ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் என்பது தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் தயாரிக்கப்பட்ட தொன்மவியல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ் மொழியில் அக்டோபர் 22, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும், கன்னடம் மொழியில் அக்டோபர் 15, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஜீ கன்னடம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. [1][2] இது மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்
வேறு பெயர்ಶ್ರೀ ವಿಷ್ಣು ದಶಾವತಾರ
வகைதொன்மவியல்
மூலம்விஷ்ணு
இயக்கம்தீரஜ்குமார்
படைப்பு இயக்குனர்சஞ்சேய் குப்தா
நடிப்பு
  • அமித் கஷாப்
  • நிஷா பி.கே
  • ஹர்ஷா
  • அர்ஜுன்
முகப்பு இசைடைசன்பால்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்
அத்தியாயங்கள்தமிழ் (84)
கன்னடம் (85)
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஜீபி கோச்சர்
தீரஜ்குமார்
சுனில் குப்தா
ஒளிப்பதிவுஅணில் மிஸ்தா
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஜீ கன்னடம்
ஒளிபரப்பான காலம்22 அக்டோபர் 2018 (2018-10-22) –
22 பெப்ரவரி 2019 (2019-02-22)
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஜீ கன்னடம் தொலைக்காட்சியில் பிப்ரவரி 2, 2019 அன்று 85 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 23, 2019 அன்று 84 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச் சுருக்கம் தொகு

இந்த தொடர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆன மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவியுடனான காதலைப்பற்றியும் விளக்குகின்றது.

நடிகர்கள் தொகு

நடிகர்களின் தேர்வு தொகு

இது ஒரு இரு மொழித் தொடர் என்றாலும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கன்னட தொலைக்காட்சி நடிகர்கள் ஆவார். இந்த தொடரில் கடவுள் விஷ்ணு கதாபாத்திரத்தில் 'அமித் கஷாப்' என்ற புதுமுக நடிகர் நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக லட்சுமி தேவி என்ற காதாபாத்திரத்தில் நிஷா என்பவர் நடிக்கின்றார்.

மொழிகள் தொகு

மொழி அலைவரிசை ஒளிபரப்பான நாள் மொத்த அத்தியாயங்கள்
கன்னடம் ஜீ கன்னடம் 15 அக்டோபர் 2018 (2018-10-15) - 2 பெப்ரவரி 2019 (2019-02-02) 85
தமிழ் ஜீ தமிழ் 22 அக்டோபர் 2018 (2018-10-22) - 22 பெப்ரவரி 2019 (2019-02-22) 84

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் அடுத்த நிகழ்ச்சி
இனிய இரு மலர்கள் பூவே பூச்சூடவா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_விஷ்ணு_தசாவதாரம்&oldid=3256623" இலிருந்து மீள்விக்கப்பட்டது