ஏர்டெல் சூப்பர் சிங்கர்

(சூப்பர் சிங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூப்பர் சிங்கர்- தமிழுலகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் என்பது ஏப்ரல் 28, 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும். இது பாட்டுப் போட்டியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியாகும். முதல் ஐந்து பருவங்களையும் இந்நிகழ்ச்சிக்கு எயார்டல் தொலைபேசி நிறுவனம் ஆதரவு செய்தது.

சூப்பர் சிங்கர்
வகைஉண்மைநிலை
பாட்டு போட்டி
நிகழ்ச்சி
வழங்கல்சின்மயி (2006-2008)
மாலினி (2009)
யுகேந்திரன் (2009)
சிவகார்த்திகேயன் & திவ்யா (2010-2011)
மா கா பா ஆனந்த் (2011-)
பாவனா (2013-2018)
பிரியங்கா (2015-)
நீதிபதிகள்மனோ, அனுராதா ஸ்ரீராம் மற்றும் சித்ரா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்8
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 60–70 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 28, 2006 (2006-04-28) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி 8 பருவங்களாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெறும் நபர்களுக்கு திரைத்துறையில் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மேலும் பணங்களும், தங்கங்களும், பெறுமதியான வீடுகளும் பரிசாகக் கிடைக்கின்றன. இதன் வழித்தொடராக சூப்பர் சிங்கர் ஜூனியர் (2007-2020) மற்றும் சூப்பர் சிங்கர் தி20 (2012-2015) போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது.

வெற்றியாளர்கள்

தொகு
இறுதிப் போட்டியாளர்கள்
பருவம் 1 (2006)
நிகில் மேத்யூ வெற்றியாளர்
அனிதா கார்த்திகேயன் இரண்டாவது இடம் & பார்வையாளர்களின் தெரிவு
சௌமியா மகாதேவன் ஜூரி யின் தெரிவு
பருவம் 2 (2008)
அஜீஸ் வெற்றியாளர்
இரவி இரண்டாவது இடம்
இரேனு மூன்றாவது இடம்
பிரசன்னா இறுதியில் வெளியேற்றப்பட்டவர்
ரஞ்சனி இறுதியில் வெளியேற்றப்பட்டவர்
பருவம் 3 (2010-2011)
சாய்சரண் வெற்றியாளர் & பார்வையாளர்களின் தெரிவு
சந்தோஷ் ஹரிஹரன் இரண்டாவது இடம்
சத்ய பிரகாஷ் மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு
பூஜா வைத்தியநாத் இறுதியில் வெளியேற்றப்பட்டவர்
பருவம் 4 (2013-2014)
திவாகர் வெற்றியாளர் & பார்வையாளர்களின் தெரிவு
சயித் சுபகான் இரண்டாவது இடம் & நடுவர்களின் தெரிவு
சரத் சந்தோஷ் மூன்றாவது இடம்
சோனியா நான்காவது இடம்
பார்வதி இறுதியில் வெளியேற்றப்பட்டவர்
பருவம் 5 (2015-2016)
ஆனந்த் அரவிந்தக்சன் வெற்றியாளர்
பரீதா இரண்டாவது இடம்
ராஜகணபதி மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு
லக்ஷ்மி பிரதீப் நான்காவது இடம்
சியாத் ஐந்தாவது இடம்
பருவம் 6 (2018)
செந்தில் கணேஷ் வெற்றியாளர்
ரக்ஷிதா இரண்டாவது இடம்
மாளவிகா மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு
சக்தி நான்காவது இடம்
ஸ்ரீகாந்த் ஐந்தாவது இடம்
அனிருத் ஆறாவது இடம்
பருவம் 7 (2019)
முருகன் வெற்றியாளர்
விக்ரம் இரண்டாவது இடம்
புன்யா மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு
சாம் விஷால் நான்காவது இடம்
கெளதம் ஐந்தாவது இடம்

பருவங்கள்

தொகு

பருவம் 1

தொகு

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 28 ஏப்ரல் முதல் 16 செப்டம்பர் 2006 வரை வெள்ளி மற்றும் சனி இரவு 8 மணிக்கு பின்னர் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள கோவை, சென்னை மற்றும் மதுரை நகரங்களில் நடத்தப்பட்டு, பாடகர்கள் எஸ். பி. சைலஜா, ஜென்சி அந்தோனி, மலேசியா வாசுதேவன், சீர்காழி கோ. சிவசிதம்பரம், மஹதி மற்றும் இசை அமைப்பாளர் டி. இமான் ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டனர்.[1]

இந்த பருவத்தின் தொகுப்பாளியாக பின்னணி பாடகி சின்மயி என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இருந்தனர். ஒவ்வொரு போட்டியின் போது போட்டியாளர்கள் அவர்களின் பாடும் திறனை மையமாக வைத்து வெளியேற்றப்பட்டனர். இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்கள் குரல் நிபுணர் ஆனந்த் வைத்தியநாதனிடமிருந்து சிறப்புப் பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொண்டனர்.

பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் என்பவரால் இந்த நிகழ்ச்சியின் முதல் பருவத்தின் வெற்றியாளராக நிகில் மேத்யூ என்பவர் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பிமா என்ற படத்தில் "என்னதுயிரே" பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜிற்காக பாடிய பிறகு, அவர் ஒரு பின்னணி பாடகராக முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.[2][3] இரண்டாவது வெற்றியாளரான அனிதா கார்த்திகேயன் என்பவரை இசை இயக்குனர் டி. இமானால் தமிழ் திரைப்படமான மருதமலையில் ஒரு பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.[4]

பருவம் 2

தொகு

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 7 ஜூலை 2008 ஆம் ஆண்டில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள கோவை, சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் நடத்தப்பட்டு, பாடகர்கள் எஸ். பி. சைலஜா, சிறிலேகா பார்த்தசாரதி, சுனிதா சாரதி, தீபன் சக்ரவர்த்தி, மஹதி மற்றும் மாதங்கி ஜெகதீஷ் ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பருவத்திலும் தொகுப்பாளியாக பின்னணி பாடகி சின்மயி என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 21 சனவரி 2009 முதல் இவருக்கு பதிலாக யுகேந்திரம் மற்றும் அவரது மனைவி மாலினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

முதல் பருவத்தில் நடுவர்களாக இருந்த ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் புதிதாக சுஜாதா மோகன் என்பவரும் நிரந்தர நீதிபதிகளாக இருந்தனர். இவர்களுடன் குரல் நிபுணர் ஆனந்த் வைத்தியநாதனும் கலந்து கொண்டார். இந்த பருவத்தில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் பெற்ற அஜீஸ் என்பவர் 2010 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் கோவா என்ற படத்தில் 'இதுவரை' என்ற பாடலை பாடியுள்ளார்.

பருவம் 3

தொகு

இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் 12 ஜூலை 2010 முதல் 23 செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக 16 வயதிற்கு மேற்றப்பட்டவர்களை எஸ். பி. சைலஜா, நித்யஸ்ரீ மகாதேவன், உண்ணிமேனன், சௌமியா, ஹரிஷ் ராகவேந்திரா, பாப் ஷாலினி, மஹதி மற்றும் மால்குடி சுபா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த பருவத்திலும் பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சிவகார்த்திகேயன் மற்றும் திவ்யா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த பருவத்தின் வெற்றியாளர் 'சாய்சரண்' ஆவார். இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றதற்காக 37 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசாக வெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[5]

பருவம் 4

தொகு

இந்த நிகழ்ச்சியின் நான்காம் பருவம் 4 பிப்ரவரி 2013 முதல் 8 சனவரி 2014 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் எஸ். பி. சைலஜா, நித்யஸ்ரீ மகாதேவன், உண்ணிமேனன், சௌமியா, தேவன் ஏகாம்பரம், பாப் ஷாலினி, ஆனந்த் வைத்தியநாதன், மஹதி மற்றும் மால்குடி சுபா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டது. இந்த பருவத்திலும் பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மா கா பா ஆனந்த் மற்றும் பாவனா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த பருவத்தின் வெற்றியாளர் 'திவாகர்' ஆவார்.[6][7][8]

பருவம் 5

தொகு

பருவம் 6

தொகு

இந்த நிகழ்ச்சியின் ஆறாம் பருவம் 21 சனவரி முதல் 15 ஜூலை 2018 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. [9][10] இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன், பென்னி தயாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கினார்கள். இந்த பருவத்தின் வெற்றியாளராக கிராமியப்பாடகர் செந்தில் கணேஷ் என்பவர் தெரிவு செய்யப்பட்டார்.[11][12][13][14]

பருவம் 7

தொகு

இந்த நிகழ்ச்சியின் ஏழாம் பருவம் 27 ஏப்ரல் முதல் 10 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.[15][16] [17] முதல் ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சித் தொடருக்கு விளம்பரதாரராக முன்வந்தனர்.[18] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேசுபாண்டே மீண்டும் தொகுத்து வழங்கினர். பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.[19] இசை இயக்குனர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த பருவத்தின் நிகழ்ச்சியின் விளம்பரத்தூதராக இருந்தார். வெற்றியாளருக்கு திரைப்படத்தில் அனிருத்தின்அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என்பது சிறப்புக்குரியதாய் இருந்தது.

