பேச்சு நிகழ்ச்சி

பேச்சு நிகழ்ச்சி அல்லது அரட்டை நிகழ்ச்சி (Talk show) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது வானொலி நிகழ்ச்சிகளின் வகையாகும்.[1][2] இது தன்னிச்சையான உரையாடலின் செயல்பாட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை நிகழ்ச்சி பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து சில பொதுவான பண்புகளால் வேறுபடுகிறது.[3] இந்த பேச்சு நிகழ்ச்சியில் ஒரு நபர் (அல்லது மக்கள் அல்லது விருந்தினர்களின் குழு) ஒரு பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதிக்கிறது.[4]

இந்த விவாதம் ஒரு நேர்காணல் அல்லது முக்கியமான சமூக, அரசியல், மத பிரச்சினைகள் மற்றும் பொழுதுபோக்கு பற்றிய எளிய உரையாடலின் வடிவத்தில் இருக்கலாம். இந்த பேச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளரின் ஆளுமை மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த பேச்சு நிகழ்ச்சியின் வரலாறு 1950 களில் இருந்து தற்போதைய வரை பரவியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியில் நீயா நானா (2006), தமிழா தமிழா (2018) போன்ற விவாதப் பேச்சு நிகழ்ச்சி, காபி வித் அனு, காபி வித் டி டி சன் நாம் ஒருவர்,[5] ஹலோ சகோ போன்ற பிரபலங்களின் நேர்காணல், இப்படிக்கு ரோஸ்,[6] சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை்[7] போன்ற சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த பேச்சு நிகழ்ச்சிகள், நேர்படப் பேசு, அக்னிப் பரீட்சை, ஆயுத எழுத்து போன்ற அரசியல் விவாத நிகழ்ச்சிகள் போன்றவை ஒளிபரப்பகின்றது.

கொரோனா கிருமியின் இன் விளைவுகள் தொகு

2020 இல் கொரோனா வைரசு பரவுகிறது என்ற அச்சம் காரணமாக பல பேச்சு நிகழ்ச்சிகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று இன் பரவலைக் குறைக்கும் முயற்சியாக, பல பேச்சு நிகழ்ச்சிகள் நேரடி பார்வையாளர்களின் பயன்பாட்டை நிறுத்தி சமூக விலகல் விதிகளை கடைபிடிப்பதை உறுதிசெய்தன.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. Bernard M. Timberg, Robert J. Erler (2010) Television Talk: A History of the TV Talk Show, pp.3-4
  2. Erler, Robert (2010) "A Guide to Television Talk," in Television Talk: A History of the TV Talk Show, by Bernard M. Timberg
  3. Stelter, Brian (September 30, 2010). "Anderson Cooper to Host Daytime Talk Show". NYTimes.com. https://www.nytimes.com/2010/10/01/business/media/01cooper.html. பார்த்த நாள்: July 3, 2011. 
  4. Television talk shows : discourse, performance, spectacle. Tolson, Andrew. Mahwah, N.J.: Lawrence Erlbaum. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8058-3746-9. இணையக் கணினி நூலக மைய எண் 44592593.{{cite book}}: CS1 maint: others (link)
  5. "சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கும் 'சன் நாம் ஒருவர்' நிகழ்ச்சி!". tamil.samayam.com. பார்க்கப்பட்ட நாள் Sep 29, 2018.
  6. "First transsexual celebrity, Rose, makes a TV debut". Herald Tribune. 2008-02-15.
  7. "Kalaignar TV to air new chat show Nerkonda Paarvai from 17th February". www.medianews4u.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. Koblin, John (2020-03-11). "TV Talk Shows Throw Out the Audience" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2020/03/11/business/media/talk-shows-coronavirus.html. 
  9. Emily, Yahr (March 13, 2020). "Stephen Colbert, Jimmy Fallon go off the rails as their late-night shows have no audiences". The Washington Post. https://www.washingtonpost.com/arts-entertainment/2020/03/13/late-night-colbert-fallon-no-audience/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு_நிகழ்ச்சி&oldid=3580920" இலிருந்து மீள்விக்கப்பட்டது