அரவிந்தன் நீலகண்டன்

தமிழ் எழுத்தாளர்

அரவிந்தன் நீலகண்டன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர். ராஜீவ் மல்கோத்ரா உடன் இணைந்து இவர் எழுதிய உடையும் இந்தியா எனும் நூல் அதிகம் கவனிக்கப்பட்ட படைப்பாகும். “ஆழி பெரிது” வேதகாலப் பண்பாடு குறித்து அரவிந்தன் எழுதியுள்ள ஓர் ஆய்வு நூல். இது தமிழ்ப் பேப்பர் என்ற இணைய இதழில் தொடராக வெளிவந்தது. இணைய இதழில் தொடராக வெளிவந்தபோது மிகப்பெரும் வரவேற்பையும் அதைவிடப் பெரிய சர்ச்சைகளையும் எதிர் கொண்டது[1]. கதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதுவதோடு வலம் என்ற மாத இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருபவர்.[2]. மேலும் "ஸ்வராஜ்யா" மற்றும் "தமிழ் ஹிந்து" இணையதளங்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் அவற்றின் படைப்புகளில் பங்கெடுப்பவராகவும் உள்ளார்[3].

அரவிந்தன் நீலகண்டன்
பிறப்பு(1971-06-16)16 சூன் 1971
நாகர்கோவில், தமிழ்நாடு
தொழில்எழுத்தாளர், வலைப்பதிவாளர், பதிப்பாசிரியர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
கருப்பொருள்அரசியல், அறிவியல், மற்றும் இந்துத்துவம்
இணையதளம்
அரவிந்தன் நீலகண்டனின் வலைப்பதிவு

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அரவிந்தன் நீலகண்டன் 16 சூன் 1971 அன்று நாகர்கோவிலில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டமும், மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தில் பொருளாதரத்தில் பட்டமும் பெற்றுள்ளார். திண்ணை இணைய இதழில் இந்தியவியல் மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து பொது வெளியில் அறிமுகமானார். ஆசிய செய்திகள் தொடர்பாக பத்தி எழுத்தாளராக யு. பி. ஐ. (UPI) இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வந்தார். பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களோடு கூட, "தினமணி ஜக்‌ஷன்", "சொல்வனம்", தமிழ்ப் பேப்பர் மற்றும் "திண்ணை" இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த கல்வியிலாளர்கள் மற்றும் தனிப்பட்ட அறிஞர்கள் பங்குபெறும் "சிருஷ்டி மதுரை" என்ற அமைப்பில் வழி நடத்துபவர்களுள் ஒருவராக உள்ளார். கோபி சங்கரின், பாலியல் வேறுபாடுகள் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்[4].

படைப்புகள் தொகு

சிறுகதை, கட்டுரை, சமூக மற்றும் அரசியல் நூல்கள்.

தமிழ்ப் புத்தகங்கள் தொகு

இவர் கீழ்வரும் தமிழ்ப்புத்தகங்களை எழுதியுள்ளார்[5], [6].

  • உடையும் இந்தியா
  • ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல் [7]
  • இந்திய அறிதல் முறைகள்: நவீன அறிவியல் புலங்களைப் புரிந்து கொள்ள
  • நம்பக்கூடாத கடவுள்
  • நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
  • பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸம்
  • இந்துத்துவச் சிறுகதைகள்
  • இந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்
  • கொஞ்சம் தேநீர் கொஞ்சம் இந்துத்துவம்
  • மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

வலம் இதழில் எழுதியுள்ள கட்டுரைகள்

ஆழி பெரிது – ஒரு மதிப்புரை - சொல்வனம் இணைய இதழில் இருந்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்தன்_நீலகண்டன்&oldid=2991875" இலிருந்து மீள்விக்கப்பட்டது