வினை விளைவுக் கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு நிகழ்வு நேரடியாக மற்றொரு நிகழ்வுக்கு மூலமாக இருக்கும் என இரு நிகழ்வுகளுக்கிடையிலுள்ள தொடர்பைப்பற்றி விளக்குவது வினை விளைவுக் கோட்பாடு.
வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாகத் தென்பட்டாலும், இது ஒரு அறிவியல், மெய்யியல், ஆன்மீகக் கருத்துரு ஆகும். ஆன்மிக கருத்துருவைப்பற்றி இந்து சமயத்தில் மூவினைத் தத்துவத்தில் பார்க்கவும்.
எடுத்துக்காட்டாக வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது வேதிவினை நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம்.
வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் விவசாயிகள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து அறுவடை செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.
வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் நோய்களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
இவற்றையும் பார்க்கதொகு
வெளி இணைப்புகள்தொகு
- விளைவும் வினையும் பரணிடப்பட்டது 2007-02-25 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்) Causality and Causation by John F. Sowa