பகுத்தறிவு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.
பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும்.
ஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம்.
பகுத்தறிவும் திருக்குறளும்
தொகுபகுத்தறிவு அறிவு என்பது நிகழ்வுகளோ, கருத்துக்களோ எதுவாயினும், அவை தோன்றக் காரணம் (cause) அதனாலுண்டாகும் பின்விளைவு (effect) இவற்றைப் புரிந்து செயல்படுவதாகும்
- எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு. -திருக்குறள்
இதன்பொருள்:
- எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
- அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் உண்மையான கருத்தைக் காணவல்லது அறிவு.
விளக்கம்:
- குணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். அடு்க்குப் பன்மை பற்றி வந்தது. 'வாய்' என்பது, அவர் அப்பொருளின்கட் பயிலாமை உணரநின்றது. மெய்யாதல்- நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- The Reason! Project
- What is rationality?
- Reason and Rationality பரணிடப்பட்டது 2015-10-31 at the வந்தவழி இயந்திரம், by Richard Samuels, Stephen Stich, Luc Faucher on the broad field of reason and rationality from descriptive, normative, and evaluative points of view
- Stanford Encyclopedia of Philosophy entry on Historicist Theories of Rationality
- What Ever Happened to Reason? - Roger Scruton