நம்ம வீட்டு பிள்ளை

பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நம்ம வீடு பிள்ளை (Namma Veettu Pillai) 2019இல் தமிழ் மொழியில் வெளியான அதிரடி புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும்.[2][3] இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியிருந்த இப்படத்தை கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரித்திருந்தார்.[4] இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் ஆகியோருடன் சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா, நடராஜன் சுப்பிரமணியம் உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களுக்குப் பிறகு பாண்டிராஜுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான மூன்றாவது கூட்டணியாக இருந்தது.[5] படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவினையும், ரூபன் படத் தொகுபினையும் கையாண்டனர்.[6] இந்த படம் 27 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும், திரையரங்க வசூலிலும் வெற்றி பெற்றாது.மேலும் இது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது.

நம்ம வீட்டு பிள்ளை
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைபாண்டிராஜ்
இசைடி. இமான்
நடிப்புசிவகார்த்திகேயன்
ஐஸ்வர்யா ராஜேஷ்
அனு இம்மானுவேல்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புRuben
கலையகம்சன் படங்கள்
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுசெப்டம்பர் 27, 2019 (2019-09-27)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 crore[1]
மொத்த வருவாய்70 crore[1]

நடிகர்கள் தொகு

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_வீட்டு_பிள்ளை&oldid=3797414" இருந்து மீள்விக்கப்பட்டது