தீபன் சக்ரவர்த்தி
தீபன் சக்ரவர்த்தி (Deepan Chakravarthy) ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகரான இசைத் தென்றல் திருச்சி லோகநாதனின் மகனாவார்.
தீபன் சக்ரவர்த்தி | |
---|---|
இயற்பெயர் | தீபன் சக்ரவர்த்தி |
பிறப்பிடம் | ![]() |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல் |
தொழில்(கள்) | பாடகர், பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1974 - தற்போது வரை |
இசைப்பயணம்
தொகுதீபன் சக்ரவர்த்தி தன் இசைப்பயணத்தை 1974 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடிப் புகழ்பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடுவதற்காக இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவினால் அறிமுகம் செய்யப்பட்டார். அதே ஆண்டு பொதிகைத் தொலைக்காட்சியிலும் தஞ்சை வாணன் அறிமுகம் செய்தார். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் சென்று பாடி வந்தார்.
நடிகராக
தொகுதீபன் சக்கரவர்த்தி ஜி. என். ரங்கராஜன் இயக்கிய ராணித்தேனீ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஈரோடு முருகேஷ் இயக்கிய மாறுபட்ட கோணங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரமும் ஈரமும் என்னும் தமிழ்ப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்[1].
தூர்தர்சனில் "எத்தனை மனிதர்கள்", சன் தொலைக்காட்சியின் "மேகலா", இராஜ் தொலைக்காட்சியின் "ஆறு மனமே ஆறு" போன்ற பல தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் சன் தொலைக்காட்சியின் "மகராசி" தொடரிலும் நடித்தார்.
திரைப்படவியல்
தொகு- நடித்த திரைப்படங்கள்
- ராணித்தேனீ (1982)
- வீரமும் ஈரமும் (2007)
- அராசங்கம் (2008)
- வாமனன் (2009)
- பின்னணிப் பாடகராக
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்கள் |
---|---|---|---|---|
1980 | நிழல்கள் | பூங்கதவே தாழ்திறவாய் | இளையராஜா | உமா ரமணன் |
1981 | இன்று போய் நாளை வா | மேரே பியாரி | இளையராஜா | |
1981 | எனக்காக காத்திரு | ஓ நெஞ்சமே | இளையராஜா | எஸ். ஜானகி |
பனிமழை | எஸ். பி. சைலஜா | |||
1981 | நெஞ்சில் ஒரு முள்[2] | இராகம் புது இராகம் | ஜி. கே. வெங்கடேசு | எஸ். பி. சைலஜா |
நேராகவே கேட்கிறேன் | வாணி ஜெயராம் | |||
1981 | பன்னீர் புஷ்பங்கள் | வெங்காயச் சாம்பாரும் | இளையராஜா | எஸ். என். சுரேந்தர், டி. கே. எஸ். கலைவாணன் |
1981 | வா இந்தப் பக்கம்[3] | ஆனந்த தாகம் உன் கூந்தல் | சியாம் | எஸ். ஜானகி |
1982 | எத்தனை கோணம் எத்தனை பார்வை | விதைத்த விதை | இளையராஜா | பி. எஸ். சசிரேகா |
1982 | ஏழாவது மனிதன் | ஆடுவோமே பள்ளு பாடுவோமே | எல். வைத்தியநாதன் | மாதங்கி, பி. சுசீலா, சண்டில்யன் |
1982 | காதல் ஓவியம் | பூஜைக்காக வாழும் | இளையராஜா | |
நதியில் ஆடும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி | |||
1982 | கனவுகள் கற்பனைகள் | பிள்ளைப் பிராயத்திலே | கங்கை அமரன் | ரூபா தேவி |
கண்வழி நெஞ்சில் | ||||
1982 | கோழி கூவுது | அண்ணே அண்ணே | இளையராஜா | சாமுவேல் குரூப், ஜி. வித்தியாத்தர் |
