தொலைக்காட்சி நகைச்சுவை

தொலைக்காட்சி நகைச்சுவை (Television comedy) என்பது நகைச்சுவையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வகை மற்றும் நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதி ஆகும். 1930 ஆம் ஆண்டு ஆரம்ப காலத்தில் பிபிசி என்ற தொலைக்காட்சியில் ஸ்டார்லைட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இது ஒரு விருந்தினர் நிகழ்ச்சி, இதில் பெரும்பாலும் பாடகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்கள் கலந்துகொண்டனர்.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தொலைக்காட்சியில் திரைப்படங்களில் வெளியான நகைசுவை நிகழ்ச்சிகளை தொகுத்து காமெடி டைம், நகைசுவை நேரம், சிரி சிரி போன்ற பெயர்களில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது.[1] 2009 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் தமிழ்[2] மொழியில் ஆதித்யா தொலைக்காட்சி[3] மற்றும் சிரிப்பொலி[4] போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் நகைச்சுவைக்காக மட்டும் இயங்கி வருகின்றது.

நகைச்சுவை நாடகம்

தொகு

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைலாசம் பாலசந்தர் இயக்கிய ரமணி விஸ் ரமணி 1-2 , கிரேசி மோகன், மனோரமா போன்ற பலர் நடித்த ஆச்சி இன்டெர்னசனல், ராமர் வீடு, லொள்ளு சபா,[5] போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பாகி வெற்றியும் கண்டது.

மேடைச் சிரிப்புரை

தொகு

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு?,[6] சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... போன்ற மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜி, நிஷா, தீனா போன்ற பல திறமையான நகைச்சுவையாளர்களை இந்த நிகழ்ச்சி மூலம் தான் உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு நகைச்சுவை நிகழ்ச்சி

தொகு

இந்த நிகழ்ச்சியில் 2-3 குழுவாக பங்கு கொண்டு நகைசுவையான போட்டிகளில் பங்கு பெறுவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். உதாரணம்: அது இது எது.

மேற்கோள்கள்

தொகு
  1. "நான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி". tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/television/sun-tv-anchor-archana-mohan-interview-049144.html. 
  2. "BARC week 5: Regional space witnesses new entrant 'Adithya TV' in Tamil market". Indian Television Dot Com (in ஆங்கிலம்). 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-05-02.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  4. "Sirippoli Comedy" (in en-us). Tubetamil.com இம் மூலத்தில் இருந்து 2017-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170822095606/http://www.tubetamil.com/tamil-comedy-show/sirippoli-comedy.html. 
  5. "Lollu Sabha on Vijay TV lambasted hit films". timesofindia.indiatimes.com.
  6. "Comedy show Kalakka Povadhu Yaaru Season 9 to premiere on February 9". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Feb 6, 2020.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைக்காட்சி_நகைச்சுவை&oldid=3559672" இலிருந்து மீள்விக்கப்பட்டது