கோலாப்பூர்

கோலாப்பூர் (Kolhapur, மராத்தி: कोल्हापूर) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.[2]கோலாப்பூர் மாவட்டத் தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி மராத்தி ஆகும். பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள இந்துக் கடவுள் மகாலட்சுமி கோவிலுக்காக புகழ்பெற்றது.

கோலாப்பூர்
—  நகரம்  —
கோலாப்பூர்
இருப்பிடம்: கோலாப்பூர்

, மகாராட்டிரம் , இந்தியா

அமைவிடம் 16°42′00″N 74°14′00″E / 16.7000°N 74.2333°E / 16.7000; 74.2333
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் கோலாப்பூர்
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
நகரத்தந்தை வந்தனா புகாடே[1]
மக்களவைத் தொகுதி கோலாப்பூர்
மக்கள் தொகை 493,169 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


569 மீட்டர்கள் (1,867 அடி)

குறியீடுகள்

கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் கோலப்பூரி சப்பல்கள் எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.

சுற்றுலா

தொகு
  • அருங்காட்சியகம்
கோலாப்பூர் வரலாற்றை நினைவுகூறும் டவுன் ஹால் அருங்காட்சியகம் உள்ளது. கோலாப்பூரின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dnaindia.com/mumbai/report_buchade-elected-mayor-patil-deputy-mayor-in-kolhapur-civic-polls_1467437
  2. "Kolhapur Population". Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
  3. Bramhapuri: Earliest habitation of the city - Times of India

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோலாப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாப்பூர்&oldid=3978363" இலிருந்து மீள்விக்கப்பட்டது