அறிவியல் புனைவு

அறிவியல் அம்சங்களை சாரமாக அல்லது பின்புலமாக கொண்டு கற்பனையுடன் கலந்து ஆக்கப்படும் படைப்புக்களே அறிவியல் புனைவு அல்லது அறிபுனை ஆகும். "அமெரிக்கன் ஹெரிடேஜ் ஆங்கில மொழி அகராதி" அறிவியல் புனைவுகளை "அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களை தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்ட புனைவு, குறிப்பாக வருங்கால அறிவியல் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது". என கூறுகிறது.[1]

கட்டுரை, சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் என பல வடிவங்களில் அறிவியல் ஆக்கம் இருக்கலாம். அறிவியல் ஆக்கங்கள் கற்பனையான கதைப்புலத்தில், ஆனாலும் நடக்கக்கூடியதாக, அதாவது இயற்கைக்கு மீறியதாக அல்லாமல் இருக்கும். எதிர்காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக, அதிக முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக, விண்வெளிப் பயணம், வேற்றுக்கிரக வாசிகள், இயல்புகடந்த நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவியல் புனைவுகள் அமையும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்விளைவுகளை ஆராய்வது அறிவியல் புனைவுகளின் முக்கியமான மையக் கருத்தாகவுள்ளது, இதன் மூலம் அறிவியல் புனைவானது சிந்தனைகளின் இலக்கியம் என்றும் கூறப்படுகிறது.

இயல்புகள்

தொகு

வெவ்வேறானதும் நடக்கக்கூடியதுமான எதிர்கால உலகத்தைப் பற்றி பகுத்தறிவோடு ஆராய்வதாக அறிவியல் புனைவுகள் அமையும்.[2] புனைவின் அடிப்படையில் அறிவியல் புனைவுகள் அதிபுனைவுகளோடு ஒத்துப்போகும், ஆனால், அறிவியல் புனைவுகள் நடைபெறும் நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் அறிவியல் கருதுகோட்களின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் அறிவியல் மேம்பாட்டின் மூலம் நிகழக்கூடியதாகவும் இருக்கும்(எனினும் சில கதாபாத்திரங்கள் அல்லது கருத்துகள் முற்றிலும் கற்பனையானதாகவும் அமையும்).

வழக்கமாக அறியப்பட்டிருக்கும் நிதர்சனங்களிலிருந்து அறிவியல் புனைவுகளில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வேறுபட்டிருக்கும். ஏறக்குறைய அனைத்து அறிவியல் புனைவுகளும் வாசகர் அல்லது பார்வையாளரின் கற்பனைகளும் முக்கிய பங்காற்றும். மேலும், அவற்றில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு கருதுகோட்களும் கதையோட்டத்திலேயே பின்னர் விவரிக்கப்படும் அல்லது வாசகரின் கற்பனைக்கே விடப்படும். அறிவியல் புனைவின் முக்கிய அங்கங்கள்:

 • எதிர்காலம், வெவ்வேறான காலக்கோடுகள், அல்லது அறியப்பட்ட வரலாற்றிலிருந்தும் தொல்பொருளியறிவியலிலிருந்து மாறுபட்டதாகவும் அமைந்த கடந்தகாலம் ஆகியவை.
 • விண்வெளியில் நடைபெறும் நிகழ்வுகள், முக்கியமாக விண்வெளிப் பயணங்கள்.[3]
 • வேற்றுக்கிரகவாசிகள், விகாரிகள், மனிதப்போலி எந்திரங்கள் போன்ற கதாபாத்திரங்கள்.
 • தற்காலத்தில் இல்லாத, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக்கூடிய தொழில்நுட்பங்கள்.[4]
 • தற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கும் அறிவியல் கருதுகோட்களோடு ஒத்துப்போகாத ஆயினும் நடைபெறக்கூடிய கருதுகோட்கள் இடம்பெற்றிருக்கும் (எ-கா: ஒளியை-விட-வேகமாகப் பயணித்தல், காலப்பயணம் போன்றவை)
 • புதிய மற்றும் வழக்கத்து மாறான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள்.[5]
 • மனக் கட்டுப்பாடு, தொலைவிலுணர்தல், தொலைவியக்கல் (பொருட்களை தொடாமல் நகர்த்துதல்) மற்றும் தொலைப்பெயர்த்தல் போன்ற இயல்புகடந்த திறன்கள்.
 • மற்ற அண்டங்கள் மற்றும் அதிக பரிமாணங்களும் அவற்றினிடையே பயணித்தல் ஆகியவை.

தமிழில் அறிவியல் புனைவு

தொகு

உலக அளவில் முக்கியமான அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்
 2. Del Rey, Lester (1979). The World of Science Fiction: 1926–1976. Ballantine Books. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-25452-X.
 3. Sterling, Bruce. "Science fiction" in பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 2008 [1]
 4. Card, Orson Scott (1990). How to Write Science Fiction and Fantasy. Writer's Digest Books. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89879-416-1.
 5. Hartwell, David G. (1996). Age of Wonders: Exploring the World of Science Fiction. Tor Books. pp. 109–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-86235-0.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_புனைவு&oldid=3924133" இலிருந்து மீள்விக்கப்பட்டது