இயங்குபடம்

நகரும் படங்களை உருவாக்க கூடிய முறை

இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகும்.

இந்த ஆறு சட்டங்களை கொண்டது தான் கீழே இருக்கும் இயங்குப்படம்.

இந்த இயங்குப்படம் ஒரு வினாடிக்கு ஆறு சட்டங்கள் வீதம் நகருகிறது.

இயங்குப்படங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன. இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.

சொற்பிறப்பியல் தொகு

இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation), அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.

நுட்பங்கள் தொகு

இயங்குபடத்தில் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாரம்பரிய இயங்கு படங்கள் தொகு

பாரம்பரிய இயங்கு படங்கள் கையால் வரையப்பட்ட படங்கள் என்றும் கூறப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டுகளின் திரைப்படங்கள் பலவற்றில் இந்த வகையான தொழினுட்பம்களை பயன்படுத்தினர். இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில் உருவாக்கினர். அதில் ஒவ்வொரு இயங்குபடங்களிலும் சிறிய முன்னேற்றங்களை செய்தனர். பின்பு வரைந்ததை செல் என்று கூறப்படும் உப்புத்தாளில் அதில் வைத்து அதனை வண்ணங்கள் கொண்டு நிரப்புவர்.

நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் தொகு

நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் என்பது நிஜ உலகில் உள்ள பொருட்களை புகைப்படங்களின் சட்டகங்களாக வைத்து அதனை மாயத்தோற்றத்தில் அசையும் வகையில் வைக்கப்படுவது ஆகும். பல வகையான நிறுத்தும் இயங்குபடங்கள் உள்ளன. இன்றைய நவீன காலங்களில் கணிப்பொறியின் உதவியுடன் இவ்வகையான இயங்குபடங்களை உருவாக்கலாம். ஆனால் பாரம்பரிய இயங்குபடங்களும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. கணிப்பொறியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய நிறுத்தும் இயங்குபடங்கள் செலவு குறைவானதும், நேரங்களை மிச்சப்படுத்தவும் செய்கின்றன.

கைப்பாவை இயங்குபடம் கைப்பாவை இயங்குபடம் தான் நிறுத்தும் இயங்குபடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வைகையான இயங்குபடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய மூட்டுகளில் கட்டுப்படுத்தும் வகையிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக தி டேல் ஆஃப் த பாக்ஸ் (பிரான்ஸ், 1937), த நைட்மேர் பிஃபோர் கிறிஸ்துமஸ் (யு.எஸ்., 1993), கார்பஸ் ப்ரைட் (யு.எஸ்., 2005), கோரலின் (யு.எஸ்., 2009).களிமண் இயங்குபடம் களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் (இங்கிலாந்து, 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன்.

கொள்கைகள் தொகு

வால்ட் டிஸ்னி நிறுவனம் இயங்குபடத்திற்கான கொள்கைகளை அதன் இயங்குபட உருவாக்குநர்களான ஆல்லி ஜான்சன், ஃப்ரான்க் தாமஸ் ஆகியோர் 1981 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மாயத்தோற்றம் ( தி இல்லுயூசன் ஆஃப் லைஃப்) என்ற நூலில் வரையறை செய்தனர்.

நசுக்குதல் மற்றும் நீட்டுதல் தொகு

நசுக்குதல் மற்றும் நீட்டுதல் என்ற கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. ஒரு வரையப்பட்ட பொருளின்எடை மற்றும் நெகிழ்வுத்தன்மைகளுக்கு உணர்ச்சிகளைக் கொடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது ஆகும். மேலும் பௌன்சிங் பால் (bouncing ball) போன்ற சிறிய பொருள்களை விளக்குவதற்கும், அல்லது முகத்தின் தசைகள் போன்ற சிக்கலானவற்றிற்கும் இந்த வகையான கொள்கைகள் பயன்படுகின்றன.

