மருத்துவ நாடகம்

மருத்துவ நாடகம் (Medical drama) எனப்படுவது தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் வகைகளில் ஒன்றாகும்.[1] இது ஒரு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்ப்டுகின்றது. ஒரு பொதுவான மருத்துவ நாடகத்தில் இரண்டு வைத்தியர்கள் காதலிக்கும் ஒரு கதைக்களம் இருக்கலாம். அல்லது மருத்துவத் துறையில் மேற்கொள்ளும் சவால்கள் கதைக்களமாகவும் இருக்கலாம்.

தற்போது உலகிலேயே மிக நீண்ட காலமாக இயங்கும் மருத்துவ நாடகம் பிரித்தானிய நாட்டை சேர்த்த கேஷுவல்டி என்ற தொடர் ஆகும். இது 1986 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது, மேலும் நீண்ட காலமாக இயங்கும் மருத்துவ தொடர் ஜெனரல் ஹாஸ்பிடல் என்ற தொடர் ஆகும். இது 1963 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது.[2] 1951 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட சிட்டி ஹாஸ்பிடல் என்ற தொடர் முதல் மருத்துவ நாடகமாகும்.

தமிழ் தொலைக்காட்சித் துறையில் சாந்தி நிலையம்,[3] உயிர்மெய்,[4] வல்லமை தாரையோ,[5] ரன் போன்ற சில தொடர்கள் ஒளிபரப்பானது. எமேர்ஜென்சி கபுள், குட் டாக்டர், டி-டே போன்ற பல கொரியன் நாடகங்களும் இதற்குள் அடங்கும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_நாடகம்&oldid=2981801" இருந்து மீள்விக்கப்பட்டது