நடைமுறை நாடகம்

நடைமுறை நாடகம் (Procedural drama) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு வகையாகும். இது குற்றங்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன அல்லது சட்ட அமலாக்க நிறுவனம், சட்டமன்ற அமைப்பு அல்லது நீதிமன்றத்தின் வேறு சில அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சில நாடகங்களில் உயர் தொழில்நுட்பம் அல்லது அதிநவீன கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இந்த கதையில் முக்கிய கதாபாத்திரங்கள் குற்றவாளிகளை பிடிப்பதற்காக எவ்வாறு சிக்கலைச் சந்திக்கின்றன என்பதை விளக்குகின்றது. கதைகள் வழக்கமாக ஒரு அத்தியாய வடிவமைப்பைக் கொண்டுள்ளன, இது பார்வையாளருக்கு முந்தைய அத்தியாயங்களைக் காணத் தேவையில்லாதவாறு ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு தொடர்பு இல்லாதவாறு தயாரிக்கப்படுகின்றது. அத்தியாயங்கள் பொதுவாக ஒரு தன்னிறைவைக் கொண்டிருக்கின்றன, அவை தனித்தனியாகவும் குறிப்பிடப்படுகின்றன.[1] நடைமுறை நாடக வடிவம் உலகம் முழுவதும் பிரபலமானது.[2] லா & ஆர்டர், காமம் லா, டாகார்ட் போன்றவை நடைமுறை நாடக வகைக்குள் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைமுறை_நாடகம்&oldid=3315991" இலிருந்து மீள்விக்கப்பட்டது