எதிர்பார்த்தல் தொகு

பார்வையாளார்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உண்மையான உனர்வுகளை கொடுக்க இந்த கொள்கைகள் உதவுகிறது.நடனக் கலைஞர்கள் முதலில் முழங்காலகளை மடக்க வேண்டும். சிறிய செயல்களை செய்வதற்கு இவைகள் பயன்படுகின்றன. உதாரணமாக யாரோ ஒருவரின் வருகையை எதிர்பார்ப்பது, அல்லது ஏதேனும் ஒரு பொருளை உற்று நோக்க்குவது போன்றவை ஆகும்.

நாடக அரங்கேற்றம் தொகு

நாடக அரங்கேற்றம் என்பது மேடைகளில் அரங்கேற்றப்படும் நாடகங்களைப் போன்றது ஆகும். இதனை திரையரங்கு மற்றும் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் பார்வையாளர்களை ஒரு காட்சியில் அவர்களின் முழுக் கவனத்தையும் வைத்திருப்பது ஆகும். ஜான்ஸ்டன் என்பவர் அரங்கேற்றம் என்பதனை நடிகர்கள் தாங்கள் கூற வந்த கருத்தினை எந்த விதமான பிழைகளுமின்றி தெளிவாக கூற விளைவது ஆகும் என்று வரையறை செய்துள்ளார்.

இயங்கு படத்தின் பிரிவுகள் தொகு

 1. இருபரிமாண இயங்குப்படம்
 2. முப்பரிமாண இயங்குப்படம்

இருபரிமாண இயங்குப்படம் தொகு

இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ் (flash), டுன் பூம் (toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முப்பரிமாண இயங்குப்படம் தொகு

முப்பரிமாணங்கள் (x,y,z) கொண்டது. முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக மாயா maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயங்குபடத்தின் வரலாறு தொகு

முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றை குகைகளிலும், பழங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.

பழைய கற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தை கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்[1].
1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்[2].

இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும். இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது. இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்றமே காரணம்.

திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி (Projector), அச்சுப்பொறி (Printer), புகைப்படக்கருவி (Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதரர்கள் ஆவர். உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்[3]. ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832), ஜோட்ரோப்(1834), பிராக்ஸினோ ஸ்கோப் (1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.

முதல் இயக்கத்திரைப்படம் தொகு

 
பிராக்ஸினோ ஸ்கோபி மூலம் திரையிடப்படும் காட்சி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார். இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்படச் சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார். 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும். தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.

விருதுகள் தொகு

ஊடகவியல் துறையில் உள்ள மற்ற பிரிவிகளுக்கு வழங்கப்படுவதைப் போல இந்தத் துறைக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இயங்குபடத்திற்கான விருதுகளை கலை மற்றும் இயங்குபட நிறுவனமானது 1932 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இதன் முதல் விருது சிறிய பூக்கள் மற்றும் மரங்கள்(short Flowers and Trees) என்பதனை தயாரித்ததற்காக வால்ட் டிஸ்னிக்கு வழங்கப்பட்டது.

இதே போன்றே மற்ற நாடுகளிலும் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.

 • ஆப்பிரிக்கா திரைப்பட அகாதமியானது 2008 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 • பிஏஎஃப்டிஏ நிறுவனம் 2006 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 • செஸார் சிறந்த இயங்குபட விருது ,
 • 1981 ஆம் ஆண்டிலிருந்து கோல்டன் ரோஸ்டர் சிறந்த இயங்குபடத்திற்கான விருது வழங்கி வருகிறது.
 • கோயா சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
 • யப்பான் அகாதமியானது 2007 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 • தேசிய சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
 • ஆசியா சிறந்த இயங்குபடத்திற்கான விருது 2006 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
 • ஐரோப்பா அளவில் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை ஐரோப்பிய திரப்பட விருது விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.

அன்னீ விருதானது இயங்குபட துறையில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக்கூடிய ஒரு விருது ஆகும். 1990 களில் இந்த விருதினை பெரும்பாலும் வால்ட் டிஸ்னி, ட்ரீம் ஒர்க்ஸ், நியூயர் ஸ்டுடியோஸ் ஆகியவை தான் வென்றன.

