பென்னி தயாள்
இந்திய பாடகர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பென்னி தயாள் (மலையாளம்: ബെന്നി ദയാൽ) ஆங்கில மொழி: Benny Dayal பிறப்பு 13 மே 1984) என்பவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல்[1] படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.[2] திரைப்பட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பென்னி தயாளின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார்.
பென்னி தயாள் | |
---|---|
பிறப்பு | 13 மே 1984 (அகவை 40) கொல்லம் |
படித்த இடங்கள் |
|
வாழ்க்கைத் துணை/கள் | Catherine Thangam |
பல்லே லக்கா பல்லே லக்கா, டாக்சி டாக்சி[2], ஓ மணப் பெண்ணே போன்ற இவர் பாடிய பாடல்கள் திரை உலகில் பெயர் பெற்றன. பென்னி தயாள் நடனம் ஆடுவதிலும் விருப்பமும் ஆற்றலும் கொண்டவர். துபாயில் வளர்ந்து பள்ளிக் கல்வியை அங்கு முடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ இந்தியன் எக்ஸ்பிரசில் A Benny for a Song (ஆங்கில மொழியில்)
- ↑ 2.0 2.1 "Scaling heights". Metro Plus (Chennai, India: The Hindu). 11 October 2008 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107174907/http://www.hindu.com/mp/2008/10/11/stories/2008101152270800.htm. பார்த்த நாள்: 6 January 2009.