அது இது எது

அது இது எது என்பது விஜய் தொலைக்காட்சியில் 2009 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான சிவகார்த்திகேயன் தொகுத்துவழங்கினார், அதன் பிறகு தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் என்பவர் தொகுத்து வழங்கினார்.[1][2]

அது இது எது
அது இது எது.jpg
வகைநகைச்சுவை
வழங்கல்மா கா பா ஆனந்த்
சிவகார்த்திகேயன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 சூன் 2009 (2009-06-06) –
24 பெப்ரவரி 2019 (2019-02-24)

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவமானது ஜூன் 6, 2009 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இரண்டாம் பருவமானது ஜூலை 29, 2017 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கும் ஒளிபரப்பானது. அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது.[3]

பருவம் 1தொகு

முதல் பருவத்தில் குரூப்பிலை டூப்பு, சிரிச்ச போச்சு மற்றும் மாத்தியோசி போன்ற மூன்று சுற்றுக்கள் உண்டு. 3 பிரபலங்கள் கலந்துகொள்ளவர்கள், முதலில் அவர்களுக்கு 1000 மதிப்பெண் கொடுக்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களின் மதிப்பெண் கணக்கிடப்படும் இறுதியில் யாரிடம் அதிக மதிப்பெண் இருக்கிறன்றது அவரே வெற்றியாளர் ஆவார்.

இந்த பருவத்தில் சிரிச்ச போச்சு சுற்றில் பங்குபெற்ற நகைச்சுவை நடிகர்கள் ரோபோ சங்கர், ராமர் போன்ற சிலர் தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளார்கள். இந்த பருவத்தை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்படத்துறையில் எல்லோராலும் அறியப்படும் நடிகராக உள்ளார்.[4]

பருவம் 2தொகு

இரண்டாம் பருவத்தில் சிங் இன் த ரெயின், சிரிச்ச போச்சு, 5 என்றுதலுக்குள்ள போன்ற சுற்றுக்கள் உண்டு, நான்கு பெயர் இரண்டு அணியாக பங்கு கொள்வார்கள்.

பிரச்சனைகள்தொகு

இந்த நிகழ்ச்சியில் சிரிச்ச போச்சு என்ற சுற்றில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை அவமதிக்கும் விதமாக பேசப்பட்டது என்று வழக்க போடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை கிண்டல் மற்றும் அவமானம் செய்யப்பட்டது. அவர் கூறிய வசனங்களான என்னமா இப்படி பன்றிங்கலேம்மா, போலீசை கூப்புடுவான் போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானது. இந்த வசனங்களை வைத்து பாடல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் வசனங்களாக பயன்படுத்தினார்கள்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "TV host Ma Ka Pa Anand leaves fans stunned with his new avatar" (ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. Jan 7, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "6 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடும் அது இது எது". cinema.dinamalar.com. 23 ஜூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Adhu Idhu Edhu comedy game show gets a new time slot" (ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. Apr 4, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sivakarthikeyan's Successful Journey In Tamil Cinema!" (ஆங்கிலம்). timesofindia.indiatimes.com.
  5. "டிவியில் போலீஸை கூப்பிட்ட நடிகருக்கு சினிமாவில் நடிக்க ஆசை". tamil.filmibeat.com. November 10, 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அது_இது_எது&oldid=3597937" இருந்து மீள்விக்கப்பட்டது