1982 | மஞ்சள் நிலா | பஸ்ஸே பஸ்ஸில் கலரே | இளையராஜா | சீர்காழி கோ. சிவசிதம்பரம், சாய்பாபா |
1982 | நடமாடும் சிலைகள்[4] | முகிலுக்குள்ளே ஒரு நிலா | சங்கர் கணேஷ் | |
1982 | நம்பினால் நம்புங்கள்[5] | டிஸ்கோ சங்கீதம் தான் | கங்கை அமரன் | உமா ரமணன் |
மல்லி கோத்தமல்லி | மலேசியா வாசுதேவன், உமா ரமணன், எஸ். பி. சைலஜா | |||
வேர் ஆர் யூ | உமா ரமணன் | |||
1982 | நிழல் தேடும் நெஞ்சங்கள் | இது கனவுகள் | இளையராஜா | எஸ். ஜானகி |
1982 | ஓம் சக்தி | அபிராம வள்ளியின் | சங்கர் கணேஷ் | வாணி ஜெயராம் |
1982 | பக்கத்து வீட்டு ரோஜா | இந்த கண்கள் ரெண்டும் | சங்கர் கணேஷ் | வாணி ஜெயராம் |
1982 | ராணித்தேனீ | இராமனுக்கே சீதை | இளையராஜா | எஸ். ஜானகி |
1982 | ஸ்பரிசம்[6] | ஆயிரம் மலர்கள் பனியில் | இரவி | எஸ். பி. சைலஜா |
Bayilaa Paadungadaa | எஸ். பி. சைலஜா | |||
1983 | பகவதிபுரம் ரயில்வே கேட் | காலை நேரக் காற்றே | இளையராஜா | எஸ். பி. சைலஜா |
1983 | தேவி ஸ்ரீ தேவி | தசரதனின் திருமகளை | இளையராஜா | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி |
1983 | மெல்லப் பேசுங்கள் | செவ்வந்தி பூக்களில் செய்த வீடு | இளையராஜா | உமா ரமணன் |
1983 | நீரு பூத்த நெருப்பு | இதழ் ஓரமே | ஸ்டாலின் வரதராஜன் | வாணி ஜெயராம் |
1983 | வளர்த்த கடா | மஞ்சள் குளிச்சிடும் வஞ்சி | சங்கர் கணேஷ் | வாணி ஜெயராம் |
1984 | இங்கேயும் ஒரு கங்கை | ஒரு வில்ல வளச்சு | இளையராஜா | கங்கை அமரன், கிருஷ்ணசந்தர், சாய்பாபா, இரமேஷ் |
1984 | முடிவல்ல ஆரம்பம் | ஆசைனா ஆசை | இளையராஜா | மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் |
1984 | ஓ மானே மானே | ஹேப்பி நியூ இயர் | இளையராஜா | மலேசியா வாசுதேவன், சுந்தரராஜன், எஸ். ஜானகி |
1984 | பிரியமுடன் பிரபு [7] | மான மதுரை மல்லிகை | இளையராஜா | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி |
1984 | திருட்டு இராஜாக்கள் | கட்டபொம்மன் ஊமைத்துரை | சங்கர் கணேஷ் | பி. சுசீலா, எஸ். பி. சைலஜா, சக்தி சண்முகம் |
1984 | வாழ்க்கை | என்னருமை செல்வங்கள் | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா |
1985 | அண்ணி | ஆலமரம் போல எங்கள் குடும்பம் | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் |
1985 | சின்ன வீடு | ஜாக்கிரத ஜாக்கிரத | இளையராஜா | இளையராஜா |
1985 | ஹலோ யார் பேசறது | ஹெலோ ஆசை தீபம் | இளையராஜா | எஸ். ஜானகி |
1985 | கன்னிராசி | சோறுனா சட்டி | இளையராஜா | இளையராஜா, டி. கே. எஸ். கலைவாணன், கிருஷ்ணசந்தர் |
1985 | மீண்டும் பராசக்தி | ராசாத்தி ரோஜா | இளையராஜா | எஸ். ஜானகி |
1985 | படிக்காத பண்ணையார் | கோணாத செங்கரும்பு | இளையராஜா | எஸ். பி. சைலஜா |
சவாரி காரு சவாரி | மலேசியா வாசுதேவன் | |||
1985 | பொருத்தம் | அண்ணா நாமம் வழியே | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் |
1986 | அடுத்த வீடு[8] | கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை | சங்கர் கணேஷ் | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா |
