அத்தியாயம்

அத்தியாயம் (Episode) என்பது வானொலி, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்றவற்றில் இடம் பெறும் ஒரு பெரிய நாடகத் தொடர் கதை அளவு ஆகும். இதை தமிழில் கிளைக்கதை என்றும் அழைக்கப்படும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எல்லாம் அத்தியாயங்கள் அடிப்படையில் ஒளிபரப்படுகிறது. இந்த சொல் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புத்தகங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

பெரும்பாலன தமிழ்த் தொடர்கள் 500 மேற்பட்ட அத்தியாயத்திற்கு மேலாக ஒளிபரப்படுகின்றது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி[1][2] என்ற தொடர் 2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 1961 அத்தியாங்களாக ஒளிபரப்பானது. இந்த தொடர் தான் அதிக அளவு அத்தியாங்களுடன் ஒளிபரபபான முதல் தமிழ்த் தொடர் ஆகும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டுத் தமிழ்த் தொடர்கள் 20 முதல் 60 வரையான அத்தியாங்களில் ஒளிபரப்பாகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தியாயம்&oldid=3540923" இருந்து மீள்விக்கப்பட்டது