தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி (television program, ஐக்கிய இராச்சியத்தில் television programme அல்லது television show) என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒளிதக்கோப்புகளாகும். இது ஒரேமுறையாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பப்படும் தொடராக இருக்கலாம். ஒரு தொடர்நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சி பகுதி நிகழ்வு (episode) எனப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பகுதிகளுடன் திட்டமிடப்படும் தொலைக்காட்சித் தொடர் குறுந்தொடர் அல்லது தொடர் (Serial) என வழங்கப்படுகிறது. முடிவான நீளமின்றி தயாரிக்கப்படும் தொடர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒளிபரப்பப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடருமாறு பகுக்கப்படுகிறது. இத்தொடர், தொடர்நிகழ்ச்சியின் பருவம் எனப்படுகிறது.

ஒரேமுறையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி "சிறப்பு" நிகழ்ச்சியாக அறிவிக்கப்படலாம். தொலைக்காட்சித் திரைப்படம் எனப்படுவது (டிவி மூவி) வெள்ளித்திரைகளில் அல்லாது தொலைகாட்சித் திரைகளில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். பல வெற்றிகரமான தொலைக்காட்சி திரைப்படங்கள் டிவிடி வட்டுக்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு ஒளித நாடாக்களிலோ அல்லது பல்வித இலத்திரனியல் ஊடகங்களிலோ பிந்நாள் ஒளிபரப்பிற்காக பதிவு செய்யப்படலாம்; அல்லது நேரடியாக நேரலை தொலைக்காட்சியாக ஒளிபரப்பப்படலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகள்தொகு

வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள்தொகு

 • அசைவூட்டத் தொடர்கள்
 • விருது வழங்கப்படும் விழா நிகழ்ச்சிகள் (சில பகுதிகள் முன்னரே திட்டமிட்ட வரிவடிவப்படி)
 • நாடகம்
 • உள் வகைகள்:
  • செயல்திறன் அல்லது அதிரடி
  • நகைச்சுவை
  • குடும்ப நாடகம்
  • சட்டத்துறை நாடகம்
  • மருத்துவத்துறை நாடகம்
  • காவல்துறை செயல்முறை
  • அரசியல் நாடகம்
  • அறிவியல் புனைகதை / கனவுருப்புனைவு / திகில் படங்கள் / இயற்கைக்கு அப்பால் (அமானுசிய)]]
  • தொலைக்காட்சித் தொடர் நாடகம்
  • கண்ணீர்த் தொடர்
  • இளைஞர் நாடகம்
 • குறுந்தொடர் மற்றும் குறும்படங்கள்
 • தொலைக்காட்சி நகைச்சுவை
  • எள்ளி நகைத்தல்
  • அங்கதம்
  • நிகழிட நகைச்சுவை (Sitcom)

வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள்தொகு

 • விளையாடும் நிகழ்ச்சிகள்
 • நிகழ்நிலை தொலைக்காட்சி போட்டித் தொடர்கள்
 • அரட்டை அரங்க நிகழ்ச்சிகள்

தகவல் நிகழ்ச்சிகள்தொகு

 • தகவல் விளம்பர நிகழ்ச்சிகள்— விளம்பரத்திற்கான பணம் செலுத்தப்பட்ட நிகழ்ச்சிகள்--- திரைப்பட வெளியீடு குறித்து, பொருட்காட்சி குறித்து போன்றவை
 • செய்திகள்
 • தொலைக்காட்சி ஆவணப்படங்கள்
 • செய்தித் தொகுப்புகள்—நடப்பு நிகழ்வுகளைக் குறித்தான கலந்துரையாடல்

வெளி இணைப்புகள்தொகு