நிகில் மேத்யூ
நிகில் மேத்யூ (Nikhil Mathew) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாடகர் ஆவார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2006 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்நேர நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் வெற்றி பெற்றார்.[1] நிகழ்ச்சியின் வெற்றியாளராக, தமிழ்த் திரைப்படமான பீமாவுக்காக சின்மயி, சாதனா சர்கம் மற்றும் சௌம்யா ராவ் ஆகியோருடன் இணைந்து பாடும் வாய்ப்பை இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் வழங்கினார்.[2][3][4] தொடக்கக் கல்வியை கேரளாவில் படித்த இவர் உயர் கல்விக்காக சென்னைக்கு வந்தார். சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார்.
நிகில் மேத்யூ Nikhil Mathew | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | அக்டோபர் 23, 1983 |
பிறப்பிடம் | கோட்டயம், கேரளா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை, இந்திய இசை, உலக இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2006 – இன்று வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நிகில் மேத்யூ குரலில் இருக்கும் அந்த ஒரு மேஜிக்... என்ன செய்கிறார் ரியல் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்?". இந்தியன் எக்சுபிரசு தமிழ். https://tamil.indianexpress.com/lifestyle/vijay-tv-super-singer-nikhil-mathew-nikhil-mathew-wife-super-singer-nikhil-mathew-family-super-singer-hotstar-218678/. பார்த்த நாள்: 26 November 2023.
- ↑ Pradeep, K (18 August 2006). "Scaling a musical peak". தி இந்து. Archived from the original on 14 May 2007. பார்க்கப்பட்ட நாள் 31 January 2010.
- ↑ Frederick, Prince (26 August 2006). "Winning voice". தி இந்து. Archived from the original on 14 May 2007. பார்க்கப்பட்ட நாள் 31 January 2010.
- ↑ Meera, Srinivasan; S. Aishwarya (2 March 2009). "Does Chennai strike the right chord? city pulse". தி இந்து. Archived from the original on 6 March 2009. பார்க்கப்பட்ட நாள் 31 January 2010.