ஜெயா தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சி என்பது 'ஜெயா டிவி நெட்வொர்க்கு' சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகத்து 22, 1999 ஆம் ஆண்டு முதல் சென்னை யை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.

ஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் ஆகத்து 22, 1999 (1999-08-22)
ஒளிபரப்பு நிறுத்த நாள் சூலை 1, 2013 (2013-07-01) (சிங்கப்பூர்)
சூன் 1, 2020 (2020-06-01) (மலேசியா, அஸ்ட்ரோ)
வலையமைப்பு ஜெயா டிவி நெட்வொர்க்
உரிமையாளர் சுக்பிர் சிங் பாதல்
நாடு இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் jayatvnetwork.com

இத்தொலைக்காட்சி உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்து சென்ற துவக்க அலைவரிசைகளில் ஒன்றுமாகும். இத்தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெடுந்தொடர்கள் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பார்வையாளர்களுக்காக 'தரிசனம் தொலைக்காட்சி' மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. திசம்பர் 2010 முதல் ஒளித குறியீட்டை எம்பெக் இரண்டிலிருந்து எம்பெக் நான்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அக்டோபர் 14, 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[1]

வரலாறு

தொகு

இந்த தொலைக்காட்சி செல்வி ஜெயலலிதாவின் ஜெ என்ற பெயரை மையமாக வைத்து ஆகத்து 22, 1999 ஆம் ஆண்டு முதல் அவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அலைவரிசையின் கீழ் ஜெயா பிளஸ் என்ற செய்தி தொலைக்காட்சி, ஜெயா மாக்ஸ் என்ற இசை தொலைக்காட்சி மற்றும் ஜெயா மூவிஸ் என்ற திரைப்பட தொலைக்காட்சி போன்ற நான்கு அலைவரிசைகள் இயங்கி வருகின்றனர்.

நிகழ்ச்சிகள்

தொகு

இந்த தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பேச்சு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்ற பல் சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

ஜெயா தொலைக்காட்சி அலைவரிசைகள்

தொகு

ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகள்:

பெயர் குறிப்பு
ஜெயா தொலைக்காட்சி 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையிடப்படுகிறது.
ஜெயா மாக்ஸ் 24 மணி நேர திரை இசை பாடல் நிகழ்ச்சிகள் திரையிடப்படுகிறது.
ஜெயா பிளஸ் 24 மணி நேரச் செய்தி தொலைக்காட்சியாக செயல்பட்டுவருகிறது.
ஜெயா மூவிஸ் 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சியாக செயல்பட்டுவருகிறது.

வெளியிணைப்புகள்

தொகு
  1. "Conversation with Hemant Sahai Managing Partner HSA Advocates". "barandbench.com".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_தொலைக்காட்சி&oldid=4157875" இலிருந்து மீள்விக்கப்பட்டது