இந்த பருவத்தின் வெற்றியாளராக முருகன் என்ற மூக்குத்தி முருகன் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அருண் எக்செல்லோ நிறுவனத்திடமிருந்து பெற்றார்.[20]

பருவம் 8

தொகு

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது பருவம் 24 ஜனவரி 2021 அன்று ஒன்பது மணி நேர நிகழ்ச்சியைத் தொடங்குகிறது. [16] அனைத்து அத்தியாயங்களும் OTT பிளாட்ஃபார்ம்-ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.

நீதிபதிகள் குழு அடிக்கடி அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், பென்னி தயாள், எஸ்.பி.சரண், கல்பனா ராகவேந்தர் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோருடன் மாற்றப்பட்டது[21]

மேற்கோள்கள்

தொகு
 1. "Winning Voices - The Hindu". The Hindu. 2006-07-15. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/winning-voices/article3196282.ece. 
 2. U Tejonmayam (2009-02-10). "Getting the big break – The New Indian Express". New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/article35023.ece?service=print. 
 3. "Thank you for the music - The Hindu". The Hindu. 1 November 2012. http://www.thehindu.com/features/friday-review/music/thank-you-for-the-music/article4054916.ece. 
 4. Sanjeevi, Kaviya (21 December 2014). "Always on song". The New Indian Express. https://www.newindianexpress.com/education/edex/2014/dec/21/Always-on-song-696804.html. 
 5. palPalani (2011-09-23). "Airtel Super Singer 3 finalists". Southdreamz.com. Archived from the original on 2 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
 6. Udhav Naig (3 February 2014). "The victory song - The Hindu". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/the-victory-song/article5648955.ece. 
 7. "Dhivagar is Super Singer 4". Times of India. 2 February 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/tv/Dhivagar-is-Super-Singer-4/articleshow/29770628.cms. 
 8. "Winning notes". The Hindu. 23 January 2014. http://www.thehindu.com/features/friday-review/music/winning-notes/article5609392.ece. 
 9. "Contestants battle it out at Super Singer Season 6" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/contestants-battle-it-out-at-super-singer-season-6/articleshow/62788005.cms. 
 10. "தமிழ்நாட்டின் செல்லக்குரலைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் யார்?" (in ta). www.dinamani.com. http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/12/supersinger-2843626.html. 
 11. "Super Singer 6 winner: Senthil Ganesh bags the trophy". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/super-singer-6-winner-senthil-ganesh-bags-the-trophy/articleshow/65000229.cms. 
 12. "சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்– News18 Tamil". News18 Tamil. பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
 13. "Senthil Ganesh declared winner of Super Singer season 6, gets offer to sing for AR Rahman composition- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/senthil-ganesh-declared-winner-of-super-singer-season-6-gets-offer-to-sing-for-ar-rahman-composition-4747921.html. 
 14. "Super Singer season 6 : Winner Senthil Ganesh performance highlights - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/super-singer-season-6-winner-senthil-ganesh-performance-highlights/articleshow/65005967.cms. 
 15. "Music reality show Super Singer Season 7 to premiere soon - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
 16. "Star Vijay to launch Super Singer Season 7 on 27th April; ropes in music director Anirudh Ravichander". MediaNews4U (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-09-11.
 17. "Super Singer Season 7: Top 15 contestants to perform this weekend - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
 18. "Anirudh on board for Super Singer 7 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
 19. "Super Singer 7: Anirudh joins judge panel of Vijay TV's popular reality show". International Business Times, India Edition (in english). Archived from the original on 24 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 20. "'Mookuthi' Murugan wins Vijay TV's 'Super Singer' 7, to sing for Anirudh Ravichander". The News Minute (in ஆங்கிலம்). 2019-11-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
 21. Winters, Bryce J. (2021-01-17). "Super Singer 8 to premiere on 24th January 2021 with a 9-hour grand launch, Contestants, Kallakurichi Judges Revealed". TheNewsCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்டெல்_சூப்பர்_சிங்கர்&oldid=3944855" இலிருந்து மீள்விக்கப்பட்டது