (தற்போது வரை)
உறவினர்கள்தேஜா (மகள்)

ஆரம்ப வாழ்க்கை தொகு

வெங்கட் ரங்கநாதன் 1989 மே 13 அன்று தமிழ்நாட்டில் பழனியில் பிறந்தார். பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். புதுக்கோட்டை முகாம்பிகாய் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் அஜந்தா ஒரு புகைப்படக் கலைஞர், இவருக்கு தேஜா என்ற ஒரு மகள் உண்டு.

தொடர்கள் தொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2006 கனா காணும் காலங்கள் விஜய் தொலைக்காட்சி
2012 ஆண் பாவம் சன் தொலைக்காட்சி
2012-2014 புகுந்த வீடு ஜீ தமிழ்
2012-2013 மாயா ஜெயா தொலைக்காட்சி
2013-2017 தெய்வம் தந்த வீடு ரவிக்குமார் விஜய் தொலைக்காட்சி
2013-2014 அக்னி பறவை புதுயுகம் தொலைக்காட்சி
2016-2017 மெல்ல திறந்தது கதவு சந்தோஷ் ஜீ தமிழ்
2017-2018 நினைக்கத் தெரிந்த மனமே ரவி விஜய் தொலைக்காட்சி
2017 ஜோடி நம்பர் 1 பகுதி 9 போட்டியாளராக
2018–ஒளிபரப்பில் ரோஜா அஸ்வின் சன் தொலைக்காட்சி
2018–ஒளிபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா விஜய் தொலைக்காட்சி
2019 ஸ்டார்ட் மியூசிக் விருந்தினராக
2019 பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றி கொண்டாட்டம்

திரைப்படம் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2019 திருமணம் வெங்கட்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கட்_ரங்கநாதன்&oldid=3146557" இருந்து மீள்விக்கப்பட்டது