இயங்குபடம் தொடர்கள்

இயங்குபடம் தொடர்கள் (அனிமேஷன்) (Animated series) என்பது ஒரு தலைப்பை கொண்டு பல கதாபாத்திரங்கள் மூலம் உருவாக்கப்படும் தொடர் வடிமாகும். இந்த கதை ஒரு முக்கிய கதாபாத்திரத்தை சுற்றி பல துணைக்கு கதாபாத்திரங்களுடன் உருவாக்கபடுகின்றது. இயங்கும்படம் முதலில் குறும் தொடர் வடிவில் உருவாக்கி அதன் பிறகு தொலைக்காட்ச்சியில் தொடராக வடிவம் பெறும் வழக்கமும் உண்டு.

இந்த இயங்குபடம் இணையம், தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றது. இது குழந்தைகள் இயங்கும் படம் மற்றும் வயது வந்தோர் இயங்கும் படம் என் இரண்டு பிரிவில் பிரிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றது. தமிழில் இயங்கும்படம் எடுப்பது மிகக்குறைவு, பெரும்பாலும் ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த இயங்குபடத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

லிட்டில் சோட்டா பீம் (2008), ஸ்ரீ கிருஷ்ணா (2009), பாகுபலி: லாஸ்ட் லெஜண்ட்ஸ் (2017), லிட்டில் சிங்கம் (2018) போன்றவை இந்தியாவில் பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட இயங்கும்படம் ஆகும்.

தோற்றம்தொகு

முதல் இயங்குபட தொலைக்காட்சித் தொடர் க்ரூஸேடர் ராபிட். இயங்கும்படம் சூழ்நிலை முதன் முதலில் 1960களில் தோன்றியது, தி பிளின்ட்ஸ்டோன்ஸ் (1960-1966), அதைத் தொடர்ந்து தி ஜெட்சன்ஸ் (1962-1987). 1972 முதல் 1974 வரை, ஹன்னா-பார்பெரா தயாரிப்பில் வெயிட் டில் யுவர் ஃபாதர் கெட்ஸ் ஹோம் என்ற தொடர் வயது வந்தோருக்கான பாணியில் வெளியானது. 1980கள் மற்றும் 1990கள் கேலிச்சித்திரம் குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர் மற்றும் வயது வந்தோரின் தொலைக்காட்சித் தொடர் என பிரிக்கப்பட்டு வெற்றியும் கண்டது.

தமிழில்தொகு

ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்காக மட்டும் இயங்குபடங்கள் தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் (காலை, மதியம் அல்லது மாலை) ஒளிபரப்பு செய்து வந்தது. 2007ஆம் ஆண்டு காலத்தில் சுட்டித் தொலைக்காட்சி வருகைக்கு பிறகு 24 மணித்தியாலம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.[1][2][3][4][5] ஜப்பான் நாட்டு மங்கா தொடரான சிஞ்சான் என்ற தொடர் தமிழில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இயங்குபடத்திற்கான தொலைக்காட்சி அலைவரிசைகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்குபடம்_தொடர்கள்&oldid=3234200" இருந்து மீள்விக்கப்பட்டது