இலக்குமி

இந்துக்கடவுள்
(லட்சுமி (இந்துக் கடவுள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்குமி (Lakshmi) அல்லது திருமகள் அல்லது அலைமகள் அல்லது மலர்மகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விட்டுணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

லட்சுமி
ரவி வர்மாவின் லட்சுமி ஓவியம்
அதிபதிதானம், வைபவம், சுகம், சந்தோஷம், சக்தி, ஆரோக்கியம், மாங்கல்யத்தின் கடவுள்.
வேறு பெயர்கள்அட்டலட்சுமி, அம்புசத்தி, அம்புசி, அம்புயத்தி, அம்புயாசனை, அம்புயை, அம்புலிச்சோதரி, அம்போருகத்தாள், அம்போருகை, அரவிந்தை, அரிப்பிரியை, அல்லிமாதர், அலர்மகள், அலர்மேல்மங்கை, அலராள், அலைமகள், அஷ்டலட்சுமி, ஆதிலட்சுமி, இந்திரா, இந்திரை, இரமா, இரமை, இலக்குமி, இலட்சுமி, இளையள், கமலத்தேவி, கமலை, கஜலட்சுமி, கோகனகத்தி, கோகனகை, கோகனதை, சந்தானலட்சுமி, சலசை, சீதேவி, செங்கமலவல்லி, செய்யாள், தனலட்சுமி, தாக்கணங்கு, தானியலட்சுமி, திருமகள், திருமலர்ச்செல்வி, தைரியலட்சுமி, பத்மாசனி, பார்க்கவி, பின்பிறந்தாள், புட்பாசனி, புண்டரிகை, புள்வாய்கீண்டோன், பூமகள், பூமங்கை, பூமன்னு மாது, பூமான், பூமிசை, பூமின், பெரியபிராட்டி, மகாலட்சுமி, மங்கலை, மணிமாலை, மலர்மகள், மலர்மங்கை, மறைத்தலைவி, மாதிரு, மாறிருமார்பினள், முண்டகாசனை, முத்தி, முளரிப்பாவை, லட்சுமி, வரவண்ணினி, வனசை, வாமலோசனை, வாமா, வாமை, வித்யாலட்சுமி, விந்தை, விமலை, விஜயலட்சுமி, வேதநாயகி, வேதமுதல்வி, க்ஷீராப்திதனயை [1]
தேவநாகரிलक्ष्मी
சமசுகிருதம்lakṣmī
வகைதேவி (முத்தேவியர்)
இடம்வைகுந்தம், திருப்பாற்கடல்
மந்திரம்ஓம் மகாலட்சுமியே நமக
துணைவிஷ்ணு
சகோதரன்/சகோதரிஜேஷ்டா தேவி (மூத்த சகோதரி), சந்திரன்
குழந்தைகள்பிரம்மா, காமதேவன் , 18 மகன்கள், தேவசேனை, வள்ளி

தோற்றம் மற்றும் புராணம்

தொகு

அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார்.

பெயர்கள்

தொகு

லட்சுமி என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.

வேறு பெயர்கள்

தொகு
  • பத்மா: தாமரையில் வசிப்பவள்
  • கமலா: தாமரையில் வசிப்பவள்
  • பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
  • பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
  • விஷ்ணுப்பிரியா: திருமாளை விரும்புகின்றவள்

திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

படிமவியல்

தொகு

லட்சுமி வடிவங்கள்

தொகு

லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அஷ்ட லட்சுமிகள்

தொகு

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வடிவங்கள்

தொகு

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.[சான்று தேவை]

16 வடிவங்கள்கான முதல் திருக்கோயில் ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவில் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், எட்டிக்குட்டைமேடில் அமைந்துள்ளது. நீங்கள் பிறந்த திதியில் லட்சுமியை வழிபாடு செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். (திதி வழிபாடு சிறப்புகள்)

1. ஆதி மகாலட்சுமி — பிரதமை திதி

2. தனலட்சுமி — துவிதியை திதி

3. வீரலட்சுமி — திருதியை திதி

4. கஜலட்சுமி — சதுர்த்தி திதி

5. சந்தானலட்சுமி — பஞ்சமி திதி

6. தான்யலட்சுமி — சஷ்டி திதி

7. விஜயலட்சுமி — சப்தமி திதி

8. வித்யாலட்சுமி — அஷ்டமி திதி

9. சௌபாக்கியலட்சுமி — நவமி திதி

10. அமீர்தலட்சுமி — தசமி திதி

11. கீர்த்திலட்சுமி — ஏகாதசி திதி

12. சக்திலட்சுமி — துவாதசி திதி

13. ஆரோக்கியலட்சுமி — திரயோதசி திதி

14. ஞானலட்சுமி — சதுர்தசி திதி

15. சாம்ராஜ்யலட்சுமி — பௌர்ணமி திதி

16. காருண்யலட்சுமி — அமாவாசை திதி

லட்சுமி விழாக்கள்

தொகு

மந்திரங்கள்

தொகு

கோயில்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. https://ta.wiktionary.org/s/72kf
  2. ஸ்ரீ சூக்தம்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமி&oldid=3944905" இலிருந்து மீள்விக்கப்பட்டது