அஜீஸ் (பாடகர்)

பாடகர்

அஜீஷ் (அஜீஷ் அசோக்) தமிழ் திரை உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.[1][2][3]

அஜீஷ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அஜீஷ் அசோக்
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசை அமைப்பாளர், பாடகர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அஜீஷ்சிறு வயதிலிருந்தே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு பல மேடை கச்சேரிகளில் பாடி அனுபவம் பெற்றவர். இவர் கிருஷ்ணசுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி கற்று இலயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து வந்த போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் மூலமாக 2010-இல் யுவன் சங்கர் ராஜா இசையில் "இதுவரை" என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். இடையில் இவர் தனித்துவத்தை காட்ட 2013-இல் ஒரு இசைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். இது இவ்ருக்கு பெரிய ஊக்குவிப்பை தருவதாக அமைந்தது . பின்னர் 2017-இல் "பாம்புச்சட்டை" என்ற திரைப்படம் மூலம் ஒரு இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். 2022-இல் வெளிவந்த "விலங்கு" என்னும் வலைத் தொடரில் இவர் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

திரைப்பட பட்டியல்

தொகு
இசை அமைப்பாளராக
வெளியீடு தலைப்பு இயக்குநர் வகை
2017 பாம்புச்சட்டை ஆடம் தாசன் திரைப்படம்
திரி அசோக் அம்ரிதராஜ் திரைப்படம்
2021 சர்பத் பிரபாகரன் திரைப்படம்
2022 நாய்சேகர் கிஷோர் ராஜ்குமார் திரைப்படம்
குற்றம் குற்றமே சுசீந்திரன் திரைப்படம்
வீரபாண்டியபுரம் சுசீந்திரன் திரைப்படம்
விலங்கு பிரசாந்த் பாண்டியராஜ் வலை தொடர்
ஃபால் சித்தார்த் ராமசாமி வலை தொடர்
2023 வல்லவனுக்கும் வல்லவன் விஜய் தேசிங்கு திரைப்படம்
தெய்வ மச்சான் மார்ட்டின் திரைப்படம்
நோ என்ட்ரி அழகு கார்த்திக் திரைப்படம்
பின்னணி பாடகராக
வெளியீடு பாடல் திரைப்படம் இசை அமைப்பாளர்
2010 இதுவரை கோவா யுவன் ஷங்கர் ராஜா
2011 தூறல் தேடும் உத்தம புத்திரன் விஜய் ஆண்டனி
2012 இதழின் ஓரம் 3 அனிருத் ரவிச்சந்தர்
நிமிர்ந்து நில் சட்டம் ஒரு இருட்டறை விஜய் ஆண்டனி
2014 கண்களை ஒரு தெகிடி நிவாஸ் பிரசன்னா
நெஞ்சுக்குள்ள நீ வடகறி விவேக் மெர்வின்
2016 ஏதேதோ பெண்ணே மீண்டும் ஒரு காதல் கதை ஜீ வீ பிரகாஷ் குமார்
2017 நீயும் நானும் பாம்புச்சட்டை அஜீஷ்
யாவும் நீதானே திரி அஜீஷ்
2019 பத்திக்கிச்சு பாத்தியா கீ விஷால் சந்திரசேகர்
2021 தீர தீர சர்பத் அஜீஷ்
கவி சொல்ல சர்பத் அஜீஷ்
2022 நீ பிரிந்ததேனோ குற்றம் குற்றமே அஜீஷ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜீஸ்_(பாடகர்)&oldid=4165592" இலிருந்து மீள்விக்கப்பட்டது