தொலைக்காட்சியில் அறிவியல் புனைவு

தொலைக்காட்சியில் அறிவியல் புனைவு (Science fiction on television) என்பது அறிவியல் புனைவு சார்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வகை ஆகும். இது முதன்முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 1930 களின் பிற்பகுதியில் தோன்றியது, இது அறிவியல் புனைகதையின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சிறப்பு விளைவுகள் மற்றும் பிற உற்பத்தி நுட்பங்கள் மூலம் யதார்த்த வடிவில் ஒரு கற்பனை உலகின் உயிருள்ள காட்சி படத்தை உருவாக்கி படைப்பதே அறிவியல் புனைவு ஆகும். ஸ்டார் ட்ரெக்,[1] ட்விலைட் ஸோன்,[2] X- பைல்ஸ், ஸ்மால்வில்லி போன்ற பல அறிவியல் புனைவு சார்ந்த தொடர்கள் ஒளிபரப்பானது.

அறிவியல் புனைவு தொலைக்காட்சி தயாரிப்பு செயல்முறை மற்றும் முறைகள்

தொகு

தற்போதைய யதார்த்தத்தை அடையமுடியாத அளவிற்கு பண்புகள் மற்றும் திறன்களைக் கொண்ட கற்பனை அமைப்புகள் அல்லது கதாபாத்திரங்களை சித்தரிக்க வேண்டிய அவசியம் தொலைக்காட்சி உற்பத்தியின் சிறப்பு நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்த தயாரிப்பாளர்களைக் கட்டாயப்படுத்துகிறது.

சிறப்பு விளைவுகள் (Special effects)

தொகு

தொலைக்காட்சியில் அறிவியல் புனைகதை வரலாறு முழுவதும் சிறப்பு விளைவுகள் ஒரு முக்கிய கருவியாக இருந்தன. சிறிய வெடிபொருள்கள், ரத்தக் குண்டுகள் ஆகியவை திகில் தொடர்களில் அரக்கர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் உருவாக்க சிறப்பு விளைவுகள் தேவைப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Strauss, Larry (September 3, 1998). "Trekkers' paradise found on local TV". News-Press (Fort Myers, Florida): p. E1. https://www.newspapers.com/image/220272918/. பார்த்த நாள்: September 5, 2019. "(Strauss:) ... thanks ... to the Sci-Fi Channel ... which brought the original series back to TV Tuesday night. Dubbed 'Star Trek: The Original Series', scenes that were cut from episodes that aired in syndication have been restored, and shows have been digitally remastered and color-corrected." 
  2. Tallerico, Brian (March 29, 2019). "'The Twilight Zone': Here's Why We Still Care". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/03/29/arts/television/the-twilight-zone-guide-reboot.html. பார்த்த நாள்: March 29, 2019.