அருந்ததி (நடிகை)
அருந்ததி (பிறப்பு பத்மா; 3, மார்ச், 1994), என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். குறிப்பாக இவர் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் தோன்றியுள்ளார். அருந்ததி தமிழ்த் திரைப்படத்துறையில் எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்த வெளுத்து கட்டு (2013) படத்தின் வழியாக அறிமுகமானார், இவருக்கு அருந்ததி என்ற திரைப் பெயரை எஸ். ஏ. சந்திரசேகர் கொடுத்தார். அதன் பிறகு போடிநாயக்கனூர் கணேசன் (2011), சுண்டாட்டம் (2014, அக்ரஜா (2014), நேற்று இன்று (2014), நாய்கள் ஜாக்கிரதை (2014), தொட்டால் தொடரும் (2015), அர்த்தநாரி (2016), காலா (2018) உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் .
அருந்ததி | |
---|---|
பிறப்பு | பத்மா 3 மார்ச் 1994 இந்திய ஒன்றியம், கருநாடகம், பெங்களூர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | பாபு கம்போஸ்ட் பி.யூ கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013 தற்போது வரை |
2014 அருந்ததி கன்னட படமான அக்ரஜா என்ற படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தர்ஷனுடன் நடித்தார். மேலும் சிபி சத்யராஜுக்கு ஜோடியாக நகைச்சுவை-பரபரப்பூட்டும் படமான நாய்கள் ஜாக்கிரதை (2014) திரைப்படத்துக்குப் பிறகு தமன் குமார் உடன் தமிழ் காதல் பரபரப்பூட்டும் திரைப்படமான தொட்டால் தொடரும் படத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டில் இவர் காலாவில் நடித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅருந்ததி இந்திய ஒன்றியம், கர்நாடகத்தின் பெங்களூருவில் வெங்கடசாமி, கீதா இணையருக்கு பிறந்தார். இவருக்கு யோகேஷ் என்ற தம்பி உள்ளார். பெங்களூரில் உள்ள பாபு கம்போஸ்ட் பி.யூ கல்லூரியில் தனது பி.யு.சி படிப்பை முடித்தார். பின்னர் பெங்களூரில் விமான பணிப் பெணுக்கான பயிற்சி வகுப்பில் இணைந்தார்.[சான்று தேவை]
தொழில்
தொகுமாணவியாக இருந்த இவரை இயக்குநரும் தயாரிப்பாளருமான எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு கோவிலில் கண்டு இவரை அணுகி, வெளுத்துக் கட்டு என்ற தனது படத்தில் இவருக்கு ஒரு முக்கியப் பாத்திரத்தை வழங்கினார். இவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டியிருந்தாலும், படமானது வணிக ரீதியாக சராசரி வசூலையே ஈட்டியது.
எஸ். ஏ. சந்திரசேகர் இவருக்கு அருந்ததி என்ற திரைப் பெயரைக் கொடுத்தார், அதை அப்போது தமிழ் திரையுலகம் ஏற்றுக்கொண்டது. இவர் தனது பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக போடிநாயக்கனுர் கணேசன் (2011) மற்றும் இஃப்ரானுக்கு ஜோடியாக சுண்டாட்டம் (2013) போன்ற படங்களில் நடிப்பதற்கு முன்பு சில படங்களை இவர் நிராகரித்தார். 2014 ஆம் ஆண்டு நேற்று இன்று படத்தில் பாலியல் தொழிலாளியாக மாறுவேடமிட்ட ஒரு காவல் அதிகாரியான ஒரு சவாலான பாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெரவில்லை என்றாலும், இந்த படத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டார்.
பின்னர் சிபி சத்யராஜுக்கு ஜோடியாக நகைச்சுவை-பரபரப்பூட்டும் திரைப்படமான நாய்கள் ஜாக்கிரதை (2014) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் இவர் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார் பின்னர் தமன் குமார் ஜோடியாக காதல் பரபரப்பூட்டும் திரைப்படமான தொட்டால் தொடரும் (2015) படத்தில் தோன்றினார். 2016 ஆம் ஆண்டில், வணிக ரீதியாக பெரிய தோல்வியைத் தழுவிய படமான அர்த்தநாரி என்ற அதிரடி படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் 2018 இல் காலா படத்தில் இவரது நடிப்பால் கவனிக்கப்பட்டார். தற்போது தயாரிப்பில் உள்ள முகாம் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படவியல்
தொகு- குறிப்பில் ஏதும் குறிப்பிட்டடாத படங்கள், எல்லாம் தமிழ் ஆகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2009 | வேடப்பன் | தீபிகா | |
2010 | வெளுத்து கட்டு | அருக்காணி | |
2011 | போடிநாயக்கனூர் கணேசன் | சரஸ்வதி | |
2013 | ஆந்தர்யா | அப்சரா | கன்னட படம் |
2013 | சுண்டாட்டம் | கலைவானி | |
2014 | நேற்று இன்று | அகிலா | |
2014 | நாய்கள் ஜாக்கிரதை | ரேணுகா | |
2015 | தொட்டால் தொடரும் | மது | |
2016 | அர்த்தநாரி | சத்யா | |
2018 | காலா | காலாவின் மகள் | |
2019 | நம் வீட்டு பிள்ளை | பாரியின் மனைவி | |
2021 | புதிய முகம் | படப்பிடிப்பு |
தொலைக்காட்சி
தொகு2017- கிராமத்தில் ஒரு நாள் (சன் தொலைக் காட்சி)
குறிப்புகள்
தொகுhttps://www.thehindu.com/features/cinema/Air-hostess-to-actress-Arundhati/article14492707.ece