 • அன்னீ விருது - சிறந்த இயங்குபட திரைப்படம்
 • அன்னீ விருது- சிறந்த இயங்குபட குறும்படம்
 • அன்னீ விருது - சிறந்த தொலைகாட்சி இயங்குபடம். போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

 • இயக்கமூட்டிய கேலிச் சித்திரம்
 • இயக்கமூட்டலின் வரலாறு

மேற்கோள்கள் தொகு

 1. Ronan, Colin A; Joseph Needham (1985). The Shorter Science and Civilisation in China: Volume 2. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-31536-4. 
 2. http://www.youtube.com/watch?v=JgALlSPlZC8
 3. McLaughlin, Dan. "A RATHER INCOMPLETE BUT STILL FASCINATING". Film Tv (UCLA) இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091119055944/http://animation.filmtv.ucla.edu/NewSite/WebPages/Histories.html. பார்த்த நாள்: 12 February 2013. 

மேலும் படிக்க தொகு

 • Anderson, Joseph and Barbara, "The Myth of Persistence of Vision Revisited", Journal of Film and Video பரணிடப்பட்டது 2009-11-24 at the வந்தவழி இயந்திரம், Vol. 45, No. 1 (Spring 1993): 3-12
 • Culhane, Shamus, Animation Script to Screen
 • Laybourne, Kit, The Animation Book
 • Ledoux, Trish, Ranney, Doug, & Patten, Fred (Ed.), Complete Anime Guide: Japanese Animation Film Directory and Resource Guide, Tiger Mountain Press 1997
 • Lowe, Richard & Schnotz, Wolfgang (Eds) Learning with Animation. Research implications for design Cambridge University Press, 2008
 • Masson, Terrence, CG101: A Computer Graphics Industry Reference Unique and personal histories of early computer animation production, plus a comprehensive foundation of the industry for all reading levels. ISBN 978-0-9778710-0-1
 • Serenko, Alexander, The development of an instrument to measure the degree of animation predisposition of agent users, Computers in Human Behavior Vol. 23, No. 1 (2007): 478-495.
 • Thomas, Frank and Johnston, Ollie, Disney Animation: The Illusion of Life, Abbeville 1981
 • Walters, Faber and Helen (Ed.), Animation Unlimited: Innovative Short Films Since 1940, HarperCollins Publishers, 2004
 • Williams, Richard, The Animator's Survival Kit ISBN 978-0-571-20228-7
 • Bob Godfrey and Anna Jackson, 'The Do-It-Yourself Film Animation Book' BBC Publications 1974 ISBN 978-0-563-10829-0 Now out of print but available s/hand through a range of sources such as Amazon Uk.
 • Lawson, Tim and Alisa Persons. The Magic Behind the Voices: A Who's Who of Cartoon Voice Actors. University Press of Mississippi. 2004. (A history of cartoon voice-overs and biographies and photographs of many prominent animation voice actors.)
 • Ball, R., Beck, J., DeMott R., Deneroff, H., Gerstein, D., Gladstone, F., Knott, T., Leal, A., Maestri, G., Mallory, M., Mayerson, M., McCracken, H., McGuire, D., Nagel, J., Pattern, F., Pointer, R., Webb, P., Robinson, C., Ryan, W., Scott, K., Snyder, A. & Webb, G. (2004) Animation Art: From Pencil to Pixel, the History of Cartoon, Anime & CGI. Fulhamm London.: Flame Tree Publishing. ISBN 978-1-84451-140-2
 • Crafton, Donald (1982). Before Mickey. Cambridge, Massachusetts.: The MIT Press. ISBN 978-0-262-03083-0
 • Solomon, Charles (1989). Enchanted Drawings: The History of Animation. New York.: Random House, Inc. ISBN 978-0-394-54684-1

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்குபடம்&oldid=3761935" இருந்து மீள்விக்கப்பட்டது