ராஜீவ் மல்கோத்ரா

இந்திய-அமெரிக்க எழுத்தாளர்

பிறப்பு15 செப்டம்பர் 1950 (1950-09-15) (அகவை 74)
புது தில்லி,.இந்தியாகுடியுரிமைஇந்திய அமெரிக்கர்படித்த கல்வி நிறுவனங்கள்புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி
சைரகியூஸ் பல்கலைக்கழகம் , ஐக்கிய அமெரிக்காபணி

  • எழுத்தாளர்
  • ஆய்வாளர்
  • பேராசிரியர்

குறிப்பிடத்தக்க படைப்புகள்Breaking India]' (2011),
Being Different (2011),
Indra's Net] (2014),
The Battle for Sanskrit (2016)வலையொலியாளர்வலைத்தளம்http://rajivmalhotra.com

ராஜீவ் மல்கோத்ரா (Rajiv Malhotra), (பிறப்பு: செப்டம்பர் 15, 1950) ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர், கணினி மற்றும் தொலைத் தொடர்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, 1995 ஆம் ஆண்டில் முன்கூட்டியே, விருப்ப ஓய்வு பெற்றார். இண்டிக் ஆய்வுகளை மையமாகக் கொண்ட முடிவிலி அறக்கட்டளையை அமைத்தார். மேலும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் திட்டமான, திபெத்திய பௌத்த தென்க்யூரை மொழிபெயர்க்க நிதியளித்தார். [1]

முடிவிலி அறக்கட்டளையைத் தவிர, மல்கோத்ராவின் "இண்டிக்" கலாச்சாரங்கள், முக்கியமாக இந்து மதம் பற்றிய மேற்கத்திய சாரா பார்வையை ஊக்குவிக்கிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றிய, "இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் கல்வி ஆய்வு"க்கு எதிராக மல்கோத்ரா பெருமளவில் எழுதியுள்ளார். குறிப்பாக இந்து மதத்தைப் பற்றிய ஆய்வு மேற்கின் அறிஞர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. இது, "இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்க்கும் முன்னுதாரணங்களை ஊக்குவிப்பதன் மூலம்", அதன் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். [2]

சுயசரிதை

தொகு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தொழில்களில் ஒரு தொழில்முனைவோராக மாறுவதற்கு முன்பு மல்கோத்ரா, டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் மற்றும் சைராகஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றார். [3] [4]

1994 இல், தனது 44வது வயது துவக்கத்திலேயே அவர் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, 1995 இல், பிரின்ஸ்டன், நியூ ஜெர்சியில் ஒரு முடிவிலி அறக்கட்டளையை நிறுவினார். அந்த அறக்கட்டளையை இயக்குவதோடு மட்டுமல்லாமல், டார்ட்மவுத், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய ஆய்வுகள் மையத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகவும், பல்வேறு அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். [5] அமெரிக்க பத்திரிகையாளரின் தற்போதைய அரசியல் போக்குகளுக்கு பதிலளிக்கும் அமெரிக்க இந்தோலஜிஸ்ட் யெவெட் ரோஸர், இந்து மதத்தைப் பற்றிய மல்ஹோத்ராவின் நிலைப்பாட்டை, "ஒரு இந்துத்துவா இந்து அல்லாதவர் " என்று விவரிக்கிறார். [6]

மல்கோத்ரா மாசசூசெட்ஸ் டார்ட்மவுத் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுகளுக்கான மையத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேச்சாளராக இருந்தார். மேலும் கிளேர்மான்ட் கல்லூரிகளில் இந்திய தத்துவம் மற்றும் கலாச்சாரத்திற்கான அறக்கட்டளையின் குழு உறுப்பினராக இருந்தார். [7] இணைய விவாதக் குழுக்கள் மற்றும் எஜின்கள் குறித்தும் விரிவாக எழுதினார்.

