மஹதி (பாடகி)

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

மஹதி (Mahathi, பிறப்பு: 10 பெப்ரவரி 1985) ஒரு கர்நாடக இசைக்கலைஞராவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடும் பின்னணி பாடகியாவார்.

மஹதி
மஹதி டிசம்பர் மாத இசை நிகழ்வில், சென்னை 2012
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மஹதி
பிறப்புபெப்ரவரி 10, 1985 (1985-02-10) (அகவை 40)
இசை வடிவங்கள்கர்நாடக இசை, திரைப்பட இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

குடும்பம்

தொகு

மஹதி இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை திருவையாறு பி. சேகர் ஒரு பாடகரும், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவின் சீடருமாவார். மஹதியின் தாயார் வசந்தி சேகர், புல்லாங்குழல் இசைக் கலைஞரும், டி. ஆர். மகாலிங்கம், என். இரமணி, கேசி ஆகியோரின் மாபெரும் சீடருமாவார். மஹதி, வயலின் கலைஞர் சங்கீதா கலாநிதி பழமனேரி சுவாமிநாத ஐயரின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[1]

பின்னணிப் பாடகியாக

தொகு

2003 இல் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த சாமி திரைப்படத்தில் பாடகர் ஹரிஹரனுடன் "அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு" என்ற காதல் பாடலைப் பாடினார். இதுவே இவரது முதற் பாடலாகும். 2008 ஆம் ஆண்டு, "நெஞ்சே நெஞ்சே" திரைப்படத்தில் "நேரா வரட்டுமா" என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹதி_(பாடகி)&oldid=4197659" இலிருந்து மீள்விக்கப்பட்டது