கற்பனை நிகழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சிவகை

கற்பனை நிகழ்ச்சி எனப்படுவது தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் மந்திரம், மீயியற்கை, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது கற்பனை உலகங்கள் என வடிவமைக்கப்படும். கற்பனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, அல்லது பிற ஊடகங்களில் உள்ள கற்பனைக் கதைகளிலிருந்து தழுவி எடுக்கப்படுகின்றன. மற்றும் அறிவியல் புனைகதை மற்றும் திகிலுடன் சார்ந்து எடுக்கப்படுகின்றது.

தமிழ் தொலைக்காட்சியில் பெரும்பாலும் புராணக்கதைகளை சார்ந்தே எடுக்கப்படுகின்றது. உதாரணம்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்க்கடவுள் முருகன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் போன்ற தொடர்கள் அடங்கும். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி மற்றும் மாயா தொடர்கள் கற்பனை மற்றும் திகில் தொடராக எடுக்கப்பட்டது. தாழம்பூ என்ற தொடர் கற்பனை காதல் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சீக்ரட் கார்டன், மாஸ்டர்ஸ் சன், மூண் எம்பிரசிங் தி சன், மை லவ் ஃப்ரம் த ஸ்டார் போன்ற கொரியன் மொழி கற்பனை தொடர்கள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் 2013 முதல் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பானது.

மாவீரன் ஹதீம், நாகினி, சந்தியா, போன்ற ஹிந்தி மொழத் தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சில தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பனை_நிகழ்ச்சி&oldid=2978486" இலிருந்து மீள்விக்கப்பட்டது