முடிவிலி அறக்கட்டளை

தொகு

மல்கோத்ரா இந்த நிறுவனத்தை 1995 இல் நிறுவினார்; 2000 ஆம் ஆண்டில் கல்வி இண்டிக் மரபு மன்றம் (ஈசிஐடி) தொடர்ந்து வந்தது. [7] [8] இந்த அறக்கட்டளை, மல்கோத்ரா உட்பட, முழுநேர ஊழியர்கள் இல்லாமல் செயல்படுகிறது; இங்குள்ள ஊழியர்களுக்கு, பண்டைய இந்திய மதங்களை தவறாக சித்தரிப்பதை எதிர்த்துப் போராடுவது மர்றும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவது போன்றவை கூறப்பட்ட குறிக்கோள்களாக உள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் எவரும் ஒரு கல்வியாளர் அல்ல. இதில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த அறக்கட்டளை ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக 400 க்கும் மேற்பட்ட மானியங்களை வழங்கியுள்ளதுடன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகளில் வருகை தரும் பேராசிரியர் பதவி, ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் யோகா மற்றும் இந்தி வகுப்புகள், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவாகவும், முக்கிய பல்கலைக்கழகங்களுக்கு சிறிய மானியங்களையும் வழங்கியுள்ளது.

ஹவாய் பல்கலைக்கழகம், உலகளாவிய மறுமலர்ச்சி நிறுவனம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆய்வுகளுக்கான மையம் , கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் அறிவியலுக்கான ஒரு திட்டம் , பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் மேம்பட்ட ஆய்வு மையத்திற்கான நிதியுதவி, மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் நனவு ஆய்வு மையத்தில் விரிவுரைகள் போன்றவற்றிகாகவும் உதவியுள்ளது.

இந்த அறக்கட்டளை ஆசியா பற்றிய கல்வி [9] மற்றும் இந்து ஆய்வுகளின் சர்வதேச இதழ் போன்ற பத்திரிகைகளுக்கும், ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய அகிம்சைக்கான மகாத்மா காந்தி மையத்தை நிறுவுவதற்கும் நிதி வழங்கியுள்ளது. [10]

அறக்கட்டளையின் சொந்த பொருட்கள் கல்வி மற்றும் பரோபகாரத்தின் அடிப்படையில் அதன் நோக்கங்களை விவரிக்கும் அதே வேளையில், இந்து மதம் மற்றும் தெற்காசியாவின் அறிஞர்கள் இதை பெரும்பாலும் "அகாதமியின் கண்காணிப்புக்கு" என்று உறுதியளித்த ஒரு அமைப்பாகவே பார்க்கிறார்கள். மற்றும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூத்த அமெரிக்க இந்து மத அறிஞர் டாக்டர் ஜாக் ஹவ்லி, வட அமெரிக்காவில் இந்து மத ஆய்வுக்கு எதிரான அறக்கட்டளையின் சிறப்பியல்பு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். [11]

மரியாதைகள்

தொகு

அக்டோபர் 2018 இல் புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஊடக ஆய்வுகள் மையத்தில் கௌரவ வருகை பேராசிரியராக ராஜீவ் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார் [12]. அங்கு, நவம்பர் 6 ஆம் தேதி சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்க முடியாதவை என்ற தலைப்பில் சமஸ்கிருத பள்ளி மற்றும் இந்திய ஆய்வுகள் ஏற்பாடு செய்த தனது முதல் சொற்பொழிவை நிகழ்த்தினார். [13]

குறிப்புகள்

தொகு
  1. Thurman 2004.
  2. Kurien 2007.
  3. The interpretation of gods. http://magazine.uchicago.edu/0412/features/. 
  4. "Rajiv Malhotra". The Huffington Post. TheHuffingtonPost.com, Inc. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012.
  5. "Infinity Foundation". Archived from the original on 17 December 2013.
  6. Rosser 2007.
  7. 7.0 7.1 Campbell, James T.; Guterl, Matthew Pratt; Lee, Robert G. (2007). Race, Nation, and Empire in American History (in ஆங்கிலம்). University of North Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807831274.
  8. Kurien, Prema A. (2007). A Place at the Multicultural Table: The Development of an American Hinduism (in ஆங்கிலம்). Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813540566.
  9. Campbell 2007
  10. Mittal 2006
  11. "Course Challenges | Religion". Archived from the original on 2019-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  12. "CMS Faculty". www.jnu.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
  13. "SS&IS organises a lecture by Shri Rajiv Malhotra". jnu.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_மல்கோத்ரா&oldid=4090267" இலிருந்து மீள்விக்கப்பட்டது