முதன்மை பட்டியைத் திறக்கவும்

திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாத்துரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனமுற்றவர் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புர மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது எனக் கருதப் படுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும் இட ஒதுக்கீடு ஏற்படலாம்.

இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.

சர்ச்சைதொகு

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். [1]. பல சமூகத்தினர் நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றவர்களும் தற்போது இடஒதுக்கீடுவேண்டும் வேண்டும் என்று போராடும் மனநிலையில் உள்ளார்கள்.[1] ஆறுமுகம்கண்ணன் கடப்பாக்கம்

உலகநாடுகளில் இட ஒதுக்கீடுதொகு

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : இங்கு 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.[சான்று தேவை]

தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

இந்தியா: இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.

மலேசியாவில் : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக 'பூமிபுத்திரர்' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.

இலங்கை: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு.

பிரித்தன்: இங்கு ஒருவருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.

பாஸ்னியா: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.

பிரேசில்: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்

இந்தியாவில் இட ஒதுக்கீடுதொகு

[3][4]

  • தேவையான கல்வித் தகுதி படைத்த பார்வை இல்லாதவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் தலா ஒரு விழுக்காடு வீதம் மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.[5][6]

இவற்றையும் பார்க்க:தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்:தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட_ஒதுக்கீடு&oldid=2809166" இருந்து மீள்விக்கப்பட்டது