சிவகார்த்திகேயன்

நடிகர், பாடகர், தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan, பிறப்பு: 17 பிப்ரவரி 1985) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார்.

சிவகார்த்திகேயன்
2021 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன்
பிறப்பு17 பெப்ரவரி 1985 (1985-02-17) (அகவை 38)[1]
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர், மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி (2010–முதல்)
பிள்ளைகள்ஆராதனா (2013) (மகள்)
குகன்தாஸ் (மகன்) (2021)

திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3][4]

திரைப்படப் பட்டியல் தொகு

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012 மனம் கொத்திப் பறவை கண்ணன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013 வருத்தபடாத வாலிபர் சங்கம் போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2016 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2016 ரெமோ SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)
2017 வேலைக்காரன் அறிவு
2018 சீமராஜா சீமராஜா, கடம்பவேல் ராஜா
2019 மிஸ்டர். லோக்கல் மனோகர்
2019 ஹீரோ சக்தி
2019 நம்ம வீட்டு பிள்ளை அரும்பொன்
2021 டாக்டர் டாக்டர் வருண்
டான் சக்ரவர்த்தி ஜி.
2023 அயலான் ஆயுஷ் நாராயண்
மாவீரன் சத்யா

பாடிய பாடல்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் டி. இமான்
2014 மான் கராத்தே ராயபுரம் பீட்டர் அனிருத் ரவிச்சந்திரன்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல் அனிருத் ரவிச்சந்திரன்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன் டி. இமான்
2015 மாப்ள சிங்கம் எதுக்கு மச்சான் என். ஆர். ரகுநந்தன்
2018 கனா வாயாடி பெத்த புள்ள டிபி நியான் தாமஸ்
2021 லிப்ட் என்ன மயிலு பிரிட்டோ மைக்கேல்
2023 மாவீரன் வண்ணாரப்பேட்டையில பரத் ஷங்கர்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகார்த்திகேயன்&oldid=3831063" இருந்து மீள்விக்கப்பட்டது