சூப்பர் சிங்கர் 6

சூப்பர் சிங்கர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 21 சனவரி முதல் 15 ஜூலை 2018 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும். இது எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வரிசையில் ஆறாம் பருவம் ஆகும்.

சூப்பர் சிங்கர் (பருவம் 6)
வழங்கியவர்பிரியங்கா
மா கா பா ஆனந்த்
நடுவர்கள்பி. உன்னிகிருஷ்ணன்
அனுராதா ஸ்ரீராம்
சுவேதா மோகன்
பென்னி தயாள்
நாடுஇந்தியா
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு21 சனவரி 2018 2018 (2018 2018-01-21) –
15 சூலை 2018 (2018-07-15)

2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது உலக அளவில் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இணைகிறார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு தனது இசையில், பாடும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது’ என்று அறிவித்தார்.[1][2]

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன், பென்னி தயாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கினார்கள். இந்த பருவத்தின் வெற்றியாளராக கிராமியப்பாடகர் செந்தில் கணேஷ் என்பவர் தெரிவு செய்யப்பட்டார்.[3][4][5][6]

மேற்கோள்கள்தொகு

  1. "Contestants battle it out at Super Singer Season 6" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/contestants-battle-it-out-at-super-singer-season-6/articleshow/62788005.cms. 
  2. "தமிழ்நாட்டின் செல்லக்குரலைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் யார்?" (in ta). www.dinamani.com. http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/12/supersinger-2843626.html. 
  3. "Super Singer 6 winner: Senthil Ganesh bags the trophy". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/super-singer-6-winner-senthil-ganesh-bags-the-trophy/articleshow/65000229.cms. 
  4. "சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்– News18 Tamil". News18 Tamil. 2018-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Senthil Ganesh declared winner of Super Singer season 6, gets offer to sing for AR Rahman composition- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/senthil-ganesh-declared-winner-of-super-singer-season-6-gets-offer-to-sing-for-ar-rahman-composition-4747921.html. 
  6. "Super Singer season 6 : Winner Senthil Ganesh performance highlights - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/super-singer-season-6-winner-senthil-ganesh-performance-highlights/articleshow/65005967.cms. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_சிங்கர்_6&oldid=3222901" இருந்து மீள்விக்கப்பட்டது