1986 | கண்ணத் தொறக்கணும் சாமி | அந்தி மாலையில் | இளையராஜா, கங்கை அமரன் | எஸ். ஜானகி |
1986 | கைதியின் தீர்ப்பு | பனிமலர் ஆடும் | இராமானுஜம் | வாணி ஜெயராம் |
1986 | கரிமேடு கருவாயன் | உலகம் சுத்துதடா | இளையராஜா | கங்கை அமரன் & மலேசியா வாசுதேவன் |
1986 | நம்ம ஊரு நல்ல ஊரு | வேணாண்டா விட்டுடுங்கடா | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் |
அழகான சின்ன | மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர், செந்தில் | |||
1986 | பாரு பாரு பட்டணம் பாரு | பாவை ஒரு மேடை | இளையராஜா | மலேசியா வாசுதேவன், பி. எஸ். சசிரேகா |
1986 | விடிஞ்சா கல்யாணம் | அடியெடுத்து நடந்து | இளையராஜா | கங்கை அமரன், மலேசியா வாசுதேவன், டி. எஸ். இராகவேந்திரா |
1987 | மனவி ரெடி[9] | வருக வருகவே வருகவே | இளையராஜா | எஸ். இராஜேஸ்வரி[10] |
1987 | வெளிச்சம் | போடு சக்க போடு | மனோஜ் கியான் | எஸ். ஜானகி |
1987 | வேலுண்டு வினையில்லை | காயாத கானகத்தே | ம. சு. விசுவநாதன் | |
1988 | எங்க ஊரு காவல்காரன் | அரும்பாகி மொட்டாகி | இளையராஜா | பி. சுசீலா |
1988 | இரத்த தானம் | சாயங்காலம் நாங்கள் | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் |
1989 | அன்னக்கிளி சொன்ன கதை | ஆத்துக்குள்ளே யம்மா | சந்திரபோஸ் | வனிதா |
1989 | எங்க ஊரு மாப்பிள்ளை | கொடுப்பத கொடுத்துட்டு | இளையராஜா | மனோ, சித்ரா |
1989 | மேளம் கொட்டு தாலி கட்டு | ஒன்னு நூறாச்சு | பிரம்மசிறி கேமதாசா | |
1990 | இணைந்த கைகள் | சின்னபூவே சின்னபூவே | மனோஜ் கியான் | வித்யா |
மலையோரம் குயில் | விந்தியா | |||
1991 | ஈரமான ரோஜாவே | கல்யாணத் தரகரே | இளையராஜா | மலேசியா வாசுதேவன், மனோ, எஸ். என். சுரேந்தர் |
1991 | கோபுர வாசலிலே | தேவதை போலொரு | இளையராஜா | மலேசியா வாசுதேவன், மனோ, எஸ். என். சுரேந்தர் |
1991 | இதயம் | ஏப்ரல் மேயிலே | இளையராஜா | இளையராஜா, எஸ். என். சுரேந்தர் |
1991 | இதய வாசல் | எப்போதும் காதலே | விஜி | |
1992 | ஏர்முனை | கண்ணீரையும் செந்நீரையும் | கங்கை அமரன் | |
1993 | மாமியார் வீடு | தெரியாமல் மாட்டி | இளையராஜா | மனோ, எஸ். என். சுரேந்தர், சுனந்தா |
1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | ஏ பார் அம்பிகா | சிற்பி | மனோ, சுவர்ணலதா |
1994 | அமைதிப்படை | வெற்றி வருது | இளையராஜா | மனோ, எஸ். என். சுரேந்தர் |
1994 | கருத்தம்மா | ஆராரோ ஆரிரரோ | ஏ. ஆர். ரகுமான் | தேனி குஞ்சரமாள், டி. கே. கலா |
- இசையமைப்பாளராக
- கொஞ்சம் பேசினால் என்ன (2024)
- வீராயி மக்கள் (2024)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Plot without pep". The Hindu. 12 October 2007. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
- ↑ "Nenjil Oru Mul". Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
- ↑ Vaa Intha Pakkam
- ↑ Nadamaadum Silaigal
- ↑ Nambinal Nambungal
- ↑ Sparisam
- ↑ Priyamudan Prabhu
- ↑ Adutha Veedu
- ↑ Manaivi Ready
- ↑ S. Rajeswari