மா கா பா ஆனந்த்

தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்

மா கா பா ஆனந்த் (Ma Ka Pa Anand) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் கோவை சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.

மா கா பா ஆனந்த்
பிறப்புபெப்ரவரி 26, 1986 (1986-02-26) (அகவை 38)
புதுச்சேரி, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிவானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014—நடப்பு
வாழ்க்கைத்
துணை
சுசானி ஜார்ஜ்

நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2014 வானவராயன் வல்லவராயன் வல்லவராயன்
2016 நவரச திலகம் மூர்த்தி
2016 கடலை மாணிக்கம்
2016 அட்டி பவா
2017 மீசைய முருக்கு வானொலி அறிவிப்பாளர்
2017 பஞ்சுமிட்டாய் படப்பிடிப்பில்
2017 மாணிக் படப்பிடிப்பில்

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா_கா_பா_ஆனந்த்&oldid=3338792" இலிருந்து மீள்விக்கப